settings icon
share icon

எஸ்றாவின் புத்தகம்

எழுத்தாளர்: எஸ்ரா புத்தகம் குறிப்பாக அதன் எழுத்தாளரின் பெயரை யாரென்று குறிப்பிடவில்லை. எஸ்றா தீர்க்கதரிசி தான் எஸ்றா புத்தகத்தை எழுதினார் என்பது பாரம்பரியம். எஸ்றா 7-ஆம் அதிகாரத்தில் காட்சியில் தோன்றியவுடன், எஸ்றா புத்தகத்தின் எழுத்தாளர் மூன்றாவது நபரிடமிருந்து எழுதுவதிலிருந்து முதல் நபராக மாறுகிறார் என்பது சுவாரஸ்யமானது. இது எஸ்றா எழுத்தாளராக இருப்பதற்கான நம்பகத்தன்மையையும் வழங்குகிறது.

எழுதப்பட்ட காலம்: எஸ்றா புத்தகம் கி.மு. 460 முதல் கி.மு. 440 வரையிலுள்ள காலத்திற்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாகும்.

எழுதப்பட்டதன் நோக்கம்: பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து திரும்பிய நேரத்தில் மற்றும் அடுத்தடுத்த ஆண்டுகளில் இஸ்ரவேல் தேசத்தில் நிகழும் நிகழ்வுகளுக்கு எஸ்றாவின் புத்தகம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, இது கி.மு. 538 ஆம் ஆண்டு துவங்கி சுமார் ஒரு நூற்றாண்டு காலத்தை உள்ளடக்கியது. எஸ்றா புத்தகத்தின் முக்கியத்துவம் தேவாலயத்தின் புனரமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த புத்தகத்தில் விரிவான வம்சவரலாறுகளின் பதிவுகள் உள்ளன, முக்கியமாக ஆரோனின் சந்ததியினரின் பங்களிப்பில் ஆசாரியத்துவத்திற்கான கூற்றுக்களை நிறுவுவதற்கான நோக்கத்திற்காக இப்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

திறவுகோல் வசனங்கள்: எஸ்றா 3:11, “கர்த்தர் நல்லவர், இஸ்ரவேலின்மேல் அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைப் புகழ்ந்து துதிக்கையில், மாறிமாறிப் பாடினார்கள்; கர்த்தரைத் துதிக்கையில், ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்படுகிறதினிமித்தம் மகா கெம்பீரமாய் ஆரவாரித்தார்கள்.”

எஸ்றா 7:6, “இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான்; அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்.”

சுருக்கமான திரட்டு: புத்தகத்தை பின்வருமாறு பிரிக்கலாம்: 1-6 வரையிலுள்ள அதிகாரங்கள் – செருபாபேலின் கீழ் முதல் திரும்பி வருதல், மற்றும் இரண்டாவது ஆலயத்தைக் கட்டுதல். 7-10 வரையிலுள்ள அதிகாரங்கள் – எஸ்றாவின் ஊழியம். 6 மற்றும் 7 அதிகாரங்களுக்கு இடையில் அரை நூற்றாண்டுக்கு மேலாகிவிட்டதால், எஸ்றா எருசலேமில் தனது ஊழியத்தைத் தொடங்கிய நேரத்தில் புத்தகத்தின் முதல் பகுதியின் எழுத்துக்கள் இறந்துவிட்டன. எஸ்றா மற்றும் நெகேமியா புத்தகங்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவர் எஸ்றா. இரண்டு புத்தகங்களும் பாவ அறிக்கை ஜெபத்துடன் (எஸ்ரா 9; நெகேமியா 9) முடிவடைகின்றன, பின்னர் ஜனம் அவர்கள் விழுந்த பாவ நடைமுறைகளிலிருந்து பிரிக்கப்பட்டனர். இந்த விவரிப்பில் (எஸ்ரா 5:1) அறிமுகப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசிகளாகிய ஆகாய் மற்றும் சகரியா ஆகியோரின் ஊக்கமளிக்கும் செய்திகளின் தன்மை குறித்த சில கருத்துக்கள், அவர்களின் பெயர்களைக் கொண்ட தீர்க்கதரிசன புத்தகங்களில் காணலாம்.

நெகேமியா புத்தகத்தின் ஆரம்பத்தில் விவரிக்கப்பட்டுள்ள அர்தசஷ்டா ராஜாவின் ஆணை வரை ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்பும் விவரங்கள் எஸ்றாவின் புத்தகம் உள்ளடக்கியுள்ளது. எஸ்றாவின் நாட்களில் ஆகாய் பிரதான தீர்க்கதரிசியாக இருந்தார், நெகேமியாவின் நாட்களில் சகரியா பிரதான தீர்க்கதரிசியாக இருந்தார்.

முன்னிழல்கள்: இஸ்ரவேலர்களில் மீதியானவர்களின் வேதாகம கருப்பொருளின் தொடர்ச்சியை எஸ்றா புத்தகத்தில் காண்கிறோம். பேரழிவு அல்லது நியாயத்தீர்ப்பு வரும்போதெல்லாம், தேவன் எப்போதுமே தனக்கென ஒரு சிறிய மீதியானவர்களை காப்பாற்றுகிறார் - நோவாவையும் அவருடைய குடும்பத்தினரையும் ஜலப்பிரளய அழிவிலிருந்து காப்பாற்றுகிறார்; சோதோம் மற்றும் கொமோராவைச் சேர்ந்த லோத்தின் குடும்பம்; ஆகாப் மற்றும் யேசபேலின் துன்புறுத்தல்களுக்கு மத்தியிலும் 7000 தீர்க்கதரிசிகள் இஸ்ரவேலில் பாதுகாக்கப்பட்டுள்ளனர். இஸ்ரவேலர்கள் எகிப்தில் அடிமைகளாக சிறைபட்டு இருந்தபோது, தேவன் தம்முடைய எஞ்சியவர்களை விடுவித்து வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு அழைத்துச் சென்றார். எஸ்ரா 2:64-67-ல் சுமார் ஐம்பதாயிரம் பேர் யூதேயா தேசத்திற்குத் திரும்புகிறார்கள், ஆனாலும், தாவீது ராஜாவின் கீழ் செழிப்பான நாட்களில் இஸ்ரவேலில் இருந்த எண்ணிக்கையுடன் தங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, “நாம் இந்த நாளில் ஒரு மீதமுள்ளவர்களாக இருக்கிறோம்.” இந்த கருப்பொருள் புதிய ஏற்பாட்டில் கொண்டு செல்லப்படுகிறது, "அப்படிப்போல இக்காலத்திலேயும் கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கு மீதியாயிருக்கிறது" (ரோமர் 11:5) என்று பவுல் கூறுகிறார். இயேசுவின் நாட்களில் பெரும்பாலான ஜனங்கள் அவரை நிராகரித்த போதிலும், தேவன் தம்முடைய குமாரனிலும், அவருடைய கிருபையின் உடன்படிக்கையிலும் ஒதுக்கி வைத்திருந்த ஒரு சில ஜனங்கள் இருந்தார்கள். கிறிஸ்துவுக்குப் பிறகு எல்லா தலைமுறைகளிலும், நித்திய ஜீவனுக்கு இட்டுச்செல்லும் குறுகிய பாதையில் விசுவாசிகளின் கால்கள் உள்ளன (மத்தேயு 7:13:14). பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலம் இந்த எஞ்சியவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள், அவர்களை முத்திரையிட்டவர், கடைசி நாளில் யாவரையும் பாதுகாப்பாக விடுவிப்பார்கள் (2 கொரிந்தியர் 1:22; எபேசியர் 4:30).

நடைமுறை பயன்பாடு: எஸ்றா புத்தகம் நம்பிக்கை மற்றும் மறுசீரமைப்பின் ஒரு காலக்கதையாகும். பாவத்தினாலும், தேவனுக்கு எதிரான கிளர்ச்சியினாலும் பாதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவருக்கு, மன்னிக்கும் தேவன் நம்முடையவராக இருக்கிறார், மனந்திரும்புதலிலும் முறிவிலும் அவரைத் தேடும்போது நம்மைத் திருப்பி விடாத ஒரு தேவன் அவர் (1 யோவான் 1:9). இஸ்ரவேலர்கள் எருசலேமுக்குத் திரும்புவதும், ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்புவதும் ஒவ்வொரு கிறிஸ்தவரின் வாழ்க்கையிலும் பாவத்தின் சிறையிலிருந்தும் தேவனுக்கு எதிரான கிளர்ச்சியிலிருந்தும் திரும்பி வந்து அவரை அன்டிக்கொல்வது அவருக்குள் கொண்டிருக்கிற ஒரு அன்பான வரவேற்பு இல்லத்தைக் காண்கிறது. நாம் எவ்வளவு காலம் விலகி இருந்தபோதிலும், அவர் நம்மை மன்னித்து, அவருடைய குடும்பத்தில் நம்மை மீண்டும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார். நம்முடைய வாழ்க்கையை எவ்வாறு கட்டியெழுப்புவது, நம்முடைய இருதயங்களை எவ்வாறு உயிர்ப்பிப்பது என்பதை நமக்குக் காண்பிக்க அவர் தயாராக இருக்கிறார், அதில் பரிசுத்த ஆவியின் ஆலயம் உள்ளது. எருசலேமிலுள்ள ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்புவதைப் போலவே, நம்முடைய வாழ்க்கையை அவருடைய சேவைக்காக புதுப்பித்து, மறுசீரமைக்கும் பணியை தேவன் கண்காணிக்கிறார்.

ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்ப தேவனுடைய விரோதிகளின் எதிர்ப்பு உண்டாயிருந்த காரியம் நம் ஆத்துமாக்களின் எதிரிக்கு பொதுவான ஒரு மாதிரியைக் காட்டுகிறது. நம்மை ஏமாற்றுவதற்கும் தேவனுடைய திட்டங்களைத் தடுக்க முயற்சிப்பதற்கும் தேவனுடைய நோக்கங்களுடன் ஒத்திசைந்தவர்களை சாத்தான் பயன்படுத்துகிறான். எஸ்றா 4:2 கிறிஸ்துவை வணங்குவதாகக் கூறுபவர்களின் ஏமாற்றுப் பேச்சை விவரிக்கிறது, ஆனால் அவர்களின் உண்மையான நோக்கம் தகர்க்கப்பட்டு அழிக்கப்பட வேண்டும் என்பதாகும், கட்டியெழுப்பக்கூடாது என்பதே அவர்களின் எண்ணம். அத்தகைய வஞ்சக ஏமாற்றுக்காரர்களுக்கு எதிராக நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இஸ்ரவேலர்கள் செய்ததைப் போலவே அவர்களுக்கு பதிலளிக்கவும், அவர்களின் மென்மையான வார்த்தைகளாலும், விசுவாசத்தின் தவறான மாதிரிகளால் ஏமாற மறுக்கிறவர்களாக இருக்கவேண்டும்.

Englishமுகப்பு பக்கம்

எஸ்றாவின் புத்தகம்
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries