பச்சைகுத்திக்கொள்ளுதல் அலகு/உடம்பு குத்திக்கொள்ளுதல் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?


கேள்வி: பச்சைகுத்திக்கொள்ளுதல் அலகு/உடம்பு குத்திக்கொள்ளுதல் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?

பதில்:
“செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துக்களை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக” (லேவியராகமம் 19:28) என்று பழைய ஏற்பாடு இஸ்ரவேலருக்கு கட்டளை கொடுக்கிறது. ஆகையால், இன்றைய விசுவாசிகள் பழைய ஏற்பாட்டுக் கட்டளைக்கு கீழே இல்லையென்றாலும் (ரோமர் 10:4; கலாத்தியர் 3:23-25; எபேசியர் 2:15) உடம்பில் குத்திக்கொள்வதைப் பற்றி ஒரு கட்டளை இருந்தது என்னும் உண்மை சில கேள்விகளை எழுப்பத்தான் செய்யும். ஒரு விசுவாசி உடம்பில் குத்திக்கொள்ள வேண்டுமோ இல்லையோ என்பதைப் பற்றி புதிய ஏற்பாடு எதுவும் கூறவில்லை.

பச்சைகுத்திக்கொள்ளுதல் அலகு/உடம்பு குத்திக்கொள்ளுதல் பற்றிய விஷயத்தில், நாம் தூய்மையான மனசாட்சியுடனே, நேர்மையாக கர்த்தரிடத்தில் அவருடைய நல்லநோக்கங்களுக்காக அந்தக் காரியத்தை ஆசீர்வதிக்கும்படி தீர்மானிக்க முடியுமா என்பது ஒரு நல்ல சோதனையாக் இருக்கும். “ஆகையால் நீங்கள் புசித்தாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும் எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்” (1 கொரிந்தியர் 10:31). புதிய ஏற்பாடு பச்சைகுத்திக்கொள்ளுதல் அலகு/உடம்பு குத்திக்கொள்ளுதல் போன்றவற்றிர்க்கு எதிராக கட்டளையிடவில்லையெனினும் கர்த்தர் நம்மை பச்சைகுத்திக்கொள்ளவும் அலகு/உடம்பு குத்திக்கொள்ளவும் அனுமதிப்பார் என்று நம்ப ஒரு காரணமும் சொல்லவில்லை.

வேதாகமம் நேரடியாகக் குறிப்பிடாத காரியங்களில், இது கர்த்தருக்குப் பிரியமானதாக இருக்குமோ இல்லையோ என்று சந்தேகம் வருமாயின் அதைப் போன்ற காரியங்களில் ஈடுபடாமலிருப்பதே நல்லது என்பது ஒரு முக்கியமான வேதாகமக் கோட்பாடு. விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே என்று ரோமர் 14:23 நினைவுறுத்துகிறது. நமது சரீரம் மற்றும் ஆத்துமா தேவனாலே மீட்கப்பட்டது, அவருக்குச் சொந்தமானது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். 1 கொரிந்தியர் 6:19-20 பச்சைகுத்திக்கொள்ளுதல் அல்லது அலகு/உடம்பு குத்திக்கொள்ளுதலைப் பற்றி நேரடியாக் கூறவில்லையெனினும் இது நமக்கு ஒரு கோட்பாட்டை நிச்சயமாகவே வலியுறுத்துகிறது. “உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.” இந்த பெரிய உண்மை நாம் நம்முடைய இந்த சரீரத்தை வைத்து என்ன செய்கிறோம், எங்கு செல்கிறோம் என்பதின் மேல் ஒரு ஆழமான பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். நமது சரீரம் தேவனுக்குச் சொந்தமானது என்றால், நாம் பச்சை/அலகு அல்லது உடம்பு குத்திக் அடையாளம் இட்டுக்கொள்ளும்பொழுது நமது தேவனின் தெளிவான அனுமதி நமக்கிருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும்.

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
பச்சைகுத்திக்கொள்ளுதல் அலகு/உடம்பு குத்திக்கொள்ளுதல் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?