settings icon
share icon
கேள்வி

நீங்கள் எவ்வளவு இளமையாக இருக்கும்போது உங்களுடைய இரட்சகராக இருக்கும்படிக்கு இயேசுவிடம் கேட்கலாம்?

பதில்


இரட்சிப்புக்கு நிச்சயமாக வயது தேவை இல்லை. இயேசுவே சொன்னார், "சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது" (மத்தேயு 19:14). பிள்ளைகள் பாவம் செய்துவிட்டார்கள் என்பதை புரிந்து கொள்ளும் அளவுக்கு வயது வந்தவுடன் (ரோமர் 3:23), இயேசு அவர்களின் பாவங்களுக்கான தண்டனையை செலுத்த மரித்தார் (ரோமர் 5:8; 6:23), என்பதை உணர்ந்து இரட்சிப்புக்காக அவர்கள் இயேசுவின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் (யோவான் 3:16), பின்னர் அவர்கள் இரட்சிக்கப்படக்கூடிய வயதாகிவிட்டனர் எனலாம்.

இரட்சிப்பின் கோட்பாட்டின் ஒரு பகுதியாக இருக்கும் அனைத்து சிக்கலான பிரச்சினைகளையும் ஒரு பிள்ளை புரிந்து கொள்ள வேண்டியதில்லை. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் அடிப்படை பிரச்சினைகளை (மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி) புரிந்துகொள்வதை உறுதி செய்வது முக்கியம், ஆனால் அப்போஸ்தலர் 16:31 இன் வாக்குத்தத்தம் ஒரு வயது வந்தவர் அல்லது பிள்ளையைப் பொறுத்தவரை சமமான உண்மை: "கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீ இரட்சிக்கப்படுவாய்."

சிறு பிள்ளைகள், விசுவாசிகளுக்கோ அல்லது அவிசுவாசிகளுக்கோ பிறந்திருந்தாலும், தேவனால் தேர்ந்தெடுக்கப்படலாம், கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டு, பரிசுத்த ஆவியின் கிரியையை அவர்களின் இருதயங்களில் வைத்திருக்கலாம், அதனால் பரலோகத்தில் பிரவேசிக்கலாம். அவர்களின் வாழ்க்கையின் எந்தக் கட்டத்தில் அவர்கள் இந்த விஷயங்களை உணர்கிறார்கள் என்பது பிள்ளைக்கு பிள்ளை மாறுபடும். சில இளம் பிள்ளைகள் குறிப்பாக மென்மையான இருதயங்களைக் கொண்டுள்ளனர், அவர்களுக்காக இயேசு மரித்தார் என்று கேள்விப்பட்டவுடன், அவர்களின் பாவ சுபாவங்களை உடனடியாக உணர்ந்து பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதிக சாமான்ய ஆளுமைகளைக் கொண்ட மற்றவர்கள் இன்னும் வயதாகும்வரை இந்த விழிப்புணர்வுக்கு வரமாட்டார்கள். இருதயத்தின் எண்ணங்களை கர்த்தர் மட்டுமே அறிவார், அவருடைய பரிபூரண விருப்பத்திற்கும் நேரத்திற்கும் ஏற்ப "இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவும்" (லூக்கா 19:10) நாம் அவரையே நம்புகிறோம்.

English



முகப்பு பக்கம்

நீங்கள் எவ்வளவு இளமையாக இருக்கும்போது உங்களுடைய இரட்சகராக இருக்கும்படிக்கு இயேசுவிடம் கேட்கலாம்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries