settings icon
share icon
கேள்வி

பானம் அல்லது திராட்சை ரசம் கர்த்தருடைய பந்திக்கு பயன்படுத்தப்பட வேண்டுமா?

பதில்


கர்த்தருடைய பந்தியின் போது பானம் பரிமாறுவது (மற்றும்/அல்லது பெறுவது) ஏற்கத்தக்கதா என்பது கிறிஸ்தவர்களிடையே சரியான விவாதமாகும். நாம் தலைப்பை ஆராயும்போது, முக்கியமான பிரச்சினையை நாம் இழந்து விடக்கூடாது, மேலும் கோப்பையில் உள்ள ரசம் பிரதிபலிக்கிறது—நமது கர்த்தர் மற்றும் இரட்சகரின் சிந்திய இரத்தம் புதிய உடன்படிக்கையை நிறுவுதல் ஆகும்.

முதலாவதாக, வேதத்தில் பானம் பற்றிய ஒரு கண்ணோட்டம். பழைய ஏற்பாட்டில் மது அருந்தப்பட்டது என்பது தெளிவாக உள்ளது. நோவா குடிபோதையில் தனது கூடாரத்தில் நிர்வாணமாக படுத்திருந்தபோது அதன் பயன்பாட்டை (அல்லது தவறாகப் பயன்படுத்துவதை) முதலில் பார்க்கிறோம் (ஆதியாகமம் 9:21). பின்னர், மெல்கிசெதேக் ராஜா ஆபிராமுக்கு திராட்சரசம் வழங்குவதைப் பார்க்கிறோம் (ஆத0ியாகமம் 14:17-18). யாத்திராகமம் 29:40 பலியின் ஒரு பகுதியாக திராட்சரசமும் பயன்படுத்த தேவன் கட்டளையிடுகிறார். தாவீது ராஜாவானபோது, அவருடைய ஆட்கள் மூன்று நாட்கள் உணவு மற்றும் திராட்சரசத்துடன் விருந்தளித்து கொண்டாடினர் (1 நாளாகமம் 38-40). உண்மையில், சங்கீதம் 104:15 தேவன் "மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சரசத்தை" உருவாக்கினார் என்று நமக்குச் சொல்கிறது. "பழமையான திராட்சரசம்" (ஏசாயா 25:6) உள்ளடக்கிய பணக்கார உணவை ஒருநாள் கர்த்தர் தனது மக்களுக்கு விருந்துக்கு தயார் செய்வார் என்ற வாக்குறுதியும் நம்மிடம் உள்ளது.

புதிய ஏற்பாட்டில், இயேசுவின் முதல் அதிசயம் கானாவில் நடந்த திருமணத்தில் தண்ணீரை திராட்சரசமாக மாற்றியது (யோவான் 2:1-11). மேலும் நம் கர்த்தர் திராட்சரசத்தை மட்டும் அருந்தவில்லை (லூக்கா 7:34) ஆனால் அவர் அதை நம்முடன் பரலோகத்தில் குடிப்பார் என்று கூறினார் (மத்தேயு 26:29). கூடுதலாக, அப்போஸ்தலன் பவுல் தீமோத்தேயுவின் வயிற்றை நன்றாக மாற்றுவதற்காக "தண்ணீருக்கு மட்டும்" பதிலாக திராட்சரசத்தைப் பயன்படுத்தும்படி அறிவுறுத்தினார் (1 தீமோத்தேயு 5:23).

(வேதாகமத்தில் திராட்சரசம் பற்றிய அடிக்கடி குறிப்புகள் இருந்தபோதிலும், மது குடிப்பழக்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பது தெளிவாகிறது. எபேசியர் 5:18 அதை மிகவும் சுருக்கமாக கூறுகிறது: "துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல்.")

எனவே, கர்த்தருடைய பந்தியின்போது மது அருந்துவதை ஆதரிப்பவர்கள் தங்கள் நிலையை ஆதரிக்க உள்ள வேதவசனங்களை மேற்கோள் காட்டுகின்றனர், மேலும் மேற்கண்ட எடுத்துக்காட்டுகள் (நோவாவை தவிர்த்து) திராட்சைரசம் எவ்வாறு சரியாகவும் மிதமாகவும் பயன்படுத்தப்படுகிறதோ அது உண்மையில் ஒரு நல்ல விஷயமாக இருக்கும் என்பதை பிரதிபலிக்கிறது.

மதுவைப் பயன்படுத்தக் கூடாது என்று நினைப்பவர்களும் சில கடுமையான வாதங்களை முன்வைக்கிறார்கள், அவர்களும் மேற்கோள் காட்டுவதற்கு வேதப்பூர்வமான குறிப்புகளைக் கொண்டுள்ளனர். உதாரணமாக, நீதிமொழிகள் 4:17 இல் மதுவுக்கு எதிரான எச்சரிக்கைகளைப் பார்க்கவும்; 20:1 மற்றும் 23:29-32. மற்றும் லேவியராகமம் 10:9 இல், கர்த்தர் ஆரோனிடம், அவரும் அவருடைய மகன்களும் ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழையும் போது மது அருந்தக் கூடாது என்றும் அப்படி செய்யும் பட்சத்தில் அவர்கள் கொலையுன்னப்பட வேண்டும் என்றும் தண்டனை விதிக்கிறார்.

கர்த்தருடைய விருந்தில் மது அல்லது திராட்சை ரசம் இவற்றில் எதைப் பயன்படுத்த வேண்டும்? இங்கே ஒன்று விரும்பத்தக்கது அல்லது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்கிறதான கடினமான மற்றும் கண்டிப்பான வேதாகம விதி எதுவும் இல்லை. உண்மையில், கடைசி இராப்போஜனத்தைக் கையாளும் பகுதிகள் ஒருபோதும் "மது" அல்லது "திராட்சை ரசம்" என்று கூட குறிப்பிடவில்லை; அவர்கள் வெறுமனே "பாத்திரம்" என்று தான் குறிப்பிடுகின்றன. இருப்பினும், கருத்தில் கொள்ள சில நடைமுறை விஷயங்கள் உள்ளன. ஆல்கஹால் இருப்பது எந்த வகையிலும் கவனச்சிதறலாக இருந்தால், அது சரியான கருதல் ஆகும். நிச்சயமாக, மது அருந்துவதற்கு எதிராக ஒரு விசுவாசம் இருப்பதால் யாராவது கர்த்தருடைய பந்தியிலிருந்து விலகுவதை எந்த சபையும் விரும்பவில்லை. கிறிஸ்துவின் அறிவுரை என்னவென்றால், சபையானது "நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்" என்பதாகும் (1 கொரிந்தியர் 11:25). மதுவின் இருப்பு ஒருவரின் கவனத்தை இழக்கச்செய்து அதன் மூலம் கிறிஸ்துவின் கட்டளையைப் புறக்கணிப்பது மெய்யாகவே பரிதாபமாக இருக்கும்.

தேவனுடைய வார்த்தையில் எங்கும் பாத்திரத்தின் உள்ளடக்கங்களின் நொதித்தல் நிலைக்கு உள்ள ஒரு தேவையை நாம் காணவில்லை. ஆயினும்கூட, இரட்சகருக்கு சிறந்த கணம் அளிப்பது பற்றி ஒருவருக்கு வலுவான கருத்து இருந்தால், அவர் அந்த நம்பிக்கையைப் பிடித்துக்கொள்வது நல்லது. ஆனால் பாத்திரம் எதைக் குறிக்கிறது என்பதை மறந்துவிடாமல், தனிப்பட்ட கருத்து விஷயங்களில் கிறிஸ்துவில் ஒரு சகோதரர் அல்லது சகோதரியைத் நியாயந்தீர்காமல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

Englishமுகப்பு பக்கம்

பானம் அல்லது திராட்சை ரசம் கர்த்தருடைய பந்திக்கு பயன்படுத்தப்பட வேண்டுமா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries