ஏன் கன்னி பிறப்பு மிகவும் முக்கியமான ஒன்று?


கேள்வி: ஏன் கன்னி பிறப்பு மிகவும் முக்கியமான ஒன்று?

பதில்:
கன்னி பிறப்பின் உபதேசம் என்பது மிகவும் அவசியமான ஒன்று. (ஏசாயா 7:14, மத்தேயு 1:23, லூக்கா 1:27,34) முதலில் வேதவாக்கியங்கள் இந்த நிகழ்வை எப்படி விளக்குகின்றதென்று பார்ப்போம். மரியாளின் (லூக்கா 1:34) இது எப்படி ஆகும் என்ற கேள்விக்கு பதிலாக காபிரியேல் 'பரிசுத்த ஆவி உன்மேல் வரும், உன்னதமானவருடைய ஆவி உன்மேல் நிழலிடும்' (லூக்கா 1:35) என்று கூறுகிறான். தேவதூதன் யோசேப்பிடம் மரியாளை விவாகம் பண்ண பயப்பட வேண்டாம் என்று தைரியப்படுத்துகிறான்'. அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது' (மத்தேயு 1:20). மத்தேயு 'அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள்' (மத்தேயு 1:18) என்று கன்னியைக்குறித்து கூறுகிறார். கலாத்தியர் 4:5 கன்னி பிறப்பைக் குறித்து போதிக்கிறது. 'ஸ்திரியினிடத்தில் பிறந்தவரும் நியாயப்பிராமணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.'

இந்த வாக்கியங்களிலிருந்து இயேசுவின் பிறப்பு மரியாளுடைய உடலில் பரிசுத்த ஆவியானவர் நிழலிட்டதனால்தான் உண்டானது என்று தௌ;ளத் தெளிவாகிறது. பொருள் தன்மையில்லாத (ஆவி) மற்றும் பொருள் தன்மையுடைய (மரியாளின் கர்பப்பை) இவை இரண்டும் ஈடுபட்டுள்ளது. மரியாள் தானே கர்ப்பம் தரித்திருக்க முடியாது. அப்படி இருக்கும்போது அவள் ஒரு 'பாத்திரமாய்' மட்டுமே இருந்திருக்கிறாள். கடவுள் மட்டுமே 'மனு உருவெடுத்தல்' என்ற அற்புதத்தை நிகழ்த்தியிருக்க வேண்டும்.

ஆனபோதிலும் மரியாளுக்கும் இயேசுவுக்கும் இருந்த உடல்ரீதியான தொடர்பை நாம் மறுப்போமானால் இயேசு ஒரு மனிதனாக இருப்பது என்பது முடியாத காரியம். வேதம் முழுமையான மனிதனாக நம்மைப்போல் இருந்தார் என்று போதிக்கின்றது. இதை அவர் மரியாளிடத்திலிருந்து பெற்றுக்கொண்டார். அதே நேரத்தில் இயேசு முழுவதும் கடவுளாக, நித்தியமாக, பாவசுபாவம் இல்லாதவராகவும் இருந்தார். (யோவான்1:14, 1தீமோத்தேயு 3:16, எபிரேயர்2:14 -17)

இயேசு பாவத்தில் பிறக்கவில்லை. அதாவது அவருக்கு பாவசுபாவம் இல்லை (எபிரேயர் 7:21) பாவ சுபாவம் என்பது தகப்பனின் மூலமாக ஒரு சந்ததிலிருந்து அடுத்த சந்ததிக்கு மாறிக்கொண்டிருந்தது. (ரோமர் 5:12,17,19). 'கன்னி பிறப்பு' என்பது இந்த பாவ சுபாவத்தின் இடையூரை சுற்றிவளைத்து நித்திய கடவுளை ஒரு முழுமையான மனிதனாக இருக்க அனுமதித்தது.

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
ஏன் கன்னி பிறப்பு மிகவும் முக்கியமான ஒன்று?