2 ராஜாக்களின் புத்தகம்


கேள்வி: 2 ராஜாக்களின் புத்தகம்

பதில்:
எழுத்தாளர்: 2 ராஜாக்கள் புத்தகம் அதன் எழுத்தாளரின் பெயரைக் குறிப்பிடவில்லை. மரபு வழியாக தொன்றுதொட்டு நம்பப்பட்டு வருவது என்னவென்றால், எரேமியா தீர்க்கதரிசி தான் 1 மற்றும் 2 ராஜாக்கள் புத்தகங்ளை எழுதியவர் என்பதாகும்.

எழுதப்பட்ட காலம்: 2 ராஜாக்களின் புத்தகம், 1 ராஜாக்களுடன், கி.மு. 560 முதல் கி.மு. 540 வரையிலான காலக்கட்டத்தின் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாகும்.

எழுதப்பட்டதன் நோக்கம்: 2 ராஜாக்களின் புத்தகம் 1 ராஜாக்களின் புத்தகத்தின் தொடர்ச்சியாகும். பிளவுபட்ட ராஜ்யங்கள் (இஸ்ரவேல் மற்றும் யூதா) பற்றிய ராஜாக்களின் கதையை இது தொடர்கிறது. 2 ராஜாக்களின் புத்தகம் முறையே இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களை அசீரியா மற்றும் பாபிலோனுக்கு சிறைபடுத்தி நாடுகடத்தப்படுவதோடு முடிவடைகிறது.

திறவுகோல் வசனங்கள்: 2 ராஜாக்கள் 17:7-8: “எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய கையின்கீழிருந்த தங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக இஸ்ரவேல் புத்திரர் பாவஞ்செய்து, அந்நிய தேவர்களுக்குப் பயந்து நடந்து, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளின் வழிபாடுகளிலும் இஸ்ரவேல் ராஜாக்களின் வழிபாடுகளிலும் நடந்துகொண்டிருந்தார்கள்.”

2 ராஜாக்கள் 22: 1-2: “யோசியா ராஜாவாகிறபோது, எட்டு வயதாயிருந்து, முப்பத்தொரு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; போஸ்காத் ஊரானாகிய அதாயாவின் குமாரத்தியான அவன் தாயின் பேர் எதிதாள். அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழியிலெல்லாம் வலது இடதுபுறம் விலகாமல் நடந்தான்.”

2 ராஜாக்கள் 24:2: “அப்பொழுது கர்த்தர் கல்தேயரின் தண்டுகளையும், சீரியரின் தண்டுகளையும், மோவாபியரின் தண்டுகளையும், அம்மோன் புத்திரரின் தண்டுகளையும், அவன் மேல் வரவிட்டார்; தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு கர்த்தர் சொன்ன வார்த்தையின்படியே அவர் அவைகளை யூதாவை அழிக்கும்படிக்கு வரவிட்டார்.”

2 ராஜாக்கள் 8:19: “கர்த்தர்: உன் குமாரருக்குள்ளே எந்நாளும் ஒரு விளக்கை உனக்குக் கட்டளையிடுவேன் என்று தம்முடைய தாசனாகிய தாவீதுக்குச் சொன்னதின்படியே, அவனிமித்தம் அவர் யூதாவை முற்றிலும் கெடுக்கவில்லை.”

சுருக்கமான திரட்டு: பிளவுபட்ட ராஜ்யத்தின் வீழ்ச்சியை இரண்டாம் ராஜாக்கள் புத்தகம் சித்தரிக்கின்றன. தேவனுடைய தீர்ப்பு நெருங்கிவிட்டது, ஆனால் அவர்கள் மனந்திரும்ப மாட்டார்கள் என்று தீர்க்கதரிசிகள் தொடர்ந்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்கள். இஸ்ரவேல் ராஜ்யம் பலமுறை பொல்லாத துன்மார்க்கமான ராஜாக்களால் ஆளப்பட்டது, யூதாவின் ராஜாக்களில் சிலர் நல்லவர்களாக இருந்தாலும், அவர்களில் பெரும்பாலோனோர் ஜனங்களை யெகோவாவின் வழிபாட்டிலிருந்து விலக்குகிறவர்களாக இருந்தார்கள். சில நல்ல ராஜாக்கள், எலிசா மற்றும் பிற தீர்க்கதரிசிகளுடன் சேர்ந்து, நாட்டின் வீழ்ச்சியைத் தடுக்க முடியாமல் போனது. இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யம் இறுதியில் அசீரியர்களால் சிறையாக்கப்பட்டு சிதறிடிக்கப்பட்டது, சுமார் 136 ஆண்டுகளுக்குப் பிறகு தெற்கு ராஜ்யமாகிய யூதா பாபிலோனியர்களால் சிறையாக்கப்பட்டு அடிமைத்தனத்திற்குள்ளாகப் போனது.

2 ராஜாக்கள் புத்தகத்தில் மூன்று முக்கிய கருப்பொருள்கள் உள்ளன. முதலாவதாக, கர்த்தர் தம்முடைய ஜனங்கள் கீழ்ப்படியாதபோது அவர்களை நியாயந்தீர்த்தார். இஸ்ரவேலரின் துரோகம் ராஜாக்களின் தீய விக்கிரகாராதனையில் பிரதிபலித்தது, இதன் விளைவாக தேவன் அவர்களுடைய கலகத்திற்கு எதிராக அவருடைய நீதியான கோபத்தை வெளிப்படுத்தினார். இரண்டாவதாக, தேவனுடைய உண்மையான தீர்க்கதரிசிகளின் வார்த்தை எப்போதும் நிறைவேறும். கர்த்தர் எப்பொழுதும் அவருடைய வார்த்தையைக் காக்கிறவர், ஆகவே அவருடைய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளும் எப்போதும் உண்மைதான். மூன்றாவதாக, கர்த்தர் உண்மையுள்ளவர். அவர் தாவீதுக்கு அளித்த வாக்குறுதியை நினைவு கூர்ந்தார் (2 சாமுவேல் 7:10-13), ஜனங்களின் கீழ்ப்படியாமையும் அவர்களை ஆட்சி செய்த தீய ராஜாக்கள் இருந்தபோதிலும், கர்த்தர் தாவீதின் குடும்பத்தை முடிவுக்குக் கொண்டுவரவில்லை.

முன்னிழல்கள்: ஏழைகள், பலவீனமானவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், வரி வசூலிப்பவர்கள், சமாரியர்கள், மற்றும் புறஜாதியார் போன்றோர்கள் தேவனுடைய கிருபைக்கு தகுதியற்றவர்கள் என்று கருதப்பட்ட யூதர்களிடம், தேவனுடைய இரக்கத்தின் மகத்தான உண்மையை விளக்குவதற்கு 1 ராஜாக்கள் மற்றும் 2 ராஜாக்களில் உள்ள நாகமான், சாறிபாத்தின் விதவையின் கதைகளை இயேசு பயன்படுத்துகிறார் -. ஒரு ஏழை விதவை மற்றும் தொழுநோயாளியின் உதாரணங்களை மேற்கோள் காட்டுவதன் மூலம், தெய்வீக இறையாண்மையின் கிருபையின் மிகப் பெரிய தேவை உள்ளவர்களுக்கு குணமாகவும் ஊழியமாகவும் குணப்படுத்தும் சிறந்த மருத்துவராக இயேசு தன்னைக் காட்டினார். இதே உண்மைதான் கிறிஸ்துவின் உடலின் மர்மத்தின் அடிப்படையாக இருந்தது, அவருடைய திருச்சபை, சமூகத்தின் அனைத்து மட்டங்களிலிருந்தும், ஆண், பெண், பணக்காரர், ஏழை, யூதர் மற்றும் புறஜாதியார் (எபேசியர் 3:1-6).

எலிசாவின் பல அற்புதங்கள் இயேசுவின் அற்புதங்களை முன்னறிவித்தன. எலிசா சூனேமியாள் பெண்ணின் மகனை உயிரோடு எழுப்பினார் (2 ராஜாக்கள் 4:34-35), தொழுநோயால் அவதிப்பட்ட நாகமானைக் குணப்படுத்தினார் (2 ராஜாக்கள் 5:1-19), மற்றும் நூறு பேருக்கு உணவளிக்க ரொட்டிகளைப் பெருக்கினார் (2 ராஜாக்கள் 4:42-44).

நடைமுறை பயன்பாடு: தேவன் பாவத்தை வெறுக்கிறார், அதை காலவரையின்றி தொடர அவர் அனுமதிக்க மாட்டார். நாம் அவருக்கு சொந்தமானவர்களாக இருந்தால், நாம் அவருக்குக் கீழ்ப்படியாதபோது அவருடைய ஒழுக்கத்தை எதிர்பார்க்கலாம். ஒரு அன்பான தகப்பன் தனது பிள்ளைகளை அவர்களின் நன்மைக்காகவும், அவர்கள் உண்மையில் அவருக்கே உரியவர் என்பதை நிரூபிக்கவும் திருத்துகிறார். தேவன் சில சமயங்களில் அவிசுவாசிகளைப் பயன்படுத்தி தம் மக்களுக்கு திருத்தம் கொண்டு வரக்கூடும், மேலும் தீர்ப்பை வழங்குவதற்கு முன்பு அவர் நமக்கு எச்சரிக்கை செய்கிறார். கிறிஸ்தவர்களாகிய, அவருடைய பாதையிலிருந்து நாம் தவறான வழியில் செல்லும்போது நமக்கு வழிகாட்டவும் எச்சரிக்கவும் அவருடைய வார்த்தை இருக்கிறது. பழைய தீர்க்கதரிசிகளைப் போலவே, அவருடைய வார்த்தையும் நம்பகமானது, எப்போதும் உண்மையை பேசுகிறது. தேவனுடைய ஜனங்களிடம் உண்மையுள்ளவர் ஒருபோதும் தோல்வியடைய விடமாட்டார்.

கிறிஸ்துவின் சரீரத்தைப் பொறுத்தவரை விதவை மற்றும் தொழுநோயாளியின் கதைகள் நமக்கு எடுத்துக்காட்டுகள். ஒரு எலிசா சமுதாயத்தின் மிகக் குறைந்த மட்டங்களில் இருந்து பரிதாபப்பட்டார், கிறிஸ்துவைச் சேர்ந்த அனைவரையும் நம் தேவாலயங்களுக்குள் வரவேற்க வேண்டும். தேவன் "பட்சபாதம் காண்பிப்பவர்" அல்ல (அப்போஸ்தலர் 10:34), நாமும் அப்படி இருக்கக்கூடாது.

English


முகப்பு பக்கம்
2 ராஜாக்களின் புத்தகம்