கேள்வி
திருமணத்திற்கு முன் எந்த அளவுக்கு நெருங்கிய உறவு வைத்துக்கொள்வது சரியானது?
பதில்
“மேலும், பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையுமாகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது” என்று எபேசியர் 5:3 கூறுகிறது. அசுத்தமான செயல் அல்லது நடத்தையாக கருதப்படுகிறது எதுவோ அது ஒரு கிறிஸ்தவனுக்கு தகுதியானது அல்ல. திருமணத்திற்க்கு முன்பாக தம்பதியினர் எப்படிபட்ட சரீர பிரகாரமான செயல்களில் ஈடுபடவேண்டும் அல்லது ஈடுபட கூடாது என்பதை குறித்து வேதாகமம் எந்த பட்டியலும் தருவதில்லை. எனினும், வேதாகமம் இதைப்பற்றி குறிப்பாக ஒன்றும் சொல்லவில்லை என்பதற்காக திருமணத்திற்கு முன் சரீர உறவு (உடலுறவு) கொள்வதை தேவன் அங்கீகரிக்கிறார் என்று அர்த்தமல்ல. பாலியல் உறவின் உணர்ச்சிகளை அடையும் செயல்கள் திருமணமானவர்களுக்கு தான் உரியது, ஏனென்றால் அப்படிபட்ட செயல்கள் பாலியல் உறவு கொள்ளவைக்கும். எனவே இப்படிப்பட்ட செயல்களில் திருமணத்திற்கு முன் தம்பதியினர் ஈடுபடாமல் அதை தவிர்க்க வேண்டும்.
திருமணத்திற்கு முன்பதாக இப்படிபட்ட செயலை செய்யலாமா என்கிற சந்தேகத்தை எழுப்புகிற எந்த செயலையும் திருமணமாகாத ஜோடிகள் நிச்சயமாக தவிர்க்கவேண்டும் (ரோமர் 14:23). பாலியல் உறவு சமந்தப்பட்ட எந்த ஒரு மற்றும் எல்லா செயல்களும் திருமணமானவர்களுக்கு மாத்திரம் தான் உரியது. திருமணமாகாத ஜோடிகள் அவர்களைப் பாலியல் உறவு கொள்கிற வகையில் சோதிக்கும் எப்படிப்பட்ட செயலையும் மற்றும் அசுத்தமாக தோன்றுகிற எல்லா காரியங்களையும் தவிர்க்க வேண்டும். திருமணத்துக்கு முன், ஜோடிகள் கரங்களை பிடிப்பது, கட்டி அணைப்பது, சிரிதளவில் முத்தமிடுவது போன்ற காரியங்களையல்லாமல், அதற்கும் மீறி போகக்கூடாது என்று அநேக போதகர்கள் மற்றும் கிறிஸ்தவ ஆலோசகர்கள் சொல்லுகிறார்கள். ஒரு திருமணமான தம்பதியினர் தங்கள் மத்தியில் எந்த அளவிற்கு பகிர்ந்துகொள்ளுகிறார்களோ, அந்த அளவிற்கு அது அவர்கள் திருமணத்தில் உள்ள தாம்பத்ய உறவை விசேஷித்தமானதாக மாற்றும்.
English
திருமணத்திற்கு முன் எந்த அளவுக்கு நெருங்கிய உறவு வைத்துக்கொள்வது சரியானது?