தேவ சத்தத்தை நான் எப்படி அடையாலம் கண்டு கொள்ள முடியும்?


கேள்வி: தேவ சத்தத்தை நான் எப்படி அடையாலம் கண்டு கொள்ள முடியும்?

பதில்:
ஆண்டான்டு காலங்களாக, அநேக ஜானங்கள் இந்த கேள்வியை கேட்கின்றார்கள். சாமுவேல் தேவ சத்தத்தை கேட்டான், ஆனால் ஏலி கற்று தரும் வரை அது தேவ சத்தம் என்பதை அறியாமல் இருந்தான் (1 சாமுவேல் 3:1–10). கிதியோன் தேவனிடம் இருந்து பிரத்தியட்சமான வெளிப்பாடை பெற்றான், என்றாலும் அவன் தொடர்ந்து சந்தேகப்பட்டு, ஒரு அடையாலத்தை காண்பிக்கும்படி தேவனிடம் மூன்று முறை கேட்டான் (நியாயாதிபதிகள் 6:17–22, 36–40). தேவ சத்தத்தை கேட்கும்போது, தேவன் தான் நம்மிடம் பேசுகின்றாரா என்று நாம் எப்படி அறிந்து கொள்ள முடியும்? முதலாவதாக, கிதியோன் மற்றும் சாமுவேலுக்கு இல்லாத ஒன்று நமக்கு இருக்கிறது. அது முழு வேதாகமம் ஆகும். இது, நாம் வாசித்து, படித்து, தியானம் செய்யும்படி அருளப்பட்ட தேவனின் வார்த்தை. “வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது” (2 தீமோத்தேயு 3:16–17). ஏதோ ஒரு குறிப்பை அல்லது தீர்மானத்தை குறித்த கேள்வி நமக்குள் எழும்பும்போது, வேதம் அதை குறித்து என்ன சொல்லுகிறது என்று பார்க்க வேண்டும். வேதத்தில் தேவன் சொல்லியிருகிறதற்கு எதிர்மாராக அவர் நம்மை ஒருபோதும் நடத்துவதில்லை.

தேவ சத்தத்தை நாம் கேட்கவேண்டுமானால், நாம் அவருடையவர்களாக இருக்க வேண்டும். இயேசு சொன்னார், “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது” (யோவான் 10:27). தேவ சத்தத்தை கேட்கிறவர்கள் அவருடையவர்களாக இருக்கிறார்கள், அதாவது அவர்கள் தேவ கிருபையினாலும் இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்டவர்கள். இந்த ஆடுகள் தான் தேவ சத்தத்தை கேட்டு அது அவரின் சத்தம் என்று புரிந்துகொள்ள முடியும், ஏனென்றால் அவரை அவர்கள் மேய்பனாக அறிந்திருக்கிறார்கள். அவர் சத்தத்தை கேட்க வேண்டுமானால், நாம் அவருடையவர்களாய் இருக்க வேண்டும்.

வேதம் வாசித்து அதை அமைதியாக தியானிக்கும் போது, அவர் சத்தத்தை நாம் கேட்க முடியும். அதிக நேரம் நாம் தேவனோடு நெருங்கி உறவாடுவதினால் மற்றும் அவர் வார்த்தையில் அதிக நேரம் செலவிடுவதினால், அவரின் சத்தத்தை எளிதாக புரிந்து கொள்ள முடியும் மற்றும் நம் வாழ்கையில் அவரின் வழி நடத்துதலை அறிய முடியும். வங்கியில் வேலை செய்கிறவர்கள், உண்மையான பணத்தை அதிக கவனம் செலுத்தி தெரிந்துகொள்வதின் மூலம், கள்ள பணத்தை மிக எளிதில் அடையாலம் கண்டு பிடிக்கிறார்கள். அது போல, நாமும் தேவ வசனத்தை அதிகமாய் அறிந்திருக்கும் போது, யாராவது தவறானதை பேசும்போது, அது தேவனுக்கடுத்தது அல்ல என்று மிகவும் தெளிவாக கண்டுகொள்ள முடியும்.

தேவன் வாய்மொழியின் மூலமாக ஜனங்களோடு பேச முடியும், ஆனால் முதன்மையாக தமது எழுதப்பட்ட வார்த்தையில் இருந்து தான் பேசுகின்றார். சில நேரங்களில், பரிசுத்த ஆவியானவர் மூலமாக, நமது மனசாட்சியின் மூலமாக, சூழ்நிலைகளின் மூலமாக, மற்றும் தேவ பிள்ளைகளின் உற்சாகப்படுத்தும் வார்த்தைகள் மூலமாக தேவ வழி நடத்துதலை நாம் பெறுகிறோம். நாம் கேட்பதை சத்தியத்தோடே ஒப்பிட்டு பார்க்கும்போது, தேவ சத்தத்தை நாம் அடையாலம் கண்டு கொள்ள முடியும்.

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
தேவ சத்தத்தை நான் எப்படி அடையாலம் கண்டு கொள்ள முடியும்?