settings icon
share icon

பழைய ஏற்பாடு கண்ணோட்டம்

பழைய ஏற்பாடு ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: பெண்டடுக் / மோசேயின் ஆகமம் (ஆதியாகமம் முதல் உபாகமம் வரையுள்ள முதல் ஐந்து புத்தகங்கள்), வரலாற்றுப் புத்தகங்கள் (யோசுவாவின் புத்தகம் முதல் எஸ்தர் புத்தகம் வரையிலுள்ள பன்னிரெண்டு புத்தகங்கள்), கவிதை புத்தகங்கள் (யோபுவின் புத்தகம் முதல் சாலமோனின் உன்னதபாட்டு வரையிலுள்ள ஐந்து புத்தகங்கள்), பெரிய தீர்க்கதரிசிகள் (ஏசாயாவின் புத்தகம் முதல் தானியேலின் புத்தகம் வரையிலுள்ள ஐந்து புத்தகங்கள்) மற்றும் சிறிய தீர்க்கதரிசிகள் (ஓசியாவின் புத்தகம் முதல் மல்கியாவின் புத்தகம் வரையிலுள்ள பன்னிரண்டு புத்தகங்கள்). பழைய ஏற்பாடு சுமார் கி.மு. 1400-லிருந்து கி.மு. 400 வரையிலுள்ள காலங்களில் முதன்மையாக மொழியாக எபிரேய மொழியைக்கொண்டு எழுதப்பட்டது, சில சிறு பகுதிகள் மட்டும் அராமிய மொழியில் எழுதப்பட்டுள்ளன (அராமிய மொழி அடிப்படையில் எபிரேய மொழியிலிருந்து சில மாறுபாடுகளைக் கொண்டுள்ளது).

பழைய ஏற்பாடு முதன்மையாக தேவனுக்கும் இஸ்ரவேல் தேசத்திற்கும் இடையிலான உறவைப் பற்றியதாகும். பெண்டடுக் (மோசேயின் ஆகமங்கள்) இஸ்ரவேல் மற்றும் தேவன் இஸ்ரவேலுடன் ஒரு உடன்படிக்கை உறவை ஏற்படுத்துவதைப் பற்றியதாகும். வரலாற்றுப் புத்தகங்கள் இஸ்ரவேலின் வரலாறு, அதன் வெற்றிகள் மற்றும் வெற்றிகளுடன் அதன் தோல்விகளையும் பதிவு செய்கின்றன. இஸ்ரவேலுடனான தேவனுடைய உறவையும், அவரை ஆராதிப்பதற்கும் அவருக்குக் கீழ்ப்படிவதற்கும் இஸ்ரவேலுக்கான அவரது ஆழமான நெருக்கத்தையும் உறவையும் குறித்து கவிதை புத்தகங்கள் நமக்கு இன்னும் நெருக்கமான பார்வையைத் தருகின்றன. தீர்க்கதரிசன புத்தகங்கள் இஸ்ரவேலின் விக்கிரகாராதனை மற்றும் அவருக்கு விரோதமான அவர்களுடைய துரோகத்திலிருந்து மனந்திரும்பவும் கீழ்ப்படிதல் மற்றும் ஆவிக்குரிய விசுவாசத்தின் உறவுக்குத் திரும்பவும் தேவனுடைய அழைப்புகளைக் கொண்டுள்ளன.

ஒருவேளை ஒரு சிறந்த தலைப்பு என்று பார்ப்போமானால், முதல் ஏற்பாடு என்பது மிகவும் சரியானதாக இருக்கும். "பழையது" என்ற சொல் "காலாவதியானது" அல்லது "பொருந்தாது" என்கிற கருத்தை அளிக்கிறது. மேலும் அது சத்தியத்திலிருந்து இருக்க முடியாது என்றாகிறது. பழைய ஏற்பாட்டின் ஒரு கண்ணோட்ட ஆய்வு என்பது ஒரு பயனுள்ள மற்றும் ஆவிக்குரிய நிலையை வளப்படுத்தும் முயற்சியாகும். பழைய ஏற்பாட்டின் பல்வேறு புத்தகங்களின் சுருக்கங்களுக்கான இணைப்புகள் கீழே உள்ளன. கிறிஸ்துவுடனான உங்கள் நடைப்பயணத்தில் எங்களது பழைய ஏற்பாட்டு கண்ணோட்ட ஆய்வு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

English



ஆதியாகமம் புத்தகம்

யாத்திராகமம் புத்தகம்

லேவியராகமம் புத்தகம்

எண்ணாகமம் புத்தகம்

உபாகமம் புத்தகம்

யோசுவாவின் புத்தகம்

நியாயாதிபதிகள் புத்தகம்

ரூத்தின் புத்தகம்

1 சாமுவேலின் புத்தகம்

2 சாமுவேலின் புத்தகம்

1 ராஜாக்களின் புத்தகம்

2 ராஜாக்களின் புத்தகம்

1 நாளாகமம் புத்தகம்

2 நாளாகமம் புத்தகம்

எஸ்றாவின் புத்தகம்

நெகேமியாவின் புத்தகம்

எஸ்தரின் புத்தகம்

யோபின் புத்தகம்

சங்கீதப் புத்தகம்

நீதிமொழிகள் புத்தகம்

பிரசங்கி புத்தகம்

உன்னதபாட்டு

ஏசாயாவின் புத்தகம்

எரேமியாவின் புத்தகம்

புலம்பல் புத்தகம்

எசேக்கியேல் புத்தகம்

தானியேல் புத்தகம்

ஓசியா புத்தகம்

யோவேலின் புத்தகம்

ஆமோஸ் புத்தகம்

ஒபதியாவின் புத்தகம்

யோனாவின் புத்தகம்

மீகாவின் புத்தகம்

நாகூம் புத்தகம்

ஆபகூக் புத்தகம்

செப்பனியா புத்தகம்

ஆகாய் புத்தகம்

சகரியா புத்தகம்

மல்கியா புத்தகம்



வேதாகமம் கண்ணோட்டம்



முகப்பு பக்கம்

பழைய ஏற்பாடு கண்ணோட்டம்
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries