settings icon
share icon

2 சாமுவேலின் புத்தகம்

எழுத்தாளர்: 2 சாமுவேல் புத்தகம் அதன் எழுத்தாளர் யார் என்பதைக்குறித்து குறிப்பாக அடையாளம் காண்பிக்கவில்லை. சாமுவேல் தீர்க்கதரிசி 1 சாமுவேல் புத்தகத்தில் இறந்துவிடுவதால், அது அவராக இருக்க முடியாது. சாத்தியமான எழுத்தாளர்களில் தீர்க்கதரிசிகளாகிய நாத்தான் மற்றும் காத் ஆகியோர் அடங்குவர் (1 நாளாகமம் 29:29-ஐக் காண்க).

எழுதப்பட்ட காலம்: முதலில், 1 மற்றும் 2 சாமுவேலின் புத்தகங்கள் ஒரே புத்தகமாக இருந்தன. செப்டுவஜின்ட்டின் மொழிபெயர்ப்பாளர்கள் அவைகளைப் இரண்டாகப் பிரித்தனர், அன்றிலிருந்து அந்த பிரிவுகளை நாம் தக்க வைத்துக் கொண்டோம். 1 சாமுவேலின் நிகழ்வுகள் சுமார் 100 ஆண்டுகள், அதாவது கி.மு. 1100 முதல் கி.மு. 1000 வரையிலுள்ள காலத்தில் சம்பவித்தவைகளை உள்ளடக்கியுள்ளன. 2 சாமுவேலின் நிகழ்வுகள் இன்னும் 40 ஆண்டுகள் நிகழ்வுகளை உள்ளடக்கியது. எழுதப்பட்ட காலம் கி.மு. 960 ஆம் ஆண்டிற்கு பிறகு.

எழுதப்பட்டதன் நோக்கம்: 2 சாமுவேல் புத்தகம் தாவீது ராஜாவினுடைய ராஜ்யபாரம் குறித்த பதிவாகும். இந்த புத்தகம் தாவீதோடு தேவன் செய்த உடன்படிக்கையை அதன் வரலாற்று சூழலில் வைக்கிறது.

திறவுகோல் வசனங்கள்: “உன் வீடும், உன் ராஜ்யமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக ஸ்திரப்பட்டிருக்கும்; உன் ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும் என்கிறார் என்று சொல்லச்சொன்னார்” (2 சாமுவேல் 7:16).

“ராஜா தன் முகத்தை மூடிக்கொண்டு, மகா சத்தமாய்: என் மகனாகிய அப்சலோமே, அப்சலோமாகிய என் மகனே, என் மகனே என்று அலறிக்கொண்டிருந்தான்” (2 சாமுவேல் 19:4).

“கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகருமானவர். தேவன் நான் நம்பியிருக்கிற துருக்கமும், என் கேடகமும், என் இரட்சணியக்கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் இரட்சகருமானவர்; என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி இரட்சிக்கிறவர் அவரே. ஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கிஇ ரட்சிக்கப்படுவேன்” (2 சாமுவேல் 22:2-4).

சுருக்கமான திரட்டு: 2 சாமுவேலின் புத்தகத்தை இரண்டு முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கலாம் - தாவீதின் வெற்றிகள் (1-10 வரையிலுள்ள அதிகாரங்கள்) மற்றும் தாவீதின் பாடுகள் (11-20 வரையிலுள்ள அதிகாரங்கள்). புத்தகத்தின் கடைசி பகுதி (21-24 வரையிலுள்ள அதிகாரங்கள்) என்பது காலவரிசை அல்லாத பின் இணைப்பு ஆகும், இது தாவீதின் ராஜ்யபாரத்தின் கூடுதல் விவரங்களைக் கொண்டுள்ளது.

சவுல் மற்றும் அவரது குமாரர்களின் மரணம் பற்றிய செய்தியை தாவீது பெறுவதுடன் இந்த புத்தகம் தொடங்குகிறது. அவர் துக்க நேரத்தை அறிவிக்கிறார். விரைவில், தாவீது யூதாவின்மீது ராஜாவாக முடிசூட்டப்படுகிறார், அதே சமயம் சவுலின் எஞ்சிய குமாரர்களில் ஒருவரான இஸ்போசேத் இஸ்ரவேலின் ராஜாவாக முடிசூட்டப்படுகிறான் (அதிகாரம் 2). ஒரு உள்நாட்டு யுத்தம் தொடர்கிறது, ஆனால் இஸ்போசேத் கொலை செய்யப்படுகிறார், இஸ்ரவேலர்கள் தாவீதை அவர்கள் மீது ஆட்சி செய்யும்படி கேட்கிறார்கள் (4-5 அதிகாரங்கள்).

தாவீது நாட்டின் தலைநகரை எபிரோனிலிருந்து எருசலேமுக்கு மாற்றி பின்னர் உடன்படிக்கைப் பெட்டியையும் கொண்டுவருகிறார் (5-6 அதிகாரங்கள்). எருசலேமில் ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்கான டேவிட் திட்டம் தேவனால் தடை செய்யப்படுகிறது, பின்னர் தாவீதுக்கு பின்வரும் விஷயங்களை தேவன் உறுதியளிக்கிறார்: 1) தாவீதுக்குப் பிறகு அவனது சின்காசனன்த்தில் அமர்ந்து ஆட்சி செய்ய ஒரு குமாரன் இருப்பான்; 2) தாவீதின் குமாரன் தேவாலயத்தைக் கட்டுவான்; 3) தாவீதின் வம்சத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட சிங்காசனம் என்றென்றும் நிறுவப்படும்; மற்றும் 4) தாவீதின் வீட்டிலிருந்து தேவன் ஒருபோதும் இரக்கத்தை எடுக்க மாட்டார் (2 சாமுவேல் 7:4-16).

தாவீது இஸ்ரவேலைச் சுற்றியுள்ள பல எதிரி நாடுகளை வென்றெடுக்க வழிநடத்துகிறார். யோனாத்தானின் ஊனமுற்ற குமாரனான மேவிபோசேத்தை எடுத்துக்கொள்வதன் மூலம் யோனாத்தானின் குடும்பத்தினரிடம் அவர் இரக்கம் காட்டுகிறார் (8-10 வரையிலுள்ள அதிகாரங்கள்).

பின்னர் தாவீது வீழ்ச்சியடைகிறார். அவர் பத்சேபாள் என்ற அழகான பெண்ணுக்காக ஆசைப்படுகிறார், அவளுடன் விபச்சார பாவம் செய்கிறார், பின்னர் அவரது கணவனாகிய உரியாவை கொலை செய்கிறார் (அதிகாரம் 11). நாத்தான் தீர்க்கதரிசி தாவீதை தனது பாவத்தால் எதிர்கொள்ளும்போது மற்றும் கண்டித்து உணர்த்துபோது, தாவீது அதை ஒப்புக்கொள்கிறான், தேவன் பிறகு அவனுக்கு தயவுகாண்பித்து அவனை மன்னிகிறார். ஆயினும், கர்த்தர் தாவீதிடம் அவனது சொந்த வீட்டிலிருந்தே பிரச்சினைகள் எழும் என்று கூறுகிறார்.

தாவீதின் முதற்பேரானவனாகிய அம்னோன் தனது பகுதி-சகோதரியான தாமாரை கற்பழிக்கும்போது சிக்கல் ஏற்படுகிறது. பதிலடி கொடுக்கும் விதமாக, தாமாரின் சகோதரர் அப்சலோம் அம்னோனைக் கொலை செய்கிறார். அப்சலோம் தனது தந்தையின் கோபத்தை எதிர்கொள்வதை விட எருசலேமை விட்டு வெளியேறுகிறார். பின்னர், அப்சலோம் தாவீதுக்கு எதிராக ஒரு கிளர்ச்சியை நடத்துகிறார், மேலும் தாவீதின் முன்னாள் கூட்டாளிகள் சிலர் கிளர்ச்சியில் சேருகிறார்கள் (15-16 வரையிலுள்ள அதிகாரங்கள்). தாவீது எருசலேமிலிருந்து வெளியேற்றப்படுகிறான், அப்சலோம் தன்னை ஒரு குறுகிய காலத்திற்கு ராஜாவாக அமைத்துக் கொள்கிறான். எவ்வாறாயினும், தந்தையின் ஸ்தானத்தை அபகரித்த துராக்கிரமி தூக்கி எறியப்படுகிறார், மேலும் தாவீதின் விருப்பத்திற்கு மாறாக அப்சலோம் கொல்லப்படுகிறான். மடிந்து வீழ்ந்த தன் மகனுக்கு தாவீது துக்கம் அனுஷ்டிக்கிறார்.

அமைதியின்மை பற்றிய ஒரு பொதுவான உணர்வு தாவீது ஆட்சியின் எஞ்சிய பகுதியைப் பாதிக்கிறது. இஸ்ரவேல் புருஷர்கள் யூதாவிலிருந்து பிரிந்து செல்வதாக அச்சுறுத்துகிறார்கள், இப்பொழுது தாவீது மற்றொரு எழுச்சியை அடக்க வேண்டும் (அதிகாரம் 20).

இந்த புத்தகத்தின் பிற்சேர்க்கையில் தேசத்தில் மூன்று ஆண்டுகள் பஞ்சம் (அதிகாரம் 21), தாவீதின் பாட்டு (அதிகாரம் 22), தாவீதின் துணிச்சலான போர்வீரர்களின் காரியங்கள் பற்றிய பதிவு (அதிகாரம் 23), மற்றும் தாவீதின் பாவமான மக்கள் தொகை கணக்கெடுப்பு காரியம் மற்றும் அடுத்தடுத்த வாதிகள் பற்றிய தகவல்கள் அடங்கும் (அதிகாரம் 24).

முன்னிழல்கள்: கர்த்தராகிய இயேசு கிறிஸ்து முதன்மையாக 2 சாமுவேலின் இரண்டு பகுதிகளில் காணப்படுகிறார். முதலாவதாக, தாவீதின் உடன்படிக்கை 2 சாமுவேல் 7:16-ல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது: “உன் வீடும், உன் ராஜ்யமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக ஸ்திரப்பட்டிருக்கும்; உன் ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும்” மற்றும் லூக்கா 1:3-33-ல் இயேசுவின் பிறப்பை அறிவிக்க மரியாளிடத்தில் தோன்றிய தேவதூதனின் வார்த்தைகளில் மீண்டும் வலியுறுத்தினார்: “அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்." கிறிஸ்து தாவீதின் உடன்படிக்கையை நிறைவேற்றுகிறவராக இருக்கிறார்; தாவீதின் வரிசையில் அவர் தேவனுடைய குமாரன், அவர் என்றென்றும் ஆட்சி செய்வார்.

இரண்டாவதாக, இயேசு தமது வாழ்க்கையின் முடிவில் தாவீதின் பாடலில் காணப்படுகிறார் (2 சாமுவேல் 22:2-51). அவர் தனது பாறை, கோட்டை மற்றும் விடுவிப்பவர், தனது அடைக்கலம் மற்றும் மீட்பர் என்று பாடுகிறார். இயேசு நம்முடைய பாறை (1 கொரிந்தியர் 10:4; 1 பேதுரு 2:7-9), இஸ்ரவேலை மீட்பவர் (ரோமர் 11:25-27), நாம் கோட்டையை “நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார்” (எபிரெயர் 6:18), நம்முடைய ஒரே இரட்சகர் (லூக்கா 2:11; 2 தீமோத்தேயு 1:10).

நடைமுறை பயன்பாடு: யார் வேண்டுமானாலும் விழலாம். தேவனைப் பின்பற்ற உண்மையிலேயே விரும்பிய, தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட தாவீதைப் போன்ற ஒரு மனிதர் கூட சோதனையால் பாதிக்கப்படுகிறார். பத்சேபாளுடன் தாவீது செய்த பாவம் நம் இருதயத்தையும், கண்களையும், மனதையும் பாதுகாக்க நம் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நம்முடைய ஆவிக்குரிய முதிர்ச்சியைப் பற்றிய பெருமை மற்றும் நம்முடைய சொந்த பலத்தில் சோதனையை சந்திக்கும் திறன் ஆகியவை வீழ்ச்சிக்கான முதல் படியாகும் (1 கொரிந்தியர் 10:12).

நாம் உண்மையிலேயே மனந்திரும்பும்போது மிகக் கொடூரமான பாவங்களைக் கூட மன்னிக்க தேவன் கிருபை அருளுவார். இருப்பினும், பாவத்தால் ஏற்படும் காயத்தை குணப்படுத்துவது எப்போதும் அதன் வடுவை அழிக்காது. பாவம் இயற்கையான விளைவுகளை ஏற்படுத்துகிறது, அவர் மன்னிக்கப்பட்ட பிறகும், தாவீது விதைத்ததை அவர் அறுவடை செய்தார். வேறொரு புருஷனின் மனைவியுடனான சட்டவிரோத சயனித்ததிலிருந்து அவரது மகன் அவரிடமிருந்து பறிக்கப்பட்டான் (2 சாமுவேல் 12: 14-24) மற்றும் தாவீது தனது பரலோகத் தகப்பனுடனான அன்பான உறவில் முறிந்த துன்பத்தை அனுபவித்தார் (சங்கீதம் 32 மற்றும் 51). பின்னர் மன்னிப்பைத் தேடுவதை விட, முதன் முதலில் அந்த பாவத்தை செய்யாமல் தவிர்ப்பது எவ்வளவு நல்லதாக இருக்கிறது!

English


முகப்பு பக்கம்
2 சாமுவேலின் புத்தகம்
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries