கடவுளை உண்டாக்கினவர் யார்? கடவுள் எங்கிருந்து வந்தார்?


கேள்வி: கடவுளை உண்டாக்கினவர் யார்? கடவுள் எங்கிருந்து வந்தார்?

பதில்:
கடவுள் நம்பிக்கையில்லாதவர்களும், கடவுளைக்குறித்து சந்தேகப் படுகிறவர்களும் பொதுவாக ஒரு வாதத்தை முன் வைக்கிறார்கள். அது என்னவென்றால் எல்லாப் பொருட்களுக்கும் மூலக்காரணம் இருக்குமேயானால் கடவுளுக்கும் ஒரு மூலக்காரணம் அவசியம் என்பதே. முடிவு என்வென்றால் ஒரு வேளை கடவுளுக்கு மூலக்காரணம் தேவைப்பட்டால் அவர் கடவுளாகவே இருக்க முடியாது. (அப்படி கடவுள் கடவுளாக இராவிட்டால் கடவுளே கிடையாது) 'கடவுளை யார் உண்டாக்கினார்' என்ற அடிப்படை கேள்வியைவிட இது மிகவும் சிக்கலான கேள்வி. ஒன்றுமில்லாமையிலிருந்து எது ஒன்றும் வராது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். 'கடவுள் ஏதோ ஒன்றானால்' அவருக்கு மூலக்காரணம் இருக்க வேண்டும் அல்லவா?

இந்த கேள்வி தந்திரமானது. ஏனென்றால் கடவுள் எங்கிருந்தோ வந்தார் என்ற பொய்யான யூகத்தை உருவாக்கி அது எங்கிருந்திருக்கும் என்றும் கேட்கிறது. இதற்கு பதில் என்னவென்றால் இந்த கேள்வியே முட்டாள்தனமானது என்பதுதான். இது எப்படி இருக்கிறது என்றால் 'நீல நிறம் எப்படி மணக்கும்?' என்று கேட்பது போல் இருக்கின்றது. மணக்கக்கூடிய ஒரு வகையான பொருள் நீல நிறம் கிடையாது. எனவே இந்த கேள்வியே தவறானது. அதேபோல கடவுள் என்பவர் உண்டாக்கப்படுகின்ற ஒன்று அல்ல. மூலக்காரணம் உடைய வகையைச் சேர்ந்தவர் அல்ல. கடவுள் உருவாக்கப்பட முடியாதவர், மூலக்காரணத்தை உடையவருமில்லை. அவர் இருக்கிறவராகவே இருக்கிறார்.

இது நமக்கு எப்படி தெரியும்? ஒன்றுமில்லாமையிலிருந்து ஒன்றுமில்லாமை வராது. ஒன்றுமில்லாமை என்ற ஒரு காலகட்டம் இருந்திருக்குமேயானால் நாம் காண்கின்ற எதுவுமே இருந்திருக்காது. ஆனால் இவையெல்லாம் இருக்கின்றதே. ஆகவே எதுவுமே இல்லாத வெறுமை நிலை என்று எதுவும் இருந்திருக்க முடியாது. ஏதோ ஒன்று எப்போதுமே இருந்துக் கொண்டு இருந்திருக்க வேண்டும். அந்த எப்போதுமே இருந்து கொண்டு இருக்கிற பொருளைத்தான் நாம் கடவுள் என்கிறோம். கடவுள் என்பவர் மூலக்காரணமில்லாத ஒருவர், அவரிலிருந்துதான் எல்லாமே தோன்றியது. கடவுள் என்பவர் உருவாக்கப்படாத சிருஷடிகர், அவர் அண்டசராசரங்களையும் அதிலுள்ள யாவற்றையும் சிருஷடித்தார்.

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
கடவுளை உண்டாக்கினவர் யார்? கடவுள் எங்கிருந்து வந்தார்?