settings icon
share icon
கேள்வி

தேவன் ஒரு பாவி / அவிசுவாசியின் ஜெபங்களைக் கேட்கிறாரா / பதிலளிக்கிறாரா?

பதில்


யோவான் 9:31 தெரிவிக்கிறது, “பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.” "பாவிகளிடமிருந்து தேவன் கேட்கிற ஒரே ஜெபம் இரட்சிப்பின் ஜெபமேயாகும் என்றும் சொல்லப்படுகிறது. இதன் விளைவாக, சிலர் தேவன் அவிசுவாசியின் ஜெபங்களுக்கு ஒருபோதும் பதில் சொல்லமாட்டார் என்று நம்புகிறார்கள். யோவான் 9:31ன் பின்னணி சந்தர்ப்பத்தில் தேவன் அவிசுவாசிகள் மூலம் அற்புதங்களை செய்வதில்லை என்று கூறுகிறது. தேவனுடைய சித்தத்தின்படி ஜெபங்கள் ஏறெடுக்கப்பட்டாதா அல்லது இல்லையா என்பதன் அடிப்படையில் தேவன் ஜெபங்களுக்கு பதிலளிக்கிறார் என்று முதல் யோவான் 5: 14-15 சொல்கிறது. இந்த பிரமாணம் ஒருவேளை, அவிசுவாசிகளுக்கு பொருந்தும். ஒரு அவிசுவாசி அவருடைய சித்தத்தின்படி ஜெபத்தில் கேட்கும்போது, அந்த ஜெபத்தைக் கேட்காமல் இருப்பதற்கு தேவனை ஒன்றும் தடைவதில்லை - தேவனுடைய சித்தத்தின்படி கேட்போமானால்.

சில வேதவாக்கியங்கள் தேவன் அவிசுவாசிகளுடைய ஜெபங்ககளைக் கேட்டு பதிலளிப்பதை விவரிக்கின்றன. இந்த நிகழ்வுகளில் பெரும்பாலானவைகளில், ஜெபம் சம்பந்தப்பட்டிருந்தது. ஒன்று அல்லது இரண்டில், தேவன் இதயத்தின் கூப்பிடுதலுக்கு பதிலளித்தார் (அந்த அழுகை தேவனை நோக்கி இருந்ததா என்பது தெரியவில்லை). சில சமயங்களில், ஜெபமானது மனந்திரும்புதலுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற சந்தர்ப்பங்களில், ஜெபமானது பூமிக்குரிய தேவையோ ஆசீர்வாதத்தையோ வெறுமனே குறிக்கிறதாயிருக்கிறது. தேவன் சில சமயங்களில் அந்த ஜெபங்களின் உண்மையான தேடலைக்கண்டு அல்லது அந்த நபரின் விசுவாச பிரதிபலிபைக்கண்டு பதிலளிக்கிறார். ஒரு அவிசுவாசியின் ஜெபத்தைக் குறித்து கூறுகிற சில வேதபாகங்கள் இதோ:

நினிவே மக்கள் நினிவே அழிக்கப்படாதபடிக்கு விடுபட வேண்டும் என்று ஜெபித்தார்கள் (யோனா 3:5-10). தேவன் இந்த ஜெபத்திற்கு பதிலளித்தார், நினிவே நகரத்தை அவர் அச்சுறுத்தியபடி அழிக்கவில்லை.

ஆகார் தன் குமாரனாகிய இஸ்மவேலைக் காப்பாற்றும்படி தேவனிடம் கேட்டாள் (ஆதியாகமம் 21:14-19). தேவன் ஈசாக்கை பாதுகாத்ததோடு மட்டுமில்லாமல், அவனை மிகவும் ஆசீர்வதித்தார்.

1 ராஜாக்கள் 21:17-29 ல், குறிப்பாக 27-29 வரையிலுள்ள வசனங்களில், ஆகாப் தன் சம்பத்தைப் பற்றிய எலியாவின் தீர்க்கதரிசனத்தின் நிமித்தம் உபவாசித்து துக்கப்படுகிறார். தேவன் ஆகாபின் காலத்தில் அந்த பேரழிவைக் கொண்டு வராததன் மூலம் அவனுக்கு பதிலளிக்கிறார்.

தீரு மற்றும் சீதோன் பகுதிகளிலிருந்த புறஜாதிய ஸ்திரீ இயேசு தன் மகளைப் பிசாசிலிருந்து விடுவிக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டாள் (மாற்கு 7:24-30). இயேசு அந்த ஸ்திரீயின் மகளிடமிருந்து பிசாசை துரத்தினார்.

அப்போஸ்தலர் 10-ஆம் அதிகாரத்திலுள்ள ரோம நூற்றுக்கதிபதியாகிய கொர்நேலியு, நீதிமானாக இருந்து தேவனிடத்தில் வேண்டிக்கொண்டபடியால் பேதுருவை தேவன் அவனிடத்திற்கு அனுப்பி கொர்நேலியுவுக்கு பதிலளித்தார். கொர்நேலியு "எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான்" என்று அப்போஸ்தலர் 10: 2 நமக்கு சொல்லுகிறது.

எரேமியா 29:13-ஐ போல, தேவன் இரட்சிக்கப்பட்டவர்கள் மற்றும் இரட்சிக்கப்படாதவர்கள் என்கிற வித்தியாசம் இல்லாமல் எல்லாருக்குமுள்ள வாக்குத்தத்தங்களை அளிக்கிறார்: “உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்.” அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:1-6ல் கொர்நேலியுவின் காரியமும் இப்படியே இருந்தது. ஆனால் சில வேதகாகங்களில் அதன் பின்னணியின்படி, கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே உரிய பல வாக்குறுதிகளும் உள்ளன. கிறிஸ்தவர்கள் இயேசுவை தங்களுடைய இரட்சகராக ஏற்றுக்கொண்டபடியால், அவர்களுக்கு உதவி தேவைப்படுகையில் உதவிப் பெறுவதற்காக தைரியமாக கிருபாசனத்தண்டை வரும்படி அவர்கள் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள் (எபிரெயர் 4:14-16). நாம் தேவனுடைய சித்தத்தின்படி எதையாவது கேட்கும்பொழுது, அவர் அதைக்கேட்டு, நாம் கேட்கிறதை நமக்குக் கொடுக்கிறார் (1 யோவான் 5:14-15) என்று அறிவுருத்தப்பட்டுள்ளோம். ஜெபத்தைக் குறித்து கிறிஸ்தவர்களுக்கு மற்ற பல வாக்குறுதிகளும் உள்ளன (மத்தேயு 21:22; யோவான் 14:13; 15:7). எனவே, ஆம், தேவன் ஒரு அவிசுவாசியின் ஜெபத்திற்கு பதில் கொடுக்காத தருணங்கள் இருக்கிறது. அதே சமயத்தில், தேவன் அவருடைய கிருபையினாலும் இரக்கத்தினாலும், அவர்களுடைய ஜெபங்களுக்கு பதிலளித்து அவிசுவாசிகளின் வாழ்க்கையில் தலையிட முடியும்.

English



முகப்பு பக்கம்

தேவன் ஒரு பாவி / அவிசுவாசியின் ஜெபங்களைக் கேட்கிறாரா / பதிலளிக்கிறாரா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries