settings icon
share icon

சங்கீதப் புத்தகம்

எழுத்தாளர்: சங்கீதங்களை அறிமுகப்படுத்தும் சுருக்கமான விளக்கங்கள் ஏறக்குறைய 73 நிகழ்வுகளில் தாவீது எழுத்தாளராக பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த சங்கீதங்களில் பலவற்றில் தாவீதின் ஆளுமையும் அடையாளமும் தெளிவாக முத்திரையிடப்பட்டுள்ளன. தாவீது தனிப்பட்ட பல சங்கீதங்களை எழுதினார் என்பது தெளிவாகத் தெரிந்தாலும், அவர் நிச்சயமாக முழுத் தொகுப்பையும் எழுதியவர் அல்ல. சங்கீதங்களில் இரண்டு (72) மற்றும் (127) தாவீதின் குமாரனும் வாரிசுமான சாலமோனால் எழுதப்பட்டது. சங்கீதம் 90 மோசேயின் ஜெபம். 12 சங்கீதங்கள் அதாவது 50 மற்றும் 73—83 வரையிலுள்ள சங்கீதங்கள் மற்றொரு குழுவாகிய ஆசாபின் குடும்பத்தினரால் பாடப்பட்டதாகும். கோராவின் புத்திரர்கள் 11 சங்கீதங்களை எழுதினர் (42, 44-49, 84-85,87-88). 88-ஆம் சங்கீதம் ஹேமானும், 89வது சங்கீதம் எஸ்றாஹியரான ஏத்தானால் எழுதப்பட்டது. சாலமன் மற்றும் மோசேயைத் தவிர, இந்த கூடுதல் ஆசிரியர்கள் அனைவரும் ஆசாரியர்கள் அல்லது லேவியர்கள், தாவீதின் ஆட்சிக் காலத்தில் பரிசுத்த ஸ்தலத்தின் வழிபாட்டிற்கு இசையை வழங்குவதற்கு பொறுப்பானவர்கள் ஆகும். ஐம்பது சங்கீதங்கள் எந்தவொரு குறிப்பிட்ட நபரையும் எழுத்தாளராக குறிப்பிடாமல் இருக்கின்றன.

எழுதப்பட்ட காலம்: எழுத்தாளர் யார் என்கிற கேள்வியை கவனமாக ஆராய்ந்தோமானால், சங்கீதங்களால் உட்கொள்ளப்பட்ட விஷயங்கள் அவை பல நூற்றாண்டுகளின் காலப்பகுதியைக் கொண்டுள்ளன என்பதை வெளிப்படுத்துகின்றன. சேகரிப்பில் உள்ள மிகப் பழமையான சங்கீதம் அநேகமாக மோசேயின் ஜெபம் (90), இது கடவுளின் நித்தியத்துடன் ஒப்பிடும்போது மனிதனின் பலவீனத்தை பிரதிபலிக்கிறது. சமீபத்திய சங்கீதம் அநேகமாக (137), பாபிலோனியர்களால் எபிரேயர்கள் சிறைபிடிக்கப்பட்டுப் போன நாட்களில் தெளிவாக எழுதப்பட்ட புலம்பல் பாடல் ஆகும், சுமார் கி.மு. 586 முதல் கி.மு. 538.

150 தனிப்பட்ட சங்கீதங்கள் இஸ்ரேலின் வரலாற்றில் ஆயிரம் ஆண்டுகளில் பல்வேறு நபர்களால் எழுதப்பட்டன என்பது தெளிவாகிறது. சிறைப்பிடிப்பு சுமார் கி.மு. 537-ல் முடிவுக்கு வந்தது.

எழுதப்பட்டதன் நோக்கம்: சங்கீத புத்தகம் 150 தனிப்பட்ட சங்கீதங்களைக் கொண்ட வேதாகமத்தின் மிக நீளமான புத்தகமாகும். தேவன் மற்றும் அவருடைய படைப்பு, யுத்தம், ஆராதனை, ஞானம், பாவம் மற்றும் தீமை, தீர்ப்பு, நீதி மற்றும் மேசியாவின் வருகை போன்ற பாடங்களை சங்கீதங்கள் கையாளுகின்றன என்பதால் இது மிகவும் மாறுபட்ட ஒன்றாகும்.

திறவுகோல் வசனங்கள்: சங்கீதம் 19:1, “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.”

சங்கீதம் 22:16-19, “நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள். என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போடுகிறார்கள். ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக்கொள்ளும்.”

சங்கீதம் 23:1, “கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.”

சங்கீதம் 29:1-2, “பலவான்களின் புத்திரரே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள். கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.”

சங்கீதம் 51:10, “தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.”

சங்கீதம் 119:1-2, “கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள். அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்.”

சுருக்கமான திரட்டு: சங்கீதம் புத்தகம் என்பது ஜெபங்கள், கவிதைகள் மற்றும் துதிப்பாடல்களின் தொகுப்பாகும். இந்த புத்தகத்தின் பகுதிகள் பண்டைய இஸ்ரவேலர்களின் வழிபாட்டு சேவைகளில் ஒரு துதிப்பாடலாக பயன்படுத்தப்பட்டன. சங்கீதங்களின் இசை பாரம்பரியம் அதன் தலைப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது ஒரு கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது, அதாவது "ஒரு இசைக் கருவியின் பாடலுடன் பாடிய பாடல்."

முன்னிழல்கள்: தேவன் தம் ஜனத்திற்காக ஒரு மீட்பரை வழங்குவது சங்கீதத்தில் தொடர்ச்சியான கருப்பொருள் ஆகும். மேசியாவின் தீர்க்கதரிசன சித்திரங்கள் ஏராளமான சங்கீதங்களில் காணப்படுகின்றன. சங்கீதம் 2:1-12 மேசியாவின் வெற்றியையும் ராஜ்யத்தையும் சித்தரிக்கிறது. சங்கீதம் 16:8-11 அவருடைய மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் முன்னறிவிக்கிறது. சங்கீதம் 22 சிலுவையில் துன்பப்படுகிற இரட்சகரைக் காட்டுகிறது மற்றும் சிலுவையில் அறையப்பட்ட விரிவான தீர்க்கதரிசனங்களை முன்வைக்கிறது, இவை அனைத்தும் பரிபூரணமாக நிறைவேற்றப்பட்டன. மேசியா மற்றும் அவருடைய மணவாட்டியின் மகிமைகள் சங்கீதம் 45:6-7-ல் உள்ளன, சங்கீதம் 72:6-17, 89:3-37, 110:1-7 மற்றும் 132:12-18 ஆகியவை மகிமையையும் அவரது ஆட்சியின் உலகளாவிய தன்மையையும் முன்வைக்கின்றன.

நடைமுறை பயன்பாடு: ஆவியினால் அல்லது கிறிஸ்துவின் வார்த்தையினால் நிரப்பப்பட்டதன் முடிவுகளில் ஒன்று ஸ்துதி பாடுவதாகும். ஆரம்பகால தேவாலயத்தின் "பாடல் புத்தகம்" தான் சங்கீதங்கள், அவை கிறிஸ்துவில் புதிய சத்தியத்தைப் பிரதிபலித்தன.

எல்லா சங்கீதங்களிலும் தேவன் ஒரே கர்த்தராகும். ஆனால் நம் வாழ்வின் குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்ப நாம் அவருக்கு வெவ்வேறு வழிகளில் பதிலளிக்கிறோம். நாம் என்ன ஒரு அற்புதமான தேவனை வணங்குகிறோம் என்று சங்கீதக்காரர் அறிவிக்கிறார், நம்முடைய மனித அனுபவங்களுக்கு அப்பாற்பட்டவர், உயர்ந்தவர், ஆனால் தொடுவதற்கு போதுமான நெருக்கமானவர், வாழ்க்கைப் பாதையில் நம்மோடு நடந்து செல்வவர்.

நம்முடைய எல்லா உணர்வுகளையும் நாம் கடவுளிடம் கொண்டு வர முடியும் – அவை எவ்வளவு எதிர்மறையாக இருந்தாலும் அல்லது புகார் கொடுத்தாலும் - அவர் கேட்பார், புரிந்துகொள்வார் என்று நாம் உறுதியாக நம்பலாம். வாழ்க்கையின் பிரச்சினைகளால் நம்மை மூழ்கடித்து விடுவதால், அனைவரின் மிக ஆழமான ஜெபம் உதவிக்கான நிலை அவரை நோக்கி அழுதல் என்று சங்கீதக்காரன் நமக்குக் கற்பிக்கிறார்.

Englishமுகப்பு பக்கம்

சங்கீதப் புத்தகம்
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries