கிறிஸ்தவன் என்றால் என்ன?


கேள்வி: கிறிஸ்தவன் என்றால் என்ன?

பதில்:
ஒரு அகராதியில் கிறிஸ்தவன் என்பதற்கு கொடுக்கப்பட்ட விவரணம் மற்றும் அர்த்தம் என்னவெனில், "இயேசுவில் விசுவாசம் வைத்து அவரையே கிறிஸ்துவாக ஏற்றுக்கொள்பவர் அல்லது இயேசுவின் போதனைகளின் அடிப்படையில் இயேசுவை விசுவாசிக்கிற நபர் அல்லது இயேசுவின் போதனைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு மதத்தைப் பின்பற்றுகிறவர்" என்பதாகும். இப்படி பல அகராதிகள் பல நிலைகளில் வேதாகமம் வரையறுத்து கூறுகிறதுபோல அல்லாமல் வித்தியாசமான நிலைகளில் அர்த்தங்களை கொண்டு வருகின்றன. புதிய ஏற்பாட்டில் "கிறிஸ்தவர்கள்" என்கிற வார்த்தை மூன்று முறை பயன்படுத்தப்பட்டுள்ளது (அப்போஸ்தலர் 11:26; 26:28; 1 பேதுரு 4:16). இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றிய சீஷர்கள் முதன்முதலாக அந்தியோகியாவில் தான் "கிறிஸ்தவர்கள்" என்று அழைக்கப்பட்டனர் (அப்போஸ்தலர் 11:26). ஏனென்றால் அவர்களுடைய நடத்தை, செயல்கள், பேச்சு ஆகியவை கிறிஸ்துவைப் போலவே இருந்தன. "கிறிஸ்தவன்" என்கிற வார்த்தையின் எழுத்தியல் பிரகாரமான அர்த்தம் "கிறிஸ்துவை சேர்ந்தவர்கள்" அல்லது “கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள்” என்பதாகும்.

துரதிருஷ்டவசமாக, காலப்போக்கில், "கிறிஸ்தவன்" என்னும் வார்த்தை அதன் முக்கியத்துவத்தை இழந்து விட்டது. உயர்ந்த தார்மீக மதிப்பைக் கொண்டுள்ளவர்கள், மத சம்பந்தப்பட்ட நிலையில் மெய்யாகவே கிறிஸ்துவை பின்பற்றாதவர்கள் கூட இப்படி அழைக்கப்படலாயினர். அநேகர் தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்கிறார்கள், காரணம் அவர்கள் கிறிஸ்தவ சபைக்கு போகிறார்கள் அல்லது கிறிஸ்தவ நாடுகளில் வாழ்கிறார்கள். சபைக்கு போகிறதினாலோ அல்லது நல்ல மனிதராக வாழ்கிறதினாலோ ஒருவரை கிறிஸ்தவராக்கிவிடாது. ஒரு கிறிஸ்தவ சபையில் உறுப்பினராக இருப்பதினால், கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொள்ளுதலினால், சபையினுடைய வேலைக்கு கொடுப்பதினால் நீங்கள் கிறிஸ்தவராகி விடமுடியாது.

நாம் செய்யும் நற்செயல்கள் ஒருபோதும் தேவனால் அங்கீகரிக்கப்பட்டு தேவனோடு நாம் ஐக்கியப்பட அல்லது ஏற்றுக்கொள்ளப்பட வழி வகுக்காது என வேதாகமம் கூறுகிறது. “நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்” (தீத்து 3:5). ஒரு கிறிஸ்தவன் என்பவன் தேவனாலே மறுபடியும் பிறந்தவனாவான் (யோவான் 3:3; யோவான் 3:7; 1 பேதுரு 1:23) மற்றும் இயேசு கிறிஸ்துவில் விசுவாசமும் நம்பிக்கையும் வைத்தவனாவான். “கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு” (எபேசியர் 2:8).

ஒரு உண்மையான கிறிஸ்தவன் என்பவன், இயேசு கிறிஸ்துவின் ஆள்தன்மை மற்றும் அவரது செயல்களில் முழு விசுவாசம் மற்றும் நம்பிக்கையை வைத்தவனாவான். மேலும், அவரது சிலுவை மரணம் மற்றும் மூன்றால் நாளில் உயிரோடு எழுந்த அவருடைய உயிர்த்தெழுதலிலும் விசுவாசம் வைக்கிரவனாய் இருப்பான். “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” என்று யோவான் 1:12 கூறுகிறது. ஒரு உண்மையான கிறிஸ்தவனின் அடையாளம் என்னவென்றால், அவன் மற்றவர்களை நேசிக்கிறவனாகவும் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிகிறவனாகவும் இருப்பான் (1 யோவான் 2:4, 10). ஒரு உண்மையான கிறிஸ்தவன் மெய்யாகவே தேவனுடைய பிள்ளையாக இருக்கிறான், தேவனுடைய குடும்பத்தில் ஒரு அங்கமாக இருக்கிறான் மற்றும் இயேசு கிறிஸ்துவில் புதிய ஜீவனை பெற்றவனாகவும் இருக்கிறான்.

நீங்கள் இங்கே வாசித்த காரியங்கள் நிமித்தம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு தீர்மானித்திருக்கிறீர்களா? அப்படியானால், கீழேயுள்ள “கிறிஸ்துவை நான் இன்று ஏற்றுக்கொண்டிருக்கிறேன்” என்கிற பொத்தானை அழுத்தவும்.

English
முகப்பு பக்கம்
கிறிஸ்தவன் என்றால் என்ன?

எப்படி கண்டுபிடிக்க ...

கடவுளோடு நித்தியத்தை செலவிடுங்கள்கடவுளிடமிருந்து மன்னிப்பைப் பெறுங்கள்