சர்வமயவாதம்ஃஉலகளாவிய இரட்சிப்பு வேதாகமத்தின் அடிப்படையிலானதா?


கேள்வி: சர்வமயவாதம்ஃஉலகளாவிய இரட்சிப்பு வேதாகமத்தின் அடிப்படையிலானதா?

பதில்:
எல்லோரும் இரட்சிக்கப்படுவார்கள் என்பதே சர்வமயவாதம் ஆகும். இன்று அநேகர் உலகளாவிய இரட்சிப்பை எல்லோரும் கடைசியில் பரலோகத்திற்கு போவார்கள் என்று விசுவாசிக்கின்றனர். நரகத்தில் நித்தியமான உபத்திரவ வாழ்க்கையை அநேக ஆண்கள் மற்றும் பெண்கள் நினைப்பதன் மூலம் வேதாகமத்தில் இதனை குறித்த போதனைகளை மறுக்கின்றனர். இன்னும் சிலருக்கு இது தேவனுடைய நீதியை மற்றும் நேர்மையை மறுத்து தேவனுடைய அன்பு மற்றும் கருசனையை முக்கியப்படுத்துவது ஆகும். இது தேவன் எல்லோர் மேலும் கிருபையுள்ளவராக இருப்பார் என்று விசுவாசிக்கும் படியாக அவர்களை நடத்துகிறது.

முதலாவது, இரட்சிக்கப்படாதவர்கள் அனைவரும் நித்திய நரகத்திலே தள்ளப்படுவார்கள் என்று வேதாகமம் தெளிவாய் சொல்கிறது. இயேசு இதை உறுதிபடுத்துகிறார் இரட்சிக்கப்பட்டவர் தங்கள் நித்தியத்தை பரலோகத்தில் செலவிடுவார்கள் அதுபோலவே இரட்சிக்கப்படாதவர்களும் நித்தியத்தை நரகத்திலே செலவிடுவார்கள். மத்தேயு 25:46ல் வாசிக்கிறோம் “அந்தபடியே இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.” இந்த வசனத்தின் படி இரட்சிக்கப்படாதவர்களின் தண்டனை இரட்சிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை போலவே நித்தியமானது. சிலர் நரகத்தில் இருப்பவர்களின் வாழ்க்கை கொஞ்ச கொஞ்சமாய் அழிந்து போகும் என்று விசுவாசிக்கின்றனர் ஆனால் அது நித்தியமானது என்று தேவனே அறிக்கையிடுகிறார். நரகமானது நித்திய அக்கினி மற்றும் அவியாத அக்கினி என்றும் மத்தேயு 25:41 மற்றும் மாற்கு 9:44 விளக்குகிறது.

ஒருவர் எப்படி அவியாத அக்கினியை தவிர்க்க முடியும்? எல்லா வழிகளும் - எல்லா மார்க்கங்களும் மற்றும் எல்;லா விசுவாசமும் பரலோகத்திற்கே வழிநடத்துகின்றன என்று அநேகர் விசுவாசிக்கின்றனர் அல்;லது தேவன் கிருபையும் அன்பும் நிறைந்தவர் எனவே அவர் அனைவரையும் பரலோகத்தில் அனுமதிப்பார் என்று கருதுகின்றனர். தேவன் நிச்சயமாகவே அன்பும் கிருபையுமுள்ளவர் அந்த தன்மையே அவருடைய குமாரன் இயேசுகிறிஸ்துவை நமக்காக சிலுவையில் மறிக்கும் படி பூமிக்கு அனுப்பியது. இயேசுகிறிஸ்துவே நம்மை பரலோகத்தில் நித்தியத்திற்குள் வழிநடத்தும் தனிதன்மை வாய்ந்த வாசலாவார். அப்போஸ்தலர் 4:12 சொல்கிறது, “அவராலேயன்றி வேறோருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும் படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறோரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.” “தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே, அவரே கிறிஸ்து” (1தீமோத்தேயு 2:5). யோவான் 14:6 “இயேசு செல்கிறார் நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வாரன்” யோவான் 3:16 “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரை தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” தேவனுடைய குமாரனை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நாம் இரட்சிக்கப்படுவதற்கான தேவைகளை சந்திக்க தவறுகிறோம்.

சர்வமயவாதம், உலகளாவிய இரட்சிப்பு வேதத்தின் அடிப்படையி;லானவைகள் அல்ல என்பதை இந்த வசனங்கள் தெளிவுபடுத்துகிறது. வேதவசனங்கள் போதிப்பதற்கு சர்வமயவாதம் நேரடியாக முரண்பாடானது. பிறர் கிறிஸ்தவர்கள் சகிப்புதன்மையற்று மற்றும் பிரத்தியேக ஜீவியத்தை குற்றப்படுத்தும் போது இந்த வார்த்தைகள் எல்லாம் கிறிஸ்துவின் வார்த்தை என்பதை நினைவுகூறவேண்டியது அவசியம் ஆகும். கிறிஸ்தவர்கள் தங்களாகவே இந்த கருத்தை உருவாக்கவில்லை அவர்கள் ஆண்டவர் ஏற்கனவே சொன்னதை சொல்கிறார்கள். மக்கள் இந்த செய்தியை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர் ஏனென்றால் அவர்களுடைய பாவங்களை அவர்களுக்கு எதிர்கொள்ள விருப்பமில்லை மற்றும் அவர்களை இரட்சிக்க தேவன் தேவை என்பதை ஏற்றுக்கொள்ள விருப்பமுமில்லை. தேவனுயை குமாரன் மூலம் இரட்சிக்கப்படுவதற்கான வழிகளை ஏற்படுத்தியிருப்பதை மறுக்கிறது தேவனுடைய பரிசுத்தம் மற்றும் நீதியை சிறுமைப்;படுத்துவது ஆகும் மற்றும் நமது சார்பாக இயேசு பலியானார் என்பதை மறுப்பதும் ஆகும்.

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
சர்வமயவாதம்ஃஉலகளாவிய இரட்சிப்பு வேதாகமத்தின் அடிப்படையிலானதா?