ஆவிக்குரிய வளர்ச்சி என்றால் என்ன?


கேள்வி: ஆவிக்குரிய வளர்ச்சி என்றால் என்ன?

பதில்:
ஆவிக்குரிய வளர்ச்சி என்றால் நாம் அதிக அதிகமாய் இயேசு கிறிஸ்துவை போல மாறுவதாகும். நாம் இயேசுவின் மேல் விசுவாசம் வைக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் இயேசுவை போல நம்மை மாற்றவும், அதாவது அவர் சாயலுக்கு ஒத்த சாயலை நாம் அடையவும், நம்மில் செயலாற்றுகிறார். 2 பேதுரு 1:3-8-ல் ஆவிக்குரிய வளர்ச்சியை பற்றி நன்றாக விவரிக்கப்பட்டிருக்கிறது. நமக்குள் இருக்கும் தேவ வல்லமையினால் நாம் தேவ பக்திக்கடுத்த வாழ்கை வாழ தேவையானது எல்லாம் இருக்கிறது என்று இந்த வசனங்கள் சொல்லுகிறது. தேவ பக்தியாக வாழ்வது தான் ஆவிக்குரிய வளர்ச்சியின் நோக்கமாகும். நமக்கு வேண்டிய எல்லாம் “அவரை அறிகிற அறிவின் மூலமாக” வருகிறது. அவரை அறிவதே நமக்கு வேண்டிய எல்லாம் பெற்றுக்கொள்வதற்கு திறவு கோலாக இருக்கிறது. அவரை அறிகிற அறிவு வேத வசனத்தின் மூலமாக கிடைக்கிறது. வேதம், நாம் பரிசுத்தம் அடையவும் மற்றும் வளர்ச்சி அடையவும் செய்கிறது.

கலாத்தியர் 5:19-23-ல் இரண்டு பட்டியல்கள் இருக்கிறது. முதலாவது, “மாம்சத்தின் கிரியைகள்” (கலாத்தியர் 5:19-21). நாம் இரட்சிக்கப்படுவதற்கு முன், இந்த காரியங்கள் நமது வாழ்கையில் இருந்தன. இந்த மாம்சத்தின் கிரியைகளை தேவனிடம் அறிக்கை செய்து, மனந்திரும்பி, மