settings icon
share icon
கேள்வி

தேவன் இப்போது எங்கே இருக்கிறார்? வேதனையில் இருக்கும்போது போது தேவன் எங்கே?

பதில்


தேவன் பரலோகத்தில் அவருடைய பரிசுத்த சிங்காசனத்திலிருந்து தேசங்களை ஆளுகிறார் என்று வேதாகமம் கற்பிக்கிறது (சங்கீதம் 47:8; ஏசாயா 6:1, 66:1; எபிரேயர் 4:16). தேவனுடைய இருப்பு பரலோகத்தில் ஏதோ ஒரு வகையில் தனித்துவமானது என்பதை நாம் அறிந்திருந்தாலும், வேதத்தின் போதனைகள் தேவன் எங்கும் நிறைந்திருப்பதை தெளிவுபடுத்துகின்றன (அதாவது எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் இருக்கும் நிலை). வேதத்தின் ஆரம்பத்தில் இருந்து, தேவன் பூமியின் மேல் இருப்பதை நாம் காண்கிறோம், பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார் (ஆதியாகமம் 1:2). தேவன் தனது படைப்பால் உலகை நிரப்பினார், அவருடைய இருப்பு மற்றும் மகிமை முழு பூமியிலும் தொடர்ந்து வாழ்கிறது (எண்கள் 14:21). தேவனுடைய பிரசன்னம் பூமியில் அசைவாடி, அவருடைய படைப்புடன் தொடர்புகொள்வதற்கான பல எடுத்துக்காட்டுகள் உள்ளன (ஆதியாகமம் 3:8; உபாகமம் 23:14; யாத்திராகமம் 3:2; 1 ராஜாக்கள் 19:11-18; லூக்கா 1:35; அப்போஸ்தலர் 16:7). எபிரெயர் 4:13 கூறுகிறது, " அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.” எரேமியா 23:24, "யாவனாகிலும் தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ளக்கூடுமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.” சங்கீதம் 139 தேவனுடைய சர்வ வியாபத்தில் ஒரு அற்புதமான ஆய்வு.

தேவன் எங்கே?

நீங்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பவராக இருந்தால், தேவன் உங்களுடன், உங்களுக்கு அருகில், உங்களுக்கு மேலே, உங்களுக்குள் இருக்கிறார். தேவனுடைய இருப்பு மற்றும் கவனிப்பு உங்களை ஒருபோதும் விட்டுவிடாது. நீங்கள் இயேசு கிறிஸ்துவின் விசுவாசியாக இல்லாவிட்டால், தேவன் உங்களுக்கு முன்னால் இருக்கிறார், உங்களை அழைக்கிறார், உங்கள் அருகில் வருகிறார், அவர் உங்களுக்கு கொடுக்க விரும்பும் அன்பு, இரக்கம் மற்றும் கிருபையை உங்களுக்கு வழங்குகிறார். இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனுடனான உங்கள் உறவு பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால், தயவுசெய்து "தேவனுடன் ஒப்புரவாகுங்கள்" பற்றிய எங்கள் கட்டுரையைப் படியுங்கள். "தேவன் எங்கே?" என்பதை விட ஒரு சிறந்த கேள்வி. "தேவனுடனான உறவில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?" என்பதாகும்.

வேதனையின் போது தேவன் எங்கே?

வேதனைமிகுந்த சோதனைகள் மற்றும் சந்தேகத்தின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் போது இந்த கேள்விக்கான பதிலை நாம் அறிய விரும்புகிறோம். இயேசு கூட, சிலுவையில் அறையப்பட்டபோது, "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னை கைவிட்டீர்?" (மத்தேயு 27:46) என்று பலத்த சத்தமாய் கேட்டபோது அக்காலத்து பார்வையாளர்களுக்கும், அவரது ஜீவ சரிதையை முதலில் படித்தவர்களுக்கும், தேவன் இயேசுவை கைவிட்டார் என்பதுபோல தோன்றுகிறது, எனவே நம் இருண்ட தருணங்களில் அவர் நம்மையும் கைவிடுவார் என்று நாம் வெளிப்படையாக முடிவு செய்கிறோம். ஆயினும், சிலுவையில் அறையப்பட்ட பிறகு நிகழ்ந்த நிகழ்வுகளை தொடர்ந்து கவனித்தபின், தேவனுடைய அன்பிலிருந்து நம்மை எதுவும் பிரிக்க முடியாது என்னும் உண்மை தெரியவருகிறது, மரணம் கூட நம்மை தேவனை விட்டு பிரிக்க முடியாது (ரோமர் 8:37-39). இயேசு சிலுவையில் அறையப்பட்ட பிறகு, அவர் மகிமைப்படுத்தப்பட்டார் (1 பேதுரு 1:21; மாற்கு 16:6, 19; ரோமர் 4:24-25). இந்த உதாரணத்திலிருந்து மட்டும் நாம் நம் வேதனையின் மத்தியில் தேவனுடைய இருப்பை உணரவில்லை என்றாலும் கூட, அவர் நம்மை ஒருபோதும் விட்டுவிலகமாட்டார் அல்லது கைவிட மாட்டார் என்ற அவருடைய வாக்குறுதியை நாம் இன்னும் நம்ப முடியும் (எபிரேயர் 13:5). "தேவன் விரும்புவதை நிறைவேற்றுவதற்காக அவர் வெறுப்பதை சில நேரங்களில் அனுமதிக்கிறார்" (ஜோனி எரிக்சன் தடா).

தேவன் பொய் சொல்ல மாட்டார், அவர் மாறமாட்டார், அவருடைய வார்த்தை என்றென்றும் உண்மையாகவே இருக்கும் என்பதில் நாம் மிகுந்த நம்பிக்கை வைக்கிறோம் (எண்கள் 23:19; 1 சாமுவேல் 15:29; சங்கீதம் 110:4; மல்கியா 3:6; எபிரெயர் 7:21; 13:8, யாக்கோபு 1:17; 1 பேதுரு 1:25). வேதனையான சூழ்நிலைகளில் நாம் இதயத்தை இழக்கவில்லை, ஏனென்றால் தேவனுடைய வாயிலிருந்து தோன்றிய ஒவ்வொரு வார்த்தையிலும் நாம் நம்பிக்கையுடன் வாழ்கிறோம், காணப்பட்ட அல்லது உணரப்பட்டவற்றில் நம்பிக்கை வைக்கவில்லை. இந்த பூமியில் நாம் அனுபவிக்கும் அனைத்து துன்பங்களையும் விட நம்முடைய இலகுவான மற்றும் கொஞ்சகால பிரச்சனைகள் நமக்கு ஒரு நித்திய மகிமையை வைத்திருக்கின்றன என்று நாம் தேவனை நம்புகிறோம். எனவே, நாம் கான்கின்றவை தற்காலிகமானது என்று நாம் அறிந்தும் நம்புவதால், காணக்கூடாதவை மீது அல்ல, கண்ணுக்குத் தெரியாதவற்றின் மீதே நம் கண்களை வைக்கிறோம் (2 கொரிந்தியர் 4:16-18; 5:7). தேவனுடைய வார்த்தையையும் நாம் நம்புகிறோம், அவருடைய நோக்கத்தின்படி அழைக்கப்படுகிற அவரை நேசிப்பவர்களின் நன்மைக்காக அவர் தொடர்ந்து ஒன்றாக கிரியை செய்கிறார் (ரோமர் 8:28). தேவனுடைய காரியங்களைச் செய்யும் நல்ல முடிவை நாம் எப்போதும் காணாவிட்டாலும், நாம் புரிந்துகொண்டு இன்னும் தெளிவாகப் பார்க்கும் ஒரு காலம் வரும் என்று நாம் உறுதியாக நம்பலாம்.

நம் வாழ்க்கை ஒரு மெத்தைப் போன்றது. நீங்கள் ஒரு மெத்தையின் பின்புறத்தைப் பார்த்தால், நீங்கள் பார்ப்பது முடிச்சுகள் மற்றும் தளர்வான முனைகள் முழுவதும் தொங்குவது. இது மிகவும் அழகற்றது, மேலும் வேலைக்கு மோனை அல்லது காரணம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும், நீங்கள் மெத்தையை திருப்பிப் பார்க்கும்போது, தயாரிப்பாளர் எவ்வாறு ஒரு நம்பிக்கையாளரின் வாழ்க்கையைப் போலவே ஒரு அழகிய படைப்பை உருவாக்க ஒவ்வொரு இழையையும் ஒன்றாகச் சேர்ந்து நெய்திருக்கிறார் என்பதை நீங்கள் காண்கிறீர்கள் (ஏசாயா 64:8). நாம் தேவனுடைய விஷயங்களைப் பற்றிய வரையறுக்கப்பட்ட புரிதலுடன் வாழ்கிறோம், ஆனால் நாம் எல்லாவற்றையும் அறிந்து புரிந்து கொள்ளும் ஒரு நாள் வருகிறது (யோபு 37:5; ஏசாயா 40:28; பிரசங்கி 11:5; 1 கொரிந்தியர் 13:12; 1 யோவான் 3:2). வேதனையுறும் போது தேவன் எங்கே? கடினமான காலங்களில் உங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டிய செய்தி என்னவென்றால், நீங்கள் அவருடைய கையைப் பார்க்க முடியாதபோது, அவருடைய இதயத்தை நம்புங்கள், அவர் உங்களைக் கைவிடவில்லை என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு உங்கள் சொந்த வலிமை இல்லை என்று தோன்றும்போது, அப்போதுதான் நீங்கள் அவருடைய சமுகத்தில் முழுமையாக ஓய்வெடுக்க முடியும் மற்றும் உங்கள் பலவீனத்தில் அவருடைய பலம் பரிபூரணமானது என்பதை அறிய முடியும் (2 கொரிந்தியர் 12:9-10).

Englishமுகப்பு பக்கம்

தேவன் இப்போது எங்கே இருக்கிறார்? வேதனையில் இருக்கும்போது போது தேவன் எங்கே?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries