settings icon
share icon

சகரியா புத்தகம்

எழுத்தாளர்: சகரியா 1:1, சகரியா புத்தகத்தின் எழுத்தாளரை இத்தோவின் மகனான பெரகியாவின் குமாரனாகிய சகரியாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தை என்று அடையாளப்படுத்துகிறது.

எழுதப்பட்ட காலம்: சகரியா புத்தகம் கி.மு. 520 முதல் கி.மு. 470 வரையிலுள்ள காலக்கட்டத்தில் இரண்டு முதன்மை பிரிவுகளில் எழுதப்பட்டிருக்கலாம்.

எழுதப்பட்டதன் நோக்கம்: தம்முடைய ஜனத்தினை கற்பிக்கவும், எச்சரிக்கவும், திருத்தவும் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளைப் பயன்படுத்தினார் என்று சகரியா வலியுறுத்தினார். துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் கேட்க மறுத்துவிட்டார்கள். அவர்கள் செய்த பாவம் தேவனுடைய தண்டனையைக் கொண்டு வந்தது. தீர்க்கதரிசனம் கூட சீர்கேட்டிற்குள்ளாக சென்று சிதைக்கப்படலாம் என்பதற்கான சான்றுகளையும் இந்த புத்தகம் கொண்டுள்ளது. இந்த காலகட்டத்தில் தீர்க்கதரிசனம் யூதர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியது என்று வரலாறு காட்டுகிறது, இந்த காரியம் தேவனுடைய மக்களிடம் நீடித்த நாட்கள் அல்லது காலமாக தீர்க்கதரிசனக் குரல் எதுவும் பேசாத/கேட்காத ஏற்பாட்டின் இடையேயான காலத்திற்கு வழிவகுத்தது.

திறவுகோல் வசனங்கள்: சகரியா 1:3, “ஆகையால் நீ அவர்களை நோக்கி: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: என்னிடத்தில் திரும்புங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது நான் உங்களிடத்துக்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.”

சகரியா 7:13, “ஆதலால் நான் கூப்பிட்டபோது, அவர்கள் எப்படி கேளாமற்போனார்களோ அப்படியே அவர்கள் கூப்பிட்டபோது நானும் கேளாமலிருந்தேனென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.”

சகரியா 9:9, “சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.”

சகரியா 13:9, “அந்த மூன்றாம் பங்கை நான் அக்கினிக்குட்படப்பண்ணி, வெள்ளியை உருக்குகிறதுபோல அவர்களை உருக்கி, பொன்னைப் புடமிடுகிறதுபோல அவர்களைப் புடமிடுவேன்; அவர்கள் என் நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்; நான் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்பேன்; இது என் ஜனமென்று நான் சொல்லுவேன், கர்த்தர் என் தேவனென்று அவர்கள் சொல்லுவார்கள்.”

சுருக்கமான திரட்டு: இரட்சிப்பு அனைவராலும் பெறப்படலாம் என்று சகரியா புத்தகம் கற்பிக்கிறது. கடைசி அதிகாரத்தில் உலகெங்கிலுமுள்ள ஜனங்கள் தேவனை நமஸ்கரித்து வணங்க வருகிறார்கள், எல்லா மக்களும் அவரைப் பின்பற்ற வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதை விவரிக்கிறது. இது உலகளாவிய கோட்பாடு அல்ல, அதாவது, எல்லா மக்களும் இரட்சிக்கப்படுவார்கள் என்பதல்ல, ஏனெனில் இது தேவனுடைய இயல்பாகும். மாறாக, தேசிய அல்லது அரசியல் வெளிப்பாடுகளைப் பொருட்படுத்தாமல், எல்லா மக்களும் தன்னை வணங்குவதையும், ஏற்றுக்கொள்வதையும் தேவன் விரும்புகிறார் என்று புத்தகம் கற்பிக்கிறது. இறுதியாக, சகரியா தேவன் இந்த உலகத்தின் மீது இறையாண்மை உடையவர் என்று பிரசங்கித்தார், மாறாக எந்தவொரு தோற்றமும் இல்லை. எதிர்காலத்தைப் பற்றிய அவரது தரிசனங்கள், நடக்கும் அனைத்தையும் தேவன் காண்கிறார் என்பதைக் குறிக்கிறது. உலகில் தேவனுடைய தலையீட்டின் சித்தரிப்புகள் இறுதியில் அவர் தேர்ந்தெடுக்கும் மனித நிகழ்வுகளை அவர் கொண்டு வருவார் என்று கற்பிக்கிறது. தேவனைப் பின்பற்றவோ அல்லது கிளர்ச்சி செய்யவோ தனிநபரின் சுதந்திரத்தை அவர் அகற்றுவதில்லை, ஆனால் அவர்கள் செய்யும் தேர்வுகளுக்கு ஜனங்களே பொறுப்பேற்கிறார்கள். கடைசி அதிகாரத்தில், இயற்கையின் சக்திகள் கூட தேவனுடைய கட்டுப்பாட்டுக்கு அடங்கி பதிலளிக்கின்றன.

