ஆமோஸ் புத்தகம்


கேள்வி: ஆமோஸ் புத்தகம்

பதில்:
எழுத்தாளர்: ஆமோஸ் 1:1-வது வசனம், ஆமோஸ் புத்தகத்தின் எழுத்தாளரை ஆமோஸ் தீர்க்கதரிசி என்று அடையாளப்படுத்துகிறது.

எழுதப்பட்ட காலம்: ஆமோஸ் புத்தகம் கி.மு. 760 முதல் கி.மு. 753 வரையிலான காலக்கட்டத்தின் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

எழுதப்பட்டதன் நோக்கம்: ஆமோஸ் தீர்க்கதரிசி ஆடு மேய்க்கும் ஒரு மேய்ப்பன் மற்றும் தெக்கோவா என்ற யூத கிராமத்திலிருந்து பழம் பொருக்குபராக இருந்தார், அவருக்கு கல்வி அல்லது ஆசாரியப் பின்னணி எதுவும் இல்லாதபோதிலும் தேவன் அவரை அழைத்தார். ஆமோஸின் ஊழியம் வடக்கே தனது அண்டை நாடான இஸ்ரேலுக்கு செய்யும்படியாக அனுப்பப்பட்டது. தேசம் செய்த பாவங்கள் காரணமாக தேசத்திற்கு வரவிருக்கும் அழிவு மற்றும் சிறைப்பிடிப்பு பற்றிய செய்திகள் பெரும்பாலும் செல்வாக்கற்றவை, கவனிக்கப்படாதவைகளாகவே இருந்தன, ஏனென்றால் சாலமோனின் காலம் இஸ்ரவேலில் மிகவும் சிறப்பாக இருந்ததால் என்பதற்காக அல்ல என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும். ஆமோஸின் ஊழியம், இரண்டாம் யெரொபெயாம் இஸ்ரவேலையும், உசியா யூதாவை ஆளுகிறபோது உண்டாயிருந்தது.

திறவுகோல் வசனங்கள்: ஆமோஸ் 2:4, “மேலும்: யூதாவின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவர்கள் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் கர்த்தருடைய வேதத்தை வெறுத்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், தங்கள் பிதாக்கள் பின்பற்றின பொய்களினால் மோசம்போனார்களே.”

ஆமோஸ் 3:7, “கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.”

ஆமோஸ் 9:14, “என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்; அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளைப் புசிப்பார்கள்.”

சுருக்கமான திரட்டு: இஸ்ரேலின் வெளிப்புற செழிப்பு மற்றும் வல்லமையின் அடியில், உட்புற நிலையில் தேசம் முக்கியமாக ஊழல் நிறைந்ததாக இருப்பதை ஆமோஸில் காணலாம். ஆமோஸ் ஜனங்களைத் தண்டிக்கும் பாவங்கள் விரிவானவை: தேவனுடைய வார்த்தையைப் புறக்கணித்தல், உருவ வழிபாடு, புறமத வழிபாடு, பேராசை, சிதைந்த தலைமை மற்றும் ஏழைகளின் அடக்குமுறை. ஆமோஸ் தீர்க்கதரிசி சுற்றியுள்ள எல்லா நாடுகளிலும், பின்னர் தனது சொந்த தேசமான யூதாவின் மீதும் ஒரு நியாயத்தீர்ப்பை உச்சரிப்பதன் மூலம் தனது பணியைத் தொடங்குகிறார், கடைசியில் இஸ்ரவேலுக்கு மிகக் கடுமையான நியாயத்தீர்ப்பு வழங்கப்படுகிறது. தேவனிடமிருந்து அவர் பெற்ற தரிசனங்கள் அதே உறுதியான செய்தியையே வெளிப்படுத்துகின்றன: நியாயத்தீர்ப்பு சமீபமாக இருக்கிறது. எதிர்காலத்தில் மீதமுள்ளவர்களை/மீதியானவர்களை மீட்டெடுப்பதாக ஆமோஸுக்கு தேவன் அளித்த வாக்குறுதியுடன் புத்தகம் முடிகிறது.

முன்னிழல்கள்: ஆமோஸ் புத்தகம் இனிவரவிருக்கிற எதிர்காலத்திற்கான ஒரு மகத்தான வாக்குறுதியுடன் முடிவடைகிறது. “அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றார்” (9:15). ஆபிரகாமுக்கு தேசத்தை வாக்குப்பண்ணின உறுதிமொழியின் இறுதி நிறைவேற்றம் (ஆதி. 12:7; 15:7; 17:8) கிறிஸ்துவின் பூமியின் ஆயிரமாண்டு ஆட்சியின் போது நிகழும் (யோவேல் 2:26, 27-ஐப் பார்க்கவும்). வெளிப்படுத்துதல் 20-ஆம் அதிகாரத்தில், பூமியில் கிறிஸ்து ஸ்தாபிக்கப்போகிற அவருடைய ஆயிரம் ஆண்டு ஆட்சியை விவரிக்கிறது, இது இரட்சகரின் பரிபூரணமான அரசாங்கத்தின் கீழ் இருக்கிற சமாதனம் மற்றும் மகிழ்ச்சியின் காலம் ஆகும். அந்த நேரத்தில், விசுவாசமுள்ள இஸ்ரவேலும் புறஜாதிய கிறிஸ்தவர்களும் திருச்சபையில் ஒன்றிணைந்து கிறிஸ்துவோடு வாழ்ந்து ஆட்சி செய்வார்கள்.

நடைமுறை பயன்பாடு: சில நேரங்களில் நாம் ஒரு "வெறும்-ஒரு" என்று நினைக்கிறோம்! அதாவது நாம் வெறுமனே ஒரு விற்பனையாளர், விவசாயி அல்லது இல்லத்தரசி என்று நினைக்கிறோம். ஆமோஸும் ஒரு "வெறும்-ஒரு" என்று கருதப்படுகிறார். அவர் ஒரு தீர்க்கதரிசி அல்லது ஆசாரியர் அல்லது பிரபலமான ஒருவரின் மகன் அல்ல. அவர் ஒரு சாதாரண ஆடு மேய்க்கும் மேய்ப்பன், யூதாவில் ஒரு சிறு தொழிலாளி. யார் செவிகொடுத்து அவரைக் கேட்பார்கள்? ஆனால் சாக்கு போக்கு சொல்லுவதற்குப் பதிலாக, ஆமோஸ் பூரணமாக கீழ்ப்படிந்து மாற்றத்திற்கான தேவனுடைய வல்லமையுள்ள குரலாக மாறினார்.

மேய்ப்பர்கள், தச்சர்கள், மீனவர்கள் போன்ற அனைவரையும் தேவன் வேதாகமத்தின் மூலம் பயன்படுத்தியுள்ளார். இந்த வாழ்க்கையில் நீங்கள் என்னவாக இருந்தாலும், தேவன் உங்களைப் பயன்படுத்தலாம். ஆமோஸ் மிகவும் அதிகமானவன் இல்லை. அவர் ஒரு "வெறும்-ஒரு" நபரே. தேவனுக்கு “வெறும்-ஒரு" வேலைக்காரன். தேவனுடைய "வெறும்-ஒரு" இருப்பது மெய்யாகவே நல்லது.

English


முகப்பு பக்கம்
ஆமோஸ் புத்தகம்