ஆவிக்குரிய யுத்தத்தை பற்றி வேதம் என்ன சொல்லுகிறது?


கேள்வி: ஆவிக்குரிய யுத்தத்தை பற்றி வேதம் என்ன சொல்லுகிறது?

பதில்:
ஆவிக்குரிய யுத்தத்தை பற்றி சொல்லும்போது, அதில் இரண்டு முக்கியமான தவறுகள் இருக்கின்றன—சிலர் அதை அதிகமாய் வலியுறுத்துகிறார்கள், மற்றும் சிலர் அதை அசட்டை பண்னுகின்றார்கள். எல்லா பாவமும், சண்டையும், பிரச்சணையும் பிசாசினால் தான் வருகிறது என்று எண்ணி, பிசாசை துரத்த வேண்டும் என்கிறார்கள். வேறு சிலர் ஆவிக்குரிய உலகத்தை குறித்து கொஞ்சம் கூட நினைப்பதில்லை மற்றும் நமது போர் ஆவிகளுக்கு விரோதமானது என்று வேதம் சொல்லும் உன்மையை அசட்டை பண்னுகின்றார்கள். வெற்றிகரமான ஆவிக்குரிய யுத்தத்திற்கு திறவுகோல் என்னவென்றால் அதை பற்றி வேதத்தின் சமநிலையை அறிவது தான். சில நேரங்களில் இயேசு பிசாசுகளை தூரத்தினார், மற்ற நேரங்களில் பிசாசை பற்றி ஒன்றும் சொல்லாமல் ஜனங்களை மட்டும் சுகமாக்கினார். அபோஸ்த்தலர் பவுல் கிறிஸ்த்தவர்களை எச்சரிக்கும்பொழுது, அவர்கள் தங்களுக்குள் இருக்கும் பாவத்திற்கு விரோதமாக போர் செய்யவேண்டும் என்றும் (ரோமர் 6) பொல்லாதவனுக்கு விரோதமாய் போர் செய்யவேண்டும் என்றும் சொல்லுகிறார் (எபேசியர் 6:10-18).

எபேசியர் 6:10-12 சொல்லுகிறது, “கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.” இந்த வேத பகுதி சில முக்கியமான கருத்துகளை போதிக்கிறது: தேவனின் வல்லமையில் மாத்திரம் தான் நாம் பெலங்கொள்ள முடியும், தேவனின் சர்வாயுதவர்க்கம் நம்மை பாதுகாக்கிறது, மற்றும் நமது யுத்தம் ஆவிக்குரிய வல்லமைகளுக்கு விரோதமானது என்று சொல்லுகிறது.

தேவனின் சத்துவத்தின் வல்லமையில் பெலன்கொண்ட ஒருவர் பிரதான தூதனான மிகாவேல் ஆகும் (யூதா 1:9). தேவ தூதர்களில் மிகவும் வல்லமயுள்ள தேவதுதான் மிகாவேலாகும், ஆனால் அவன் சாத்தானை தனது பெலத்தினால் கடிந்துகொள்ளாமல், “தேவன் உன்னை கடிந்துக்கொள்வாராக!” என்று சொன்னான். கடைசி நாட்களில் மிகாவேல் சாத்தானை வீழ்த்துவான். ஆனாலும், சாத்தானோடு போராடும்போது, மிகாவேல் தேவனின் நாமத்தையும் அதிகாரத்தையும் கொண்டு கடிந்துகொண்டான், அவன் பெலத்தினால் அல்ல. இயேசு கிறிஸ்துவோடு நமக்கு இருக்கும் உறவின் மூலம் தான் கிறிஸ்தவர்கள் சாத்தான் மற்றும் பிசாசுகள் மேல் அதிகாரம் செலுத்த முடியும். இயேசுவின் நாமத்தினால் தான் நம் கடிந்துகொள்ளுதலுக்கு வல்லமை இருக்கிறது.

தேவன் நமக்கு தந்த சர்வாயுதவர்க்கத்தின் விளக்கத்தை எபேசியர் 6:13-18-ல் பார்க்கிறோம். நாம் சத்தியம் என்ற இடைகட்ச்சையை கட்டினவர்களாக, நீதியின் மார்க்கவசம் தரித்தவர்களாக, ஆயத்தமென்னும் பாதரட்சயை தொடுத்தவர்களாக, விசுவாசத்தின் கேடயம் பிடித்தவர்களாக, இரட்சிப்பென்னும் தலை சீறாவை அணிந்தவர்களாக, ஆவின் வசனமாகிய பட்டயத்தை பிடித்தவர்களாக, மற்றும் ஆவியில் ஜெபிக்கிறவர்களாக உறுதியாக நிற்க்க வேண்டும். இந்த சர்வாயுதவர்க்கம் ஆவிக்குரிய யுத்தத்தில் எதை குறிக்கிறது? சாத்தானின் பொய்களுக்கு விரோதமாய் நாம் சத்தியத்தை பேச வேண்டும். கிறிஸ்த்துவின் மரணத்தின் மூலமாக நாம் நீதியாக மாற்றப்பட்டிருக்கிறோம் என்ற சத்தியத்தில் இளைப்பாற வேண்டும். எத்தனை எதிர்ப்புகளை நாம் சந்தித்தாலும், சுவிசேஷத்தை தொடர்ந்து பிரசங்கிக்க வேண்டும். எவ்வளவு பயங்கரமாக நாம் தாக்கப்பட்டாலும், விசுவாசத்தில் தடுமாற கூடாது. நமது முக்கியமான பாதுகாப்பு, இரட்சிப்பின் நிச்சயமாகும். இந்த நிச்சயத்தை எந்த சக்தியாலும் எடுத்து போட முடியாது. எதிர்த்து போராட நமக்கு இருக்கும் ஒரே ஆயுதம் தேவ வார்த்தையாகும், நமது கருத்து மற்றும் உணர்வுகள் அல்ல. இயேசுவின் மாதிரியை பின்பற்றினவர்களாக, நாம் ஜெபிக்க வேண்டும், ஏனென்றால் சில ஆவிக்குரிய வெற்றிகள் ஜெபத்தின் மூலம் தான் பெற முடியும்.

ஆவிக்குரிய யுத்தத்தில் நமது மாதிரி இயேசுவே. அவர் வனாந்திரத்தில் சோதிக்கப்படும்போது, எப்படி சாத்தானின் நேரடி தாக்குதல்களை மேற்கொண்டார் என்று கவனியுங்கள் (மத்தேயு 4:1-11). ஒவ்வொரு சோதனையையும் ஒரே விதத்தில் மேற்கொண்டார்- “எழுதப்பட்டிருக்கிறதே” என்ற வார்த்தைகளால் ஜெயித்தார். சாத்தானுக்கு விரோதமாக உபயோகப்படுத்த சிறந்த ஆயுதம் தேவனின் வார்த்தையாகும் என்று இயேசு தெரிந்து இருந்தார். இயேசுவே வசனத்தின் மூலமாக அவனை எதிர்த்தார் என்றால், நாம் அதை உபயோகிக்காமல் இருக்க முடியுமா?

ஸ்கேவாவின் குமாரர் ஆவிக்குரிய யுத்தத்தை கையான்டது போல நாம் செய்ய கூடாது “அப்பொழுது தேசாந்தரிகளாய்த் திரிகிற மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து: பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள். பிரதான ஆசாரியனாகிய ஸ்கேவா என்னும் ஓர் யூதனுடைய குமாரர் ஏழுபேர் இப்படிச் செய்தார்கள். பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி, பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள்”(அப்போஸ்தலர் 19:13-16). ஸ்கேவாவின் குமாரர் இயேசுவின் நாமத்தை உபயோகித்தார்கள். அது மட்டும் போதாது. அவர்களுக்கு தேவனோடு எந்த உறவும் இருக்க வில்லை; ஆகையால், அவர்கள் வார்த்தையில் வல்லமையும் அதிகாரமும் இருக்க வில்லை. ஸ்கேவாவின் குமாரர் ஒரு முறைமையை சார்ந்தார்கள்; ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுவை சார்ந்திருக்கவில்லை மற்றும் அவர்கள் ஆவிக்குரிய யுத்தத்தில் தேவ வார்த்தைகளை உபயோகிக்க வில்லை. அதினால் அவர்கள் அடிக்கப்பட்டார்கள். அவர்களின் உதாரணத்தில் இருந்து கற்றுக்கொண்டு, வேதம் சொல்லும்படி ஆவிக்குரிய யுத்தத்தை செய்வோமாக.

சுருக்கமாக சொன்னால், வெற்றிகரமான ஆவிக்குரிய யுத்தத்தின் திறவுக்கோள்கள் என்ன? முதலாவதாக, நாம் தேவனின் வல்லமையை சார்ந்து கொள்ள வேண்டும், நமது பெலத்தை அல்ல. இரண்டாவதாக, நாம் இயேசுவின் நாமத்தில் கடிந்துகொள்ள வேண்டும், நம் நாமத்தில் அல்ல. மூன்றாவதாக, நாம் சர்வாயுதவர்க்கத்தினால் நம்மை பாதுகாக்க வேண்டும். நான்காவதாக, நாம் ஆவியின் வசனமாகிய பட்டயத்தை கொண்டு தான் யுத்தம் செய்ய வேண்டும். இறுதியாக நம் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், ஆவிக்குரிய யுத்தம் செய்யும்போது, எல்லா பாவமும் வியாதியும் ஒரு பிசாசு என்று எண்ணி அதை கடிந்துகொள்ள கூடாது.

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
ஆவிக்குரிய யுத்தத்தை பற்றி வேதம் என்ன சொல்லுகிறது?