நாம் ஒரு வாழ்க்கைத் துணையைத் தீவிரமாகத் தேட வேண்டுமா அல்லது தேவன் ஒரு வாழ்க்கைத்துணையைக் கொண்டுவரும்படிக்கு அவருக்காக காத்திருக்க வேண்டுமா?


கேள்வி: நாம் ஒரு வாழ்க்கைத் துணையைத் தீவிரமாகத் தேட வேண்டுமா அல்லது தேவன் ஒரு வாழ்க்கைத்துணையைக் கொண்டுவரும்படிக்கு அவருக்காக காத்திருக்க வேண்டுமா?

பதில்:
இரண்டு கேள்விகளுக்கும் பதில் “ஆம்” என்பதுதான். இரண்டிற்கும் இடையே ஒரு முக்கியமான சமநிலை உள்ளது. வாழ்க்கைத் துணையை நம்முடைய சொந்த முயற்சிகளை மட்டுமே சார்ந்துகொண்டு நாம் வெறித்தனமாக தேடக்கூடாது. தேவன் ஒரு நாள் ஒரு துணைவரை நம் வீட்டுக்கு வரச் செய்வார் என்று நினைத்து நாம் செயலற்றவர்களாகவும் இருக்க வேண்டியதில்லை. கிறிஸ்தவர்களாகிய நாம், வாழ்க்கைத் துணையைத் தேடத் தொடங்க வேண்டிய நேரம் இது என்று நாம் தீர்மானித்தவுடன், நாம் இந்த செயல்முறையை ஜெபத்தோடு தொடங்க வேண்டும். நம் வாழ்விற்காக தேவனின் விருப்பத்திற்கு நம்மை ஒப்புக்கொடுப்பது முதல் படியாகும். “கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்” (சங்கீதம் 37:4). தேவனை மகிழ்விப்பது என்பது அவரை அறிந்து கொள்வதிலும், பதிலுக்கு அவர் நம்மை மகிழ்விப்பார் என்று நம்புவதிலும் நாம் மகிழ்ச்சியடைகிறோம். அவர் தமது ஆசைகளை நம் இருதயங்களில் வைப்பார், ஒரு வாழ்க்கைத் துணையைத் தேடும் சூழலில், அதாவது அவர் நமக்காக விரும்பும் வாழ்க்கைத் துணையின் வகையை நாம் விரும்புகிறபடியே அவரும் விரும்புகிறார், அவ்வாறே அவர் நம்மை மேலும் மகிழ்விப்பார். நீதிமொழிகள் 3:6, “உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” என்று நமக்குச் சொல்கிறது. வாழ்க்கைத் துணையைத் தேடுவதில் அவருக்கு ஒப்புக்கொடுப்பது என்பது அவருடைய இறையாண்மையின் விருப்பத்திற்கு அடிபணிவதும், அவர் தீர்மானிப்பது எதுவானாலும் அது சிறந்தது என்று அவரிடம் சொல்வதும் ஆகும்.

தேவனின் விருப்பம் இன்னதென்று அறிந்து, அவரது விருப்பத்திற்கு நம்மை ஒப்புக்கொடுத்த பிறகு, ஒரு தெய்வபக்தியுள்ள கணவன் அல்லது மனைவியின் குணாதிசயங்கள் குறித்து நாம் தெளிவாக இருக்க வேண்டும், மேலும் ஆவிக்குரிய மட்டத்தில் தகுதி வாய்ந்த ஒருவரைத் தேட வேண்டும். இந்த குணங்களைப் பற்றி முதலில் தெளிவான புரிதல் வைத்திருப்பது முக்கியம், பின்னர் அவற்றுக்கு பொருத்தமான ஒருவரைத் தேடுவது சிறந்ததாகும். ஒருவருடன் "காதலில் விழுந்து" பின்னர் அவர் / அவள் எனக்கு துணையாக இருக்க ஆவிக்குரிய ரீதியில் தகுதி இல்லை என்பதைக் கண்டுபிடிப்பது, இதய வலியை வெறுமனே வரவழைப்பது மற்றும் நம்மை மிகவும் கடினமான நிலையில் வைப்பதுமாகும்.

நாம் தேட வேண்டும் என்று வேதாகமம் என்ன சொல்கிறது என்பதை அறிந்தவுடன், நாம் ஒரு வாழ்க்கைத் துணையைத் தீவிரமாகத் தேட ஆரம்பிக்கலாம், அவருடைய பரிபூரண விருப்பத்திற்கும் நேரத்திற்கும் ஏற்ப, நாம் பார்க்கும் பணியில் இருப்பதால், தேவன் அவரை / அவளை நம் வாழ்வில் கொண்டு வருவார் என்பதைப் புரிந்துகொள்கிறோம். நாம் ஜெபித்தால், மெய்யாகவே தேவன் நமக்காக வைத்திருக்கும் நபரிடம் நம்மை அழைத்துச் செல்வார். அவருடைய நேரத்திற்காக நாம் காத்திருந்தால், நமது பின்னணி, ஆளுமை மற்றும் ஆசைகளுக்கு மிகவும் பொருத்தமான நபர் நமக்கு தேவனால் வழங்கப்படுவார். அவருடைய நேரம் நம்முடைய நேரமல்ல என்றாலும் கூட, நாம் அவரிடமும் அவருடைய நேரத்திலும் நம்பிக்கை வைக்க வேண்டும் (நீதிமொழிகள் 3:5). சில நேரங்களில் தேவன் ஜனங்களை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று அழைக்கிறார் (1 கொரிந்தியர் 7), ஆனால் அந்த சூழ்நிலைகளில், திருமணத்திற்கான விருப்பத்தை நீக்குவதன் மூலம் அவர் அதை தெளிவுபடுத்துகிறார். தேவனின் நேரம் சரியானது, விசுவாசத்தோடும் பொறுமையோடும் அவருடைய வாக்குறுதிகளை நாம் பெறுவோம் (எபிரெயர் 6:12).

English


முகப்பு பக்கம்
நாம் ஒரு வாழ்க்கைத் துணையைத் தீவிரமாகத் தேட வேண்டுமா அல்லது தேவன் ஒரு வாழ்க்கைத்துணையைக் கொண்டுவரும்படிக்கு அவருக்காக காத்திருக்க வேண்டுமா?