2 நாளாகமம் புத்தகம்


கேள்வி: 2 நாளாகமம் புத்தகம்

பதில்:
எழுத்தாளர்: 1 நாளாகமம் புத்தகம் அதன் எழுத்தாளர் யார் என்பதைக்குறித்து ஒன்றும் குறிப்பிடவில்லை. பாரம்பரியமாக தொன்றுதொட்டு நம்பப்பட்டு வருவது என்னவென்றால், 1 மற்றும் 2 நாளாகமம் புத்தகங்கள் எஸ்றாவால் எழுதப்பட்டது என்பதாகும்.

எழுதப்பட்ட காலம்: 1 நாளாகமம் புத்தகம் கி.மு. 450 முதல் கி.மு. 425 வரையிலுள்ள காலத்தின் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாகும்.

எழுதப்பட்டதன் நோக்கம்: 1 & 2 நாளாகமம் புத்தகங்கள் பெரும்பாலும் 1 & 2 சாமுவேல் மற்றும் 1 & 2 ராஜாக்கள் புத்தகங்கள் போலவே தகவல்களை உள்ளடக்கியுள்ளது. 1 & 2 நாளாகமப் புத்தகங்கள் அந்தக் காலத்தின் ஆசாரிய அம்சத்தைக் குறித்து அதிக கவனம் செலுத்துகிறது. 2 நாளாகமம் புத்தகம் முக்கியமாக தேசத்தினுடைய மதப்பிரகராமான வரலாற்றைக்குரித்த ஒரு மதிப்பாய்வாகும்.

திறவுகோல் வசனங்கள்: 2 நாளாகமம் 2:1, “சாலொமோன் கர்த்தருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தையும், தன் ராஜரிகத்திற்கு ஒரு அரமனையையும் கட்ட நிர்ணயம்பண்ணினான்.”

2 நாளாகமம் 29:1-3, “எசேக்கியா இருபத்தைந்தாம் வயதில் ராஜாவாகி, இருபத்தொன்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; சகரியாவின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின்பேர் அபியாள். அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். அவன் தன் ராஜ்யபாரத்தின் முதலாம் வருஷம் முதலாம் மாதத்தில் கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்து, அவைகளைப் பழுதுபார்த்தான்.”

2 நாளாகமம் 36:14, “ஆசாரியரில் பிரதானமானவர்கள் யாவரும் ஜனங்களும் கூடிப் புறஜாதிகளுடைய சகல அருவருப்புகளின்படியும் மிகவும் துரோகம்பண்ணி, கர்த்தர் எருசலேமிலே பரிசுத்தம்பண்ணின அவருடைய ஆலயத்தை தீட்டுப்படுத்தினார்கள்.”

2 நாளாகமம் 36:23, “அவருடைய ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ அவன்போகட்டும், அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனோடிருப்பாராக என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று, தன் ராஜ்யம் எங்கும் எழுதியனுப்பி விளம்பரம்பண்ணினான்.”

சுருக்கமான திரட்டு: 1 & 2 நாளாகமம் புத்தகங்கள்தெற்கு தேசமாகிய யூதாவின் ராஜ்யத்தைக் குறித்து குறிப்பிடுகிறது, அதாவது சாலமோனின் ராஜ்யபாரம் தொடங்கி யூதா பாபிலோனுக்கு சிறைவாசம் போவதோடு முடிகிறது. யூதாவின் வீழ்ச்சி ஏமாற்றமளிக்கிறது, ஆனாலும் ஜனங்களை தேவனிடம் திருப்புவதற்கு ஆர்வத்துடன் முயலும் ஆவிக்குரிய சீர்திருத்தவாதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தீய குணமுள்ள துன்மார்க்கமான ராஜாக்களைப் பற்றியோ அல்லது நல்ல ராஜாக்களின் தோல்விகளைப் பற்றியோ அதிகம் கூறப்படவில்லை; நன்மையான காரியங்கள் மட்டுமே வலியுறுத்தப்படுகிறது. 2 நாளாகமம் ஒரு ஆசாரிய முன்னோக்கை எடுத்துக்கொள்வதால், இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யம் அவர்களுடைய தவறான வழிபாடு மற்றும் எருசலேம் ஆலயத்தை ஒப்புக்கொள்ள மறுத்ததால் அரிதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. எருசலேம் மற்றும் தேவாலயத்தின் அழிவுடன் இரண்டாம் நாளாகமம் முடிகிறது.

முன்னிழல்கள்: பழைய ஏற்பாட்டிலுள்ள ராஜாக்கள் மற்றும் தேவாலயங்கள் பற்றிய அனைத்து குறிப்புகளையும் போலவே, அவற்றில் உண்மையான ராஜாதி ராஜாவான இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த ஆவியின் ஆலயத்தின் பிரதிபலிப்பைக் காண்கிறோம். இஸ்ரவேலின் ராஜாக்களில் மிகச் சிறந்தவர்கள் கூட எல்லா பாவமுள்ள மனிதர்களின் தவறுகளையும் கொண்டிருந்தார்கள், ஜனங்களை அபூரணமாக வழிநடத்தினார்கள். ஆனால் இயேசு ராஜாதி ராஜாவாக ஆயிரம் ஆண்டு ஆட்சி செய்ய பூமிக்கு வரும்போது, தாவீதின் மெய்யான வாரிசாக பூமியெங்கும் சிங்காசனத்தில் தன்னை நிலைநிறுத்துவார். அப்போதுதான் நமக்கு ஒரு சரியான மற்றும் நிலையான ராஜா இருப்பார், அவர் நீதியிலும் பரிசுத்தத்திலும் ஆட்சி செய்வார், இஸ்ரவேலின் ராஜாக்களில் மிகச் சிறந்தவர் என கனவு மட்டுமே காண முடியும்.

இதேபோல், சாலமோன் கட்டிய பெரிய ஆலயம் என்றென்றும் நிலைத்திருக்க வடிவமைக்கப்படவில்லை. 150 ஆண்டுகளுக்குப் பிறகு, உருவ வழிபாட்டிற்கு திரும்பிய வருங்கால சந்ததியினரால் சிதைவடைதல் மற்றும் பழுதடைதல் ஆகியவற்றை சரிசெய்ய வேண்டியிருந்தது (2 ராஜாக்கள் 12). ஆனால் பரிசுத்த ஆவியின் ஆலயமாக இருக்கிறவர்கள் – அதாவது கிறிஸ்துவுக்கு சொந்தமானவர்கள் – என்றென்றும் வாழ்வார்கள். இயேசுவுக்கு சொந்தமான நம் அந்த ஆலயம், கைகளால் அல்ல, தேவனுடைய சித்தத்தினால் (யோவான் 1:12-13) கட்டப்பட்டதாகும். நமக்குள் வாழும் ஆவியானவர் ஒருபோதும் நம்மை விட்டு விலக மாட்டார், ஒரு நாள் நம்மை தேவனுடைய கைகளில் பாதுகாப்பாக விடுவிப்பார் (எபேசியர் 1:13; 4:30). எந்த பூமிக்குரிய தேவாலயத்திலும் இப்படிப்பட்ட வாக்குறுதி இல்லை.

நடைமுறை பயன்பாடு: ஒவ்வொரு தலைமுறையையும் கடந்த காலத்திலிருந்து மதிப்பிடுவதற்கும், ஒவ்வொருவரும் தங்கள் கீழ்ப்படிதலுக்காக ஏன் ஆசீர்வதிக்கப்பட்டார்கள் அல்லது அவர்களின் துன்மார்க்கத்திற்காக தண்டிக்கப்பட்டார்கள் என்பதையும் அறிய நாளாகமம் புத்தகத்தின் வாசகர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஆனால், இந்த தலைமுறையினரின் அவலநிலையை நம்முடைய நிலைமைகளுடன், தனித்தனியாக ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். நாம் அல்லது நம் தேசம் அல்லது நமது தேவாலயம் கஷ்டங்களை அனுபவித்து வருகின்ற என்றால், நம்முடைய நம்பிக்கைகளையும், பல்வேறு ராஜாக்களின் கீழ் இஸ்ரவேலரின் அனுபவங்களுடன் அந்த நம்பிக்கைகளை நாம் எவ்வாறு செயல்படுத்துகிறோம் என்பதையும் ஒப்பிடுவது நமக்கு நன்மையானதாக அமையும். தேவன் பாவத்தை வெறுக்கிறார், அவர் அதைப் பொறுத்துக்கொள்ளவும் மாட்டார். நாளாகமம் நமக்கு எதையாவது கற்பிக்கிறது என்றால், அது நாம் மனத்தாழ்மையுடன் ஜெபித்து மனந்திரும்புகிறவர்களை மன்னிக்கவும் குணப்படுத்தவும் தேவன் விரும்புகிறார் என்பதாகும் (1 யோவான் 1:9).

தேவனிடமிருந்து நீங்கள் விரும்பிய எதையும் நீங்கள் பெற முடிந்தால், நீங்கள் என்ன கேட்பீர்கள்? அற்புதமான செல்வமா? உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் சரியான/நிலையான ஆரோக்கியமா? ஜீவன் மற்றும் மரணத்தின்மேல் அதிகாரமா? இதைப் பற்றி யோசிப்பது ஆச்சரியமாக இருக்கிறது, இல்லையா? ஆனால் இன்னும் ஆச்சரியம் என்னவென்றால், தேவன் சாலொமோனுக்கு அத்தகைய வாய்ப்பை வழங்கினார், அவர் இவற்றில் எதையும் தேர்வு செய்யவில்லை. அவர் கேட்டது, தேவன் தனக்கு ஒதுக்கிய பணியை நிறைவு செய்வதற்கும் அதைச் சிறப்பாகச் செய்வதற்கும் வேண்டிய ஞானமும் அறிவும் வேண்டுமெனக் கேட்டார். நமக்குக் கற்ப்பிப்பது என்னவென்றால், தேவன் நம் ஒவ்வொருவருக்கும் நிறைவேற்ற ஒரு கற்பனையைக் கொடுத்திருக்கிறார், தேவனிடமிருந்து நாம் பெறக்கூடிய மிகப் பெரிய ஆசீர்வாதம், நம் வாழ்விற்காக அவருடைய சித்தத்தை நிறைவேற்றும் திறன் மட்டுமேயாகும். அதற்காக, செயலிலும் மனப்பான்மையிலும் கிறிஸ்தவத் தன்மைக்கு நம்மைத் தூண்டுவதற்காக அவருடைய சித்தத்தை அறிந்துகொள்ள “பரத்திலிருந்து வரும் ஞானம்” (யாக்கோபு 3:17) நமக்குத் தேவையாயிருக்கிறது (யாக்கோபு 3:13).

English


முகப்பு பக்கம்
2 நாளாகமம் புத்தகம்