மல்கியா புத்தகம்


கேள்வி: மல்கியா புத்தகம்

பதில்:
எழுத்தாளர்: மல்கியா 1:1, மல்கியா புத்தகத்தின் எழுத்தாளரை மல்கியாவைக்கொண்டு கர்த்தர் இஸ்ரவேலுக்குச் சொன்ன வார்த்தையின் பாரம் என்று குறிப்பிட்டு அடையாளப்படுத்துகிறது.

எழுதப்பட்ட காலம்: மல்கியா புத்தகம் கி.மு. 440 முதல் கி.மு. 400 வரையிலுள்ள காலக்கட்டத்தினுடைய இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாகும்.

எழுதப்பட்டதன் நோக்கம்: மல்கியா புத்தகம் மல்கியாவைக்கொண்டு கர்த்தர் இஸ்ரவேலுக்குச் சொன்ன வார்த்தையின் பாரம் ஆகும் (1:1). தேவனிடம் திரும்பும்படி மக்களுக்குச் சொல்ல இது மல்கியா வழியாக உரைக்கப்பட்ட தேவனுடைய எச்சரிக்கையாக இருந்தது. பழைய ஏற்பாட்டின் இறுதி புத்தகம் முடிவடையும் போது, தேவனுடைய நீதியின் அறிவிப்பும், வரவிருக்கும் மேசியா மூலம் அவர் மீட்கப்படுவதற்கான வாக்குறுதியும் இஸ்ரவேலரின் செவிகளில் ஒலிக்கிறது. நானூறு ஆண்டுகால மௌனம் தேவனுடைய அடுத்த தீர்க்கதரிசியாகிய யோவான் ஸ்நானகனிடமிருந்து இதேபோன்ற செய்தியுடன் முடிவடைகிறது, "மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபமாக இருக்கிறது" (மத்தேயு 3:2).

திறவுகோல் வசனங்கள்: மல்கியா 1:6, “குமாரன் தன் பிதாவையும், ஊழியக்காரன் தன் எஜமானையும் கனம்பண்ணுகிறார்களே; நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே என்று சேனைகளின் கர்த்தர் தமது நாமத்தை அசட்டைபண்ணுகிற ஆசாரியர்களாகிய உங்களைக் கேட்கிறார்; அதற்கு நீங்கள் உமது நாமத்தை எதினாலே அசட்டைபண்ணினோம் என்கிறீர்கள்.”

மல்கியா 3:6-7, “நான் கர்த்தர் நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை. நீங்கள் உங்கள் பிதாக்களின் நாட்கள் தொடங்கி என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், அவைகளைவிட்டு விலகிப்போனீர்கள்; என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; நாங்கள் எந்த விஷயத்தில் திரும்பவேண்டும் என்கிறீர்கள்.”

சுருக்கமான திரட்டு: வழிதவறிச் சென்ற தேவனுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு, குறிப்பாக தேவனிடமிருந்து திரும்பிய ஆசாரியர்களுக்கு மல்கியா தேவனுடைய வார்த்தைகளை எழுதினார். ஆசாரியர்கள் அவர்கள் தேவனுக்கு செய்த பலிகளை பெரிதாக கருதவில்லை/நடத்தவில்லை. குறைபாடு இல்லாத விலங்குகளை நியாயப்பிரமாண சட்டம் கோரிய போதிலும் கறைகள்/குறைபாடுகள் உள்ள மிருகங்கள் பலியிடப்பட்டன (உபாகமம் 15:21). யூதாவின் ஆண்கள் தங்கள் இளமைக்கால மனைவிகளுடன் துரோகமாக நடந்துகொண்டார்கள், தேவன் பலிகளை ஏன் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று யோசித்துக்கொண்டிருந்தார்கள். மேலும், மக்கள் இருந்திருக்க வேண்டிய அளவுக்கு தசமபாகம் செலுத்தவில்லை (லேவியராகமம் 27:30, 32). ஆனால் மக்கள் செய்த பாவம் இருந்தபோதிலும், தேவனிடமிருந்து விலகிச் சென்றாலும், மல்கியா தேவனுடைய மக்கள் மீதுள்ள அன்பை மீண்டும் வலியுறுத்துகிறார் (மல்கியா 1:1-5) மற்றும் வரவிருக்கும் செய்தியாளரைக் பற்றிய வாக்குறுதிகள் (மல்கியா 2:17–3: 5) கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னிழல்கள்: மல்கியா 3:1-6 வரையிலுள்ள வேதபாகம் யோவான் ஸ்நானகனைப் பற்றிய ஒரு தீர்க்கதரிசனமாகும். மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவுக்கு வழியை ஆயத்தம் பண்ணுவதற்காக அனுப்பப்பட்ட கர்த்தருடைய தூதுவர் அவர் (மத்தேயு 11:10). யோவான் மனந்திரும்புதலைப் பிரசங்கித்து, கர்த்தருடைய நாமத்தில் ஞானஸ்நானம் வழங்கினார், இதனால் இயேசுவின் முதல் வருகைக்கு வழியை ஆயத்தம் பண்ணினார். ஆனால் "திடீரென்று ஆலயத்திற்கு" வரும் தூதுவர் கிறிஸ்துவே அதிகாரத்திலும் வல்லமையிலும் வரும்போது தனது இரண்டாவது வருகையில் தானே அப்படியாகும் (மத்தேயு 24). அந்த நேரத்தில், அவர் “லேவியின் புத்திரர்களைத் பரிசுத்தப்படுத்துவார்” (வச. 3), அதாவது மோசேயின் நியாயப்பிரமாணத்தை எடுத்துக்காட்டுவோர் இரட்சகரின் இரத்தத்தின் மூலம் பாவத்திலிருந்து சுத்திகரிப்பை தேவைப்படுவார்கள். அப்போதுதான் அவர்களால் "நீதியிலுள்ள ஒரு பலியை" வழங்க முடியும், ஏனென்றால் அது விசுவாசத்தின் மூலம் அவர்களுக்கு விதிக்கப்பட்ட கிறிஸ்துவின் நீதியாகும் (2 கொரிந்தியர் 5:21).

நடைமுறை பயன்பாடு: நாம் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாதபோது தேவன் மகிழ்ச்சியடைவதில்லை. தன்னைப் புறக்கணிப்பவர்களுக்கு அவர் திருப்பிப் பதில் செய்வார். தேவன் விவாகரத்தை வெறுப்பதைப் பொறுத்தவரை (2:16), திருமண உடன்படிக்கையை தேவன் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார், அதை உடைக்க அவர் விரும்பவில்லை என்பது தெளிவாக விளங்குகிறது. நம் வாலிப வாழ்க்கைத் துணையுடன் வாழ்நாள் முழுவதும் உண்மையாக இருக்க வேண்டும். தேவன் நம் இருதயங்களைக் காண்கிறார், எனவே நம்முடைய நோக்கங்கள் என்ன என்பதை அவர் அறிவார்; அவரிடமிருந்து எதையும் மறைக்க முடியாது. அவர் திரும்பி வருவார், அவர் நீதியுள்ள நீதிபதியாக இருப்பார். ஆனால் நாம் அவரிடம் திரும்பினால், அவர் நம்மிடம் திரும்புவார் (மல்கியா 3:6).

English


முகப்பு பக்கம்
மல்கியா புத்தகம்