தேவன் இன்றும் தரிசனங்களை மக்களுக்கு கொடுக்கிறாரா?


கேள்வி: தேவன் இன்றும் தரிசனங்களை மக்களுக்கு கொடுக்கிறாரா? தரிசனங்கள் விசுவாசிகளின் கிறிஸ்தவ அனுபவத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்க வேண்டுமா?

பதில்:
இன்று தேவனால் தரிசனங்களை மக்களுக்கு கொடுக்க முடியுமா? ஆம்! தேவன் இன்றும் தரிசனங்களை மக்களுக்கு கொடுக்கிறார்? ஒருவேளை. தரிசனங்கள் சாதாரண நிகழ்வுகளாக ஏற்படவேண்டும் என்று நாம் எதிர்பார்க்க வேண்டுமா? இல்லை, வேதாகமத்தின் அடிப்படையில் பார்க்கும் போது தேவன் பல நேரங்களில் மனிதர்களிடம் தரிசனங்கள் மூலம் பேசியிருக்கிறார். உதாரணமாக யாக்கோபின் குமாரனாகிய யோசேப்பு, மரியாளின் கனவனாகிய யோசேப்பு, சாலமோன், ஏசாயா, எசேக்கியேல், தானியேல், பேதுரு மற்றும் பவுல். தீர்க்கதரிசி யோவேல் அனைவரும் தரிசனங்கள் காண்பார்கள் என்று முன்னுரைத்ததை அப்போஸ்தலர் பேதுரு அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் உறுதிசெய்திருக்கிறார். தரிசனத்திற்கும் சொப்பணத்திற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஒருவர் விழித்திருக்கும் போது தரிசனத்தை பெறுகிறான் தூங்குகிறபோது சொப்பணத்தை பெறுகிறான்.

உலகத்தின் பல பகுதிகளில் தேவன் பரவலாக தரிசனங்களையும் சொப்பணங்களையும் பயன்படுத்திவருகிறார். எங்கு குறைவாக அல்லது சுவிசேஷ செய்தியே இல்லாது இருக்கிறதோ அந்த பகுதிகளிலும், வேதாகமமே இல்லாத பகுதிகளிலும் சொப்பணம் மற்றும் தரிசனத்தின் மூலம் தேவன் தன்னுடைய செய்திகளை மக்களிடம் எடுத்து சொல்கிறார். ஆரம்ப கால கிறிஸ்தவத்தில் தேவன் தன்னுடைய சத்தியத்தை வெளிப்படுத்த தரிசனங்களை அதிகமாக பயன்படுத்தினார் என்பதற்கான வேதாகம உதாரணங்களோடு இது ஒத்துபோகிறது. தேவன் ஒரு நபரோடு தன்னுடைய செய்தியை பகிர்ந்துகொள்ள விரும்பினால்; அதை மிஷனேரி, தூதர், தரிசனம், அல்லது சொப்பணம் ஆகிய எந்த வழிகளிலும் அவர் வெளிப்படுத்தலாம். ஏற்கனவே சுவிசேஷ செய்திகள் அறிவிக்கப்பட்ட பகுதிகள் கூட தேவன் தரிசனத்தை கொடுக்க முடியும். தேவன் என்ன செய்ய முடியும் என்பதற்கு வரம்பு கிடையாது.

அதே நேரத்தில், தரிசனம் மற்றும் அதனுடைய வியாக்கியானத்தை குறித்து நாம் கவனமாக இருக்கவேண்டும். வேதாகமம் முழுமையானது மற்றும் நமக்கு என்ன வேண்டுமோ அது அனைத்தும் வேதாகமத்தில் உள்ளது. தேவன் தரிசனத்தை கொடுக்கிறார் என்றால் அந்த தரிசனம் அவர் ஏற்கனவே வெளிப்படுத்திய அவருடைய வார்த்தையோடு ஒத்ததாக இருக்க வேண்டும் என்பது மிக உண்மையானது. தரிசனத்திற்கு தேவனுடைய வார்த்தைக்கு சமமான அல்லது அதற்கு மேலான அதிகாரத்தை கொடுக்கக் கூடாது. கிறிஸ்தவர்களுடைய விசுவாசம் மற்றும் நடைமுறைக்கு தேவனுடைய வார்த்தையே இறுதியான அதிகாரமாக இருக்க வேண்டும். உனக்கு தரிசனம் கொடுக்கப்பட்டால் அது தேவனால் கொடுக்கப்பட்டது என்ற நிச்சயம் உனக்கு இருக்குமேயானால் அதை ஜெபத்தோடு வேதவசனத்தின் மூலம் சோதித்து அறிந்து அது தேவனுடைய வார்த்தையோடு ஒத்து போகிறதா என்று உறுதி செய்யவேண்டும். பின்பு தேவன் நீ என்ன செய்ய வேண்டும் என்று இருக்கிறார் என்பதை ஜெபத்தோடு நிதானிக்க வேண்டும் (யாக்கோபு 1:5). தேவன் தரிசனத்தை ஒருவருக்கு கொடுத்து அதனுடைய அர்த்தத்தை மறைவாக வைக்க மாட்டார். வேதாகமத்தில் தேவனிடத்தில் தரிசனத்திற்கான விளக்கத்தை யார் கேட்டாலும் அவர்களுக்கு தேவன் அதை விளக்கி இருக்கிறார் (தானியேல் 8:15-17).

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
தேவன் இன்றும் தரிசனங்களை மக்களுக்கு கொடுக்கிறாரா? தரிசனங்கள் விசுவாசிகளின் கிறிஸ்தவ அனுபவத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்க வேண்டுமா?