settings icon
share icon
கேள்வி

நீங்கள் மரிக்கும்போது எங்கு செல்கிறீர்கள்?

பதில்


நீங்கள் மரிக்கும்போது எங்கு செல்கிறீர்கள் என்பதற்கு இரண்டு இடங்கள் மட்டுமே உள்ளன என்பதை வேதாகமம் மிகவும் திட்டவட்டமாக கூறுகிறது: அதாவது பரலோகம் அல்லது நரகம் என்று வேதாகமம் தெளிவாக கூறுகிறது. நீங்கள் மரிக்கும்போது எங்கு செல்கிறீர்கள் என்பதை நீங்களே தீர்மானிக்க முடியும் என்பதை வேதாகமம் தெளிவுபடுத்துகிறது. எப்படி? தொடர்ந்து வாசியுங்கள்.

முதலாவது, பிரச்சனை. நாம் அனைவரும் பாவம் செய்திருக்கிறோம் (ரோமர் 3:23). நாம் எல்லோரும் தவறோ, பொல்லாத காரியமோ, ஒழுக்கக்கேடான செயல்களையோ செய்திருக்கிறோம் (பிரசங்கி 7:20). நம்முடைய பாவத்த்தின் காரணமாக நாம் தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டு இருக்கிறோம், மேலும், இந்த பிரச்சனை தீர்க்கப்படாதபடி விட்டுவிட்டால், நம் பாவத்தின் காரணமாக நித்தியமாக தேவனிடமிருந்து பிரிக்கப்படுவோம் (மத்தேயு 25:46; ரோமர் 6:23a). தேவனிடத்திலிருந்து பிரிக்கப்படும் இந்த நித்திய பிரிவு நரகமே, வேதாகமத்தில் நரகமானது ஒரு நித்திய அக்கினிக்கடல் என விவரிக்கப்படுகிறது (வெளிப்படுத்துதல் 20:14-15).

இப்போது, தீர்வு. இயேசு கிறிஸ்துவில் தேவன் மனிதனானார் (யோவான் 1:1, 14; 8:58; 10:30). அவர் பாவமற்ற வாழ்வு வாழ்ந்தார் (1 பேதுரு 3:22; 1 யோவான் 3:5), நம்முடைய சார்பாக மனமுவந்து தம்மையே பலியாக கொடுத்தார் (1 கொரிந்தியர் 15:3; 1 பேதுரு 1:18-19). அவரது மரணம் நம்முடைய பாவங்களுக்காகன தண்டனையை செலுத்தியது (2 கொரிந்தியர் 5:21). தேவன் இப்பொழுது இரட்சிப்பு மற்றும் பாவமன்னிப்பை பரிசாக தருகிறார் (ரோமர் 6:23b), விசுவாசத்தினால் நாம் அதைப் பெற வேண்டும் (யோவான் 3:16; எபேசியர் 2:8-9). “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” (அப்போஸ்தலர் 16:31). இயேசுவை மட்டுமே உங்கள் இரட்சகராக விசுவாசித்து, உங்கள் பாவங்களுக்காக தம்முடைய ஜீவனையே பலியாக செலுத்தியதற்காக அவரில் மட்டுமே விசுவாசம் வைத்தால், தேவனுடைய வார்த்தையின்படி, பரலோகத்தில் நித்தியமாக வாழும் நித்திய ஜீவனைப் பெறுவீர்கள்.

நீங்கள் மரிக்கும்போது எங்கு செல்கிறீர்கள்? இது உங்களைப்பொறுத்தது. தேவன் உங்களுக்கு தெரிந்துகொள்ளுதை வழங்குகிறார். தேவன் அவரிடம் வரும்படி உங்களை அழைக்கிறார். இது உங்கள் அழைப்பு.

உங்களை கிறிஸ்துவில் விசுவாசம் கொள்ளும்படி கடவுள் உங்களை உணர்த்தினால் (யோவான் 6:44), இரட்சகரிடம் வாருங்கள். தேவன் திரையை தூக்கி உங்கள் ஆவிக்குரிய குருட்டை நீக்கினால் (2 கொரிந்தியர் 4: 4), இரட்சகரை பாருங்கள். எப்பொழுதும் மரித்திருக்கிற வாழ்க்கையில் ஒரு தீப்பொறியை நீங்கள் அனுபவித்தால் (எபேசியர் 2: 1), இரட்சகர் மூலமாக ஜீவனைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

நீங்கள் மரிக்கும்போது எங்கு செல்கிறீர்கள்? பரலோகமா அல்லது நரகமா. இயேசு கிறிஸ்துவின் மூலமாக, நரகத்தை தவிர்க்கலாம். இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள், பரலோகம் உங்கள் நித்திய இலக்காக இருக்கும். வேறு எந்த முடிவை எடுத்தாலும், நரகத்தில் தேவனை விட்டுப்பிரிந்து இருக்கத்தக்கதான நித்தியமான பிரிவினையை விளைவிக்கும் (யோவான் 14: 6, அப்போஸ்தலர் 4:12).

நீங்கள் மரிக்கும்போது எங்கு செல்கிறீர்கள் என்கிற இரு சாத்தியங்களை நீங்கள் புரிந்து கொண்டால், உங்கள் தனிப்பட்ட சொந்த இரட்சகராக இயேசு கிறிஸ்துவை நீங்கள் நம்புவீர்களானால், நீங்கள் பின்வருவதை நம்புகிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள், விசுவாசத்தின் செயலாக, தேவனிடத்தில் கூறுங்கள்: "தேவனே, நான் ஒரு பாவி என்பதை அறிந்திருக்கிறேன், நான் உமக்கு விரோதமாக பாவம் செய்திருக்கிறேன் என்றும் அதினிமித்தம் பாவத்திற்கான தண்டனையை அடைவதற்கு பாத்திரமாய் இருக்கிறேன் என்றும் அதினிமித்தமாக நித்தியமாக உம்மிலிருந்து பிரிக்கப்பட்டு இருப்பேன் என்றும் அறிந்திருக்கிறேன். நான் பெற்றுக்கொள்ள தகுதியில்லாத போதிலும், என்னை நேசித்து கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலமாக என்னுடைய பாவத்திற்கான தியாக பலியை ஏற்ப்படுத்தினதற்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் மன்னிப்பை பெறத்தக்கதாக நான் அடையவேண்டிய தண்டனையை இயேசு ஏற்றுக்கொண்டார் என விசுவாசிக்கிறேன். இந்த தருணத்திலிருந்து எனது வாழ்க்கையை பாவத்திற்காக அல்லாமல் உமக்காக வாழ உதவி செய்யும். நீர் எனக்கு தந்த இந்த ஆச்சரியமான இரட்சிப்புக்கு நன்றியுள்ளவனாக எனது மீதமுள்ள வாழ்நாளெல்லாம் வாழ உதவி செய்யும். இயேசுவே, என்னை இரட்சித்ததற்காக உமக்கு நன்றி!"

நீங்கள் இங்கே வாசித்த காரியங்கள் நிமித்தம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு தீர்மானித்திருக்கிறீர்களா? அப்படியானால், கீழேயுள்ள “கிறிஸ்துவை நான் இன்று ஏற்றுக்கொண்டிருக்கிறேன்” என்கிற பொத்தானை அழுத்தவும்.

English



முகப்பு பக்கம்

நீங்கள் மரிக்கும்போது எங்கு செல்கிறீர்கள்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries