settings icon
share icon

நாகூம் புத்தகம்

எழுத்தாளர்: நாகூம் புத்தகத்தின் எழுத்தாளர் தன்னை எல்கோசானாகிய நாகூம் (நாகூம் என்றால் எபிரேய மொழியில் “தேற்றுகிறவர்” அல்லது “ஆறுதலுள்ளவர்” என்று அர்த்தமாகும்) என்று அடையாளப்படுத்துகிறார் (1:1). எந்தவொரு உறுதியான ஆதாரமும் இல்லை என்றாலும் அந்த நகரம் எங்கிருந்தது என்பதற்கு பல கோட்பாடுகள் உள்ளன. அத்தகைய ஒரு கோட்பாடு என்னவென்றால், இது கலிலேயா கடலின் அருகாமையில் இருந்ததும் பின்னர் கப்பர்நகூம் என்று அழைக்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள் (அதாவது "நாகூம் கிராமம்" என்று பொருள்படும்).

எழுதப்பட்ட காலம்: நாகூமைப் பற்றி நமக்குத் தெரிந்த குறைந்த அளவிலான தகவல்களைக் கொண்டு நாம் செய்யக்கூடியது என்னவென்றால், நாகூம் புத்தகம் கி.மு. 663 முதல் கி.மு. 612 வரையிலுள்ள கால இடைவெளியில் எழுதப்பட்ட கால அளவைக் குறிப்பதாகும். இந்த காலத்தை தீர்மானிக்க உதவும் இரண்டு நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. முதல் நாகூம் எகிப்தில் உள்ள தெபேஸ் (நோ அமோன்) கடந்த காலங்களில் அசீரியர்களிடம் (கி.மு. 663) விழுந்ததைக் குறிப்பிடுகிறார், எனவே அது ஏற்கனவே நடந்த சம்பவமாகும். இரண்டாவதாக, நாகூமின் தீர்க்கதரிசனங்களின் எஞ்சியவை கி.மு. 612 ல் நிறைவேறியது.

எழுதப்பட்டதன் நோக்கம்: நாகூம் இந்த புத்தகத்தை நினிவே மக்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவோ அல்லது “மனந்திரும்புதலுக்கான அழைப்பாகவோ” எழுதவில்லை. அவர்கள் ஏற்கனவே துன்மார்க்கமான வழிகளில் தொடர்ந்தால் என்ன நடக்கும் என்ற வாக்குறுதியுடன் 150 ஆண்டுகளுக்கு முன்பே யோனா தீர்க்கதரிசியை தேவன் அவர்களிடத்தில் அனுப்பியிருந்தார். அந்த நேரத்தில் மக்கள் மனந்திரும்பியிருந்தார்கள், ஆனால் இப்போது முன்பு இருந்ததை விட இன்னும் மோசமாக வாழ்ந்தார்கள். அசீரியர்கள் தங்கள் வெற்றிகளில் முற்றிலும் மிருகத்தனமாகிவிட்டார்கள் (பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை மரங்களில் தொங்கவிட்டு, மற்ற கொடுமைகளுக்கிடையில் தங்கள் கூடாரங்களின் சுவர்களில் தோலை வைப்பார்கள்). தேவன் நியாயத்தீர்ப்பை அறிவித்ததாலும், அசீரியர்கள் தங்களுக்குத் தேவையானதைப் பெறுவார்கள் என்பதாலும் நாகூம் யூத ஜனத்தை விரக்தியடைய வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

திறவுகொல் வசனங்கள்: நாகூம் 1:7, “கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.”

நாகூம் 1:14அ, “உன்னைக்குறித்துக் கர்த்தர் கட்டளைகொடுத்திருக்கிறார்; இனி உன் பேருக்கு வித்துவிதைக்கப்படுவதில்லை.”

நாகூம் 1:15அ, “இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது.” (ஏசாயா 52:7 மற்றும் ரோமர் 10:15 ஆகிய வசனங்களை காண்க)

நாகூம் 2:13அ, “இப்போதும் நான் உன்மேல் இருக்கிற அவன் நுகத்தை முறித்து உன் கட்டுகளை அறுப்பேன்.”

நாகூம் 3:19, “உன் நொறுங்குதலுக்குப் பரிகாரம் இல்லை; உன் காயம் கொடியது; உன் செய்தியைக் கேட்பவர் யாவரும் உன்பேரில் கைகொட்டுவார்கள்; உன் பொல்லாப்பு எந்நேரமும் யார்பேரிலேதான் பாயாமற்போயிற்று?”

சுருக்கமான திரட்டு: நினிவே பட்டணம் ஒருமுறை யோனாவின் பிரசங்கத்திற்கு செவிகொடுத்து, கர்த்தராகிய யெகோவா தேவனை சேவிப்பதற்காக தீய வழிகளிலிருந்து விலகியது. ஆனால் 150 ஆண்டுகளுக்குப் பிறகு, நினிவே உருவ வழிபாடு, வன்முறை மற்றும் ஆணவத்திற்குத் திரும்பினது (நாகூம் 3:1-4). தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளில் ஒருவரை நினிவேவுக்கு அனுப்புகிறார், நகரத்தின் அழிவில் தீர்ப்பைப் பிரசங்கித்து அவர்களை மனந்திரும்பும்படி அறிவுறுத்துகிறார். துரதிர்ஷ்டவசமாக, நினிவே மக்கள் நாகூமின் எச்சரிக்கையை கவனிக்கவில்லை, இறுதியில் நகரம் பாபிலோனின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.

முன்னிழல்கள்: மேசியா மற்றும் அவருடைய ஊழியத்தைப் பற்றியும், அவருடைய காலத்தில் கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களைப் பற்றியும் பவுல் ரோமர் 10:15-ல் நாகூம் 1:15 ஐ மீண்டும் மேற்கோள்காட்டி கூறுகிறார். நற்செய்தியை அறிவிக்கிற எந்தவொரு ஊழியக்காரராக இருந்தாலும் அவர்கள் "சமாதானத்தின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதே" அவர்களின் வேலையாக இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ளலாம். தேவன் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே பாவிகளுடன் சமாதானம் ஏற்படுத்தி, “எல்லா புத்திக்கும் மேலான” சமாதானத்தைத் தம் மக்களுக்கு அளித்துள்ளார் (பிலிப்பியர் 4:7). சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவால் ஒப்புரவு, நீதி, மன்னிப்பு, ஜீவன் மற்றும் நித்திய இரட்சிப்பு போன்ற "நல்ல விஷயங்களைப் பற்றிய நற்செய்தியைக் கொண்டுவருவதும்" ஒரு போதகரின் பணியாகும். அத்தகைய நற்செய்தியைப் பிரசங்கிப்பதும், இதுபோன்ற செய்திகளைக் கொண்டுவருவதும் அவர்களின் கால்களை மிகவும் அழகாக ஆக்குகிறது. இங்குள்ள உருவாக சித்திரம் மற்றவர்களிடம் ஓடி, நற்செய்தியை அறிவிக்க ஆர்வமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றதை காண்பிக்கிறது.

நடைமுறை பயன்பாடு: தேவன் பொறுமையாகவும் கோபத்திற்கு நீடிய பொறுமையுள்ளவராகவும் இருக்கிறார். ஒவ்வொரு தேசமும் அவரை தங்கள் தேவன் என்று அறிவிக்க அவகாசம் தருகிறார். ஆனால் அவர் கேலி செய்யப்பட அனுமதிப்பதில்லை. எந்த நேரத்திலும் ஒரு தேசம் தன்னுடைய சொந்த நோக்கங்களை நிறைவேற்ற அவரிடமிருந்து விலகினால், அவர் நியாயத்தீர்ப்போடு வருகிறார். ஏறக்குறைய 220 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா வேதாகமத்தில் காணப்படும் கொள்கைகளால் வழிநடத்தப்பட்ட ஒரு தேசமாக உருவாக்கப்பட்டது. ஆனால் கடந்த 50 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றம் அடைந்துள்ளது, நாம் தினமும் எதிர் திசையில் திரும்பிப் போய்க் கொண்டிருக்கிறோம். கிறிஸ்தவர்களாகிய நாம் வேதாகமக் கொள்கைகளுக்காகவும், சத்தியத்திற்கான வேதப்பூர்வ உண்மைகளுக்காகவும் நிற்பது நமது கடமையாகும், இது நம் நாட்டின் ஒரே நம்பிக்கையாகும்.

Englishமுகப்பு பக்கம்

நாகூம் புத்தகம்
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries