தேவனுடைய சர்வ வல்லமையும் மனிதனுடைய சித்தமும் எப்படி இரட்சிக்கப்படுவதில் ஒன்றாக செயல்படுகின்றது?


கேள்வி: தேவனுடைய சர்வ வல்லமையும் மனிதனுடைய சித்தமும் எப்படி இரட்சிக்கப்படுவதில் ஒன்றாக செயல்படுகின்றது?

பதில்:
தேவனுடைய சர்வ வல்லமைக்கும் மனிதனுடைய சுய சித்தம் மற்றும் பொறுப்புக்கும் உண்டான தொடர்பை நாம் புரிந்துக் கொள்வது முடியாத காரியம். தேவன் மட்டுமே அவை எப்படி ஒன்றாக இரட்சிப்பின் நோக்கத்தில் கிரியை செய்கிறது என்று அறிவார். மற்ற எந்த உபதேசத்தைக் காட்டிலும் இதில் நாம் தேவனுடைய சுபாவத்தையும் அவரோடு இருக்கிற உறவையும் புரிந்து கொள்ள இயலாது என்று ஒத்துக்கொண்டே ஆக வேண்டும். இரண்டு பக்கத்திலும் நாம் வெகுதூரம் புரிந்துக்கொள்ள முயலுவது ஒரு இரட்சிப்பைக் குறித்து தவறான புரிதலுக்கு நடத்திவிடும்.

தேவனுக்கு யார் இரட்சிக்கப்படுவார்கள் என்று தெரியும் என்று வேதவாக்கியம் சொல்லுகின்றது (ரோமர் 8:29 ; 1 பேதுரு 1:2) எபேசியர் 1:4 –ல் நம்மை தேவன் ‘‘உலகத்தோற்றத்திற்கு முன்னமே’’ முன்குறித்தார் என்று பார்க்கிறோம். வேதாகமம் விசுவாசிகளை ‘‘ தெரிந்துக் கொள்ளப் பட்டவர்கள்’’ என்று தொடர்ந்து வலியுறுத்துகின்றது. (ரோமர் 8:33, 11:5 ; எபேசியர் 1:11;கொலோசேயர் 3:12 ; I தெசலோனிக்கியர் 1:4, I பேதுரு 1:2, 2:9 மத்தேயு 24:22. மாற்கு 13:20,27, ரோமர் 11:7, I திமோத்தேயு 5:21 ; 2, திமோத்தேயு 2:10 ; தீத்து 1:10, I பேதுரு 1:1) விசுவாசிகள் இரட்சிப்புக்கென்று முன் குறிக்கப்பட்டும் தெரிந்துக்கொள்ளப்பட்டும் இருக்கிறார்கள் என்று தெளிவாகிறது (ரோமர் 9:11;11:18; 2 பேதுரு 1:10)

வேதாகமம் இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொள்வது நம்முடைய பொறுப்பு என்றும் நாம் அவரை விசுவசித்தாலே இரட்சிக்கப்படுவோம் என்றும் கூறுகின்றது. (யோவான் 3:16; ரோமர்10:9-10) தேவனுக்கு யார் இரட்சிக்கப்படுவார்கள் என்று தெரியும். அவர் யார் இரட்சிக்கப்பட வேண்டும் என்று தேர்ந்தெடுக்கிறார், நாம் இரட்சிக்கப்பட கிறிஸ்துவை தெரிந்துக்கொள்ள வேண்டும். இந்த மூன்று உண்மைகள் எப்படி வேலை செய்கின்றது என்று நம்முடைய அறிவைக்கொண்டு நாம் புரிந்துக் கொள்ள முடியாது. (ரோமர் 11:33-31) சுவிசேஷத்தை முழு உலகத்திற்கு கொண்டு செல்வது நம்முடைய பொறுப்பு. (மத்தேயு 28:18-20 ; அப்போஸ்தலர் நடபடிகள் 1:8) முன்குறிக்கப்படுதல், தேர்ந்தெடுக்கப்படுதல் மற்றும் முன்னறிந்து கொள்ளுதல் போன்றவற்றை கடவுளிடம் விட்டு விட்டு சுவிசேஷத்தை பிரசங்கிப்பதில் கீழ்படிதலுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
தேவனுடைய சர்வ வல்லமையும் மனிதனுடைய சித்தமும் எப்படி இரட்சிக்கப்படுவதில் ஒன்றாக செயல்படுகின்றது?