முன்னிழல்கள்: இயேசு கிறிஸ்து மற்றும் மேசியாவின் சகாப்தம் பற்றிய தீர்க்கதரிசனங்கள் சகரியாவில் உள்ளன. மேசியா வந்து நம் நடுவில் வசிப்பார் என்ற வாக்குறுதியிலிருந்து (சகரியா 2:10-12; மத்தேயு 1:23) கிளை மற்றும் கல் ஆகியவற்றின் அடையாளத்திற்கு (சகரியா 3:8-9, 6:12-13; ஏசாயா 11: 1; லூக்கா 20:17-18) அவருடைய இரண்டாவது வருகையின் வாக்குறுதியின்படி, அவரைத் குத்தினவர்கள் அவரைப் பார்த்து துக்கப்படுவார்கள் (சகரியா 12:10; யோவான் 19: 33-37), கிறிஸ்து தான் இந்த சகரியா புத்தகத்தின் கருப்பொருளாக இருக்கிறார். இயேசு இஸ்ரவேலின் இரட்சகராக இருக்கிறார், இரட்சிப்புக்காக தன்னிடம் வரும் அனைவரின் பாவங்களையும் இரத்தம் உள்ளடக்கிய ஒரு நீரூற்று கழுவுகிறது (சகரியா 13:1; 1 யோவான் 1:7).

நடைமுறை பயன்பாடு: இன்று நம்முடைய மெய்யான வழிபாட்டையும் தார்மீக வாழ்வையும் தேவன் எதிர்பார்க்கிறார். தேசிய தப்பெண்ணத்தை மீறுவதற்கான சகரியாவின் உதாரணம் நமது சமூகத்தின் அனைத்து பகுதிகளையும் சென்றடைய நினைவூட்டுகிறது. தேவனுடைய இரட்சிப்பின் அழைப்பை அனைத்து தேசிய தோற்றங்கள், மொழிகள், இனங்கள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்களுக்கு நாம் வழங்க வேண்டும். அந்த இரட்சிப்பு சிலுவையில் இயேசு கிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தத்தின் மூலம் மட்டுமே கிடைக்கிறது, அவர் பாவத்திற்கு பரிகாரம் செய்ய நம் இடத்தில்/ஸ்தானத்தில் மரித்தார். ஆனால், அந்த பலியை நாம் நிராகரித்தால், வேறு எந்த பலியும் இல்லை, இதன் மூலம் நாம் தேவனோடு ஒப்புரவாக முடியும். மனிதர்கள் இரட்சிக்கப்படுவதற்கு வானத்தின் கீழ் வேறு நாமம் கொடுக்கப்படவில்லை (அப்போஸ்தலர் 4:12). நாம் இழப்பதற்கு நேரமில்லை; இன்றே இரட்சிப்பின் நாள் (2 கொரிந்தியர் 6:2).

Englishமுகப்பு பக்கம்

சகரியா புத்தகம்
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries