settings icon
share icon
கேள்வி

கிறிஸ்துவில் நான் யாராக இருக்கிறேன்?

பதில்


2 கொரிந்தியர் 5:17-ன் படி, “ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.” வேதாகமத்தில் “புதியது” என்று மொழிபெயர்க்கப்பட இரண்டு கிரேக்க வார்த்தைகள் உள்ளன. முதல் வார்த்தை, நியோஸ், இது சமீபத்தில் இப்போது செய்யப்பட்ட ஒன்றைக் குறிக்கிறது, ஆனால் இதே போன்று ஏற்கனவே பல இதைப் போலவே செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதும் அடங்கும். இந்த வசனத்தில் “புதியது” என்று மொழிபெயர்க்கப்பட்ட சொல் கைனோஸ் என்ற வார்த்தையாகும், இதன் பொருள் “தற்போது உருவாக்கப்பட்டதும் வேறு எதையும் போலல்லாமல் உருவாக்கப்பட்ட ஒன்று” என்பதாகும். கிறிஸ்துவில், தேவன் வானங்களையும் பூமியையும் முதலில் படைத்ததைப் போலவே, நாம் முற்றிலும் புதிய படைப்பாக உருவாக்கப்படுகிறோம் - அவர் அவைகளை ஒன்றுமில்லாமையில் இருந்து உண்டாக்கினார், அதுபோலவே அவர் நம்முடனும் செய்கிறார். அவர் வெறுமனே நம் பழையவற்றை சுத்தம் செய்வதில்லை; மாறாக அவர் நம்மை முற்றிலும் புதியவைகளாக உருவாக்குகிறார். நாம் கிறிஸ்துவில் இருக்கும்போது, நாம் “திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாக” (2 பேதுரு 1:4) இருக்கிறோம். தேவனே, அவருடைய பரிசுத்த ஆவியானவர் என்னும் நபரில், நம் இருதயங்களில் வசிக்கிறார். நாம் கிறிஸ்துவில் இருக்கிறோம், அவர் நம்மில் இருக்கிறார்.

கிறிஸ்துவில், நாம் மீண்டும் பிறப்பிக்கப்படுகிறோம், புதுப்பிக்கப்படுகிறோம், மீண்டும் பிறக்கிறோம், இந்த புதிய படைப்பு ஆவிக்குரிய சிந்தனையுடையது, அதேசமயம் பழைய சுபாவம் இயல்பாகவே நம்மில் இருக்கிறது. புதிய சுபாவம் தேவனோடு ஐக்கியம் கொள்கிறது, அவருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிகிறது, அவருடைய சேவைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இவை யாவும் பழைய சுபாவமானது செய்ய இயலாத அல்லது செய்ய விரும்பாத செயல்கள் ஆகும். பழைய சுபாவமானது ஆவியின் விஷயங்களுக்கு இறந்துவிட்டது, தன்னை புதுப்பிக்க முடியாததாய் இருக்கிறது. இது “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்துவிட்டது” (எபேசியர் 2:1) மற்றும் இது ஒரு சாதாரண நிலையில் அல்லாமல் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிலையில் மட்டுமே உயிர்ப்பிக்க முடியும், இது நாம் கிறிஸ்துவிடம் வந்து அவரிடமிருந்து தங்கியிருக்கும்போது நிகழ்கிறது. கிறிஸ்து நமக்கு முற்றிலும் புதிய மற்றும் பரிசுத்தமான சுபாவத்தையும் அழியாத நித்தியஜீவனையும் தருகிறார். பாவத்தின் காரணமாக தேவனுக்கு முன்பு இறந்த நம் பழைய வாழ்க்கை புதைக்கப்பட்டது, அவருடன் "புதிதான ஜீவனுள்ளவர்களாக நடக்க" நாம் எழுப்பப்பட்டிருக்கிறோம் (ரோமர் 6:4).

நாம் கிறிஸ்துவைச் சேர்ந்தவர்களாக இருந்தால், நாம் அவருடன் ஐக்கியப்பட்டிருக்கிறோம், இனி நாம் பாவத்திற்கு அடிமைகளாக இருக்க மாட்டோம் (ரோமர் 6:5-6); நாம் அவரோடு ஜீவனுள்ளவர்களாக இருக்கிறோம் (எபேசியர் 2:5); நாம் அவருடைய சாயலுடன் ஒத்துப்போகிறோம் (ரோமர் 8:29); நாம் ஆக்கினைத்தீர்ப்புக்கு விடுபட்டு, மாம்சத்தின்படி அல்ல, ஆவியின் படி நடக்கிறோம் (ரோமர் 8:1); நாம் மற்ற விசுவாசிகளுடன் கிறிஸ்துவின் சரீரத்தில் ஒரு பகுதியாக இருக்கிறோம் (ரோமர் 12:5). விசுவாசி இப்போது ஒரு புதிய இருதயத்தைக் கொண்டிருக்கிறார் (எசேக்கியேல் 11:19) மற்றும் "கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்” (எபேசியர் 1:3).

நாம் நம்முடைய வாழ்க்கையை கிறிஸ்துவுக்குக் ஒப்புக்கொடுத்திருந்தாலும், நம்முடைய இரட்சிப்பில் உறுதியாக இருந்தாலும், நாம் ஏன் அடிக்கடி விவரிக்கிற விதத்தில் வாழவில்லை என்று நாம் ஆச்சரியப்படலாம். ஏனென்றால், நம்முடைய புதிய சுபாவங்கள் நம் பழைய மாம்ச உடல்களில் வாழ்கின்றன, மேலும் இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்ச்சியாக போரிடுகின்றன. பழைய சுபாவம் இறந்துவிட்டது, ஆனால் புதிய சுபாவம் இன்னும் அது வாழும் பழைய “கூடாரத்தை” எதிர்த்துப் போராட வேண்டும். தீமையும் பாவமும் இன்னும் இருக்கின்றன, ஆனால் விசுவாசி இப்போது அவைகளை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்கிறான், அவைகள் ஏற்கனவே ஒரு முறை செய்ததைப் போல இனி அவரைக் கட்டுப்படுத்த மாட்டாது. கிறிஸ்துவில், பாவத்தை எதிர்ப்பதற்கு நாம் இப்போது தேர்வு செய்யலாம், அதேசமயம் பழைய சுபாவம் முழுவதும் முடிந்து இல்லாமற்போய்விடவில்லை. புதிய சுபாவத்திற்கு தேவனுடைய வார்த்தை, ஜெபம் மற்றும் கீழ்ப்படிதல் ஆகியவற்றின் மூலம் உணவளிக்க அல்லது அந்த விஷயங்களை புறக்கணிப்பதன் மூலம் மாம்சத்திற்கு உணவளிக்க இப்போது நமக்கு விருப்பம் உள்ளது.

நாம் கிறிஸ்துவில் இருக்கும்போது, “நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோம்” (ரோமர் 8:37) மேலும் எல்லாவற்றையும் சாத்தியமாக்கும் நம்முடைய இரட்சகரில் சந்தோஷப்படலாம் (பிலிப்பியர் 4:13). கிறிஸ்துவில் நாம் நேசிக்கப்படுகிறோம், மன்னிக்கப்படுகிறோம், பாதுகாப்பாக இருக்கிறோம். கிறிஸ்துவில் நாம் ஏற்றுக்கொள்ளப்படுகிறோம், நியாயப்படுத்தப்படுகிறோம், மீட்கப்படுகிறோம், சமரசம் செய்யப்படுகிறோம், தேர்ந்தெடுக்கப்படுகிறோம். கிறிஸ்துவில் நாம் வெற்றி பெறுகிறோம், மகிழ்ச்சியும் சமாதானமும் நிறைந்திருக்கிறோம், வாழ்க்கையில் உண்மையான அர்த்தத்தை வழங்கப்பெற்றிருக்கிறோம். கிறிஸ்து எவ்வளவு ஒரு அற்புதமான மீட்பர்!

Englishமுகப்பு பக்கம்

கிறிஸ்துவில் நான் யாராக இருக்கிறேன்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries