settings icon
share icon
கேள்வி

சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு இயேசு என்ன விசாரணைகளை எதிர்கொண்டார்?

பதில்


இயேசு கைது செய்யப்பட்ட இரவில், அவர் அன்னா, காய்பா மற்றும் சனகெரிப் என்று அழைக்கப்படும் மதத் தலைவர்களின் கூட்டத்திற்கு முன் அழைத்து வரப்பட்டார் (யோவான் 18:19-24; மத்தேயு 26:57). அதற்குப் பிறகு, அவர் ரோம ஆளுநராகிய பிலாத்துவினிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் (யோவான் 18:23), பின்பு ஏரோதுவினிடத்திற்கு அனுப்பப்பட்டார் (லூக்கா 23:7), பிலாத்திடம் மீண்டுமாக அனுப்பப்பட்டார் (லூக்கா 23:11-12), இறுதியாக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இயேசுவின் விசாரணையில் ஆறு பகுதிகள் இருந்தன: ஒரு மத நீதிமன்றத்தில் மூன்று நிலைகள் மற்றும் ரோம நீதிமன்றத்திற்கு முன்பாக மூன்று நிலைகள். முன்னாள் பிரதான ஆசாரியன் அன்னா; தற்போதைய பிரதான ஆசாரியன் காய்பா; மற்றும் சனகெரிப் சங்கம் முன்பாக இயேசு விசாரிக்கப்பட்டார். அவர் தேவனுடைய குமாரன், மேசியா என்று கூறி, இந்த "திருச்சபை" பாடுகளில் தேவதூஷணம் உரைத்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

யூத அதிகாரிகளின் முன்பாக உள்ள விசாரணைகள், மத விசாரணைகள், யூதத் தலைவர்கள் அவரை வெறுக்கும் அளவைக் காட்டினர், ஏனென்றால் அவர்கள் தங்கள் சொந்த நியாயப்பிரமாணங்களை கவனக்குறைவாக புறக்கணித்தனர். யூத நியாயப்பிரமாண கண்ணோட்டத்தில் இந்த விசாரணைகளில் பல சட்டவிரோதங்கள் இருந்தன: (1) பண்டிகை காலத்தில் எந்த விசாரணையும் நடத்தக் கூடாது. (2) நீதிமன்றத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் குற்றவாளியாக தீர்ப்பதற்கு அல்லது விடுவிப்பதற்காக தனித்தனியாக வாக்களிக்க வேண்டும், ஆனால் இயேசு பாரட்டப்பட்டதற்காக தண்டிக்கப்பட்டார். (3) மரண தண்டனை வழங்கப்பட்டால், தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன் ஒரு இரவு கடக்க வேண்டும்; இருப்பினும், சிலுவையில் இயேசுவை அறையப்படுவதற்கு முன்பு சில மணிநேரங்கள் மட்டுமே கடந்து இருந்தன. (4) யூதர்களுக்கு யாரையும் தூக்கிலிட அதிகாரம் இல்லை. (5) இரவில் எந்த விசாரணையும் நடத்தக்கூடாது, ஆனால் இந்த விசாரணை விடியற்காலைக்கு முன்பாக நடைபெற்றது. (6) குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆலோசனை அல்லது பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும், ஆனால் இயேசுவுக்கு எதுவும் வழங்கப்படவில்லை. (7) குற்றம் சாட்டப்பட்டவர் சுய-குற்றவாளியாக தீர்க்கப்படுகின்ற கேள்விகளைக் கேட்கக்கூடாது, ஆனால் இயேசு கிறிஸ்துவா என்று கேட்கப்பட்டார்.

இயேசுவை அடித்த பிறகு, ரோம அதிகாரிகளுக்கு முன்பாக உள்ள விசாரணைகள் பிலாத்துடன் ஆரம்பிக்கப்பட்டன (யோவான் 18:23). அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அவரது மத விசாரணைகளில் உள்ள குற்றச்சாட்டுகளிலிருந்து மிகவும் வேறுபட்டவையாகும். அவர் மக்களை கலவரத்திற்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டார், மக்கள் தங்கள் வரிகளை செலுத்த தடை விதித்தார், மற்றும் தன்னை ராஜா என்று கூறிக்கொண்டார் என்று அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது. பிலாத்து இயேசுவைக் கொல்ல எந்த காரணமும் இல்லை எனக்கண்டு, அவரை ஏரோதுவிடம் அனுப்பினான் (லூக்கா 23:7). ஏரோது இயேசுவை கேலி செய்தான், ஆனால், அரசியல் பொறுப்பைத் தவிர்க்க விரும்பி, இயேசுவை மீண்டும் பிலாத்துவினிடமே திருப்பி அனுப்பினான் (லூக்கா 23:11-12). பிலாத்து இயேசுவை அடித்து யூதர்களின் விரோதத்தை சமாதானப்படுத்த முயன்ற கடைசி விசாரணை இது. தண்டிக்கப்பட்ட ஒருவரின் பின்புறத்திலிருந்து சதையை அகற்ற வடிவமைக்கப்பட்ட ஒரு பயங்கரமான சவுக்கடிதான் ரோமர்களின் துன்பப்படுத்தும் முறையாய் இருந்தது. இயேசுவை விடுவிப்பதற்கான இறுதி முயற்சியில், பிலாத்து கைதி பரபாஸை சிலுவையில் அறையவும், இயேசு விடுவிக்கவும் முன்வந்தான், ஆனால் அதற்கும் பயனில்லை. பரபாஸை விடுவிக்கவும், இயேசுவை சிலுவையில் அறையவும் கூட்டம் கூடி கூக்குரலிட்டனர். பிலாத்து அவர்களின் கோரிக்கையை ஏற்று இயேசுவை அவர்களின் விருப்பத்திற்கு ஒப்புக்கொடுத்தான் (லூக்கா 23:25). இயேசுவின் விசாரணைகள் நீதி மற்றும் நியாயத்தின் முடிவான கேலியை பிரதிபலிக்கின்றன. உலக வரலாற்றில் மிகவும் அப்பாவி மனிதனாகிய இயேசு குற்றங்களில் குற்றவாளியாக தீர்க்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரிக்கும்படியாக மரண தண்டனை விதிக்கப்பட்டார்.

English



முகப்பு பக்கம்

சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு இயேசு என்ன விசாரணைகளை எதிர்கொண்டார்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries