settings icon
share icon
கேள்வி

தேவன் ஏன் நம்மைப் சிருஷ்டித்தார்?

பதில்


“தேவன் நம்மை ஏன் படைத்தார்?” என்ற கேள்விக்கான சுருக்கமான பதில் “அவருடைய மகிழ்ச்சிக்காக” என்பதாகா இருக்கிறது. வெளிப்படுத்துதல் 4:11 கூறுகிறது, “கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர், நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்.” கொலோசெயர் 1:16 இந்த விஷயத்தை மீண்டும் வலியுறுத்துகிறது: “சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது”. தேவனின் மகிழ்ச்சிக்காக படைக்கப்பட்டிருப்பது தேவனை மகிழ்விப்பதற்காகவோ அல்லது அவருக்கு கேளிக்கைகளை வழங்குவதற்காகவோ மனிதகுலம் உருவாக்கப்பட்டது என்று அர்த்தமல்ல. தேவன் ஒரு படைப்பாற்றல் மிக்கவர், அதை உருவாக்குவது அவருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. தேவன் ஒரு தனிப்பட்ட மனிதர், மேலும் அவர் ஒரு உண்மையான உறவைக் கொண்டிருக்கக்கூடிய பிற மனிதர்களைக் கொண்டிருப்பது அவருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

தேவனின் சாயலிலும் ரூபத்திலும் உருவாக்கப்படுவதால் (ஆதியாகமம் 1:27), மனிதர்களுக்கு தேவனை அறிந்து கொள்ளும் திறன் உள்ளது, எனவே அவர்கள் அவரை நேசிக்கவும், அவரை வணங்கவும், அவருக்கு சேவை செய்யவும், அவருடன் ஐக்கியம் கொள்ளவும் முடியும். தேவனுக்கு மனிதர்கள் தேவை என்பதற்காக அவர் மனிதர்களை உருவாக்கவில்லை. தேவனாகிய அவருக்கு எதுவும் தேவையில்லை. எல்லா நித்திய காலங்களிலும், அவர் தனிமையை உணரவில்லை, எனவே அவர் ஒரு "சிநேகிதனை" தேடவில்லை. அவர் நம்மை நேசிக்கிறார், ஆனால் இது நாம் அவருக்கு தேவைப்படுவதற்கு சமமானதல்ல. நாம் ஒருபோதும் இல்லாதிருந்தாலும், தேவன் இன்னும் எப்போதும்போல தேவனாகவே இருப்பார் – அவர் சதாகாலமும் மாறாதவர் (மல்கியா 3:6). நானாக இருக்கிறேன் (யாத்திராகமம் 3:14) என்பவர் அவருடைய சொந்த நித்திய இருப்பு குறித்து ஒருபோதும் அதிருப்தி அடையவில்லை. அவர் பிரபஞ்சத்தை உருவாக்கியபோது, அவர் தனக்கு மகிழ்வித்ததைச் செய்தார், தேவன் பரிபூரணராக இருப்பதால், அவருடைய செயல் சரியானது ஆகும். "அது மிகவும் நன்றாக இருந்தது" (ஆதியாகமம் 1:31).

மேலும், தேவன் தனக்கு சமமான “சகாக்களை” அல்லது நிகரான மனிதர்களை உருவாக்கவில்லை. தர்க்கரீதியாக, அவரால் அவ்வாறு செய்ய முடியாது. தேவன் சமசக்தி, புத்திசாலித்தனம் மற்றும் பரிபூரணமான மற்றொரு உயிரினத்தை உருவாக்கினால், இரண்டு தெய்வங்கள் இருக்கும் என்ற எளிய காரணத்திற்காக அவர் ஒரே உண்மையான தேவனாக இருப்பதை நிறுத்திவிட்டார் – அப்படி செய்வது சாத்தியமற்றதாக இருக்கும். “கர்த்தரே தேவன், அவரையல்லாமல் வேறொருவரும் இல்லை” (உபாகமம் 4:35). தேவன் உருவாக்கும் எதுவாக இருந்தாலும் அது அவரை விட குறைவானதாக இருக்க வேண்டும். தயாரிக்கப்பட்ட எந்த ஒரு விஷயமும் ஒருபோதும் அதை தயாரித்தவரை விட பெரியதாக இருக்க முடியாது.

தேவனின் முழுமையான இறையாண்மையையும் பரிசுத்தத்தையும் உணர்ந்து, அவர் மனிதனை அழைத்து “மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினார்” என்று நாம் கண்டு ஆச்சரியப்படுகிறோம் (சங்கீதம் 8:5) மேலும் அவர் நம்மை “சிநேகிதர்கள்” என்று அழைப்பதற்கு இணங்குவார் (யோவான் 15:14-15 ) என்பதையும் கண்டு வியக்கிறோம். தேவன் நம்மை ஏன் படைத்தார்? தேவன் தம்முடைய இன்பத்திற்காக நம்மைப் படைத்தார், ஆகவே, அவருடைய படைப்பாக, அவரை அறிந்து கொள்வதில் நமக்கு இன்பம் கிடைக்கும்.

English



முகப்பு பக்கம்

தேவன் ஏன் நம்மைப் சிருஷ்டித்தார்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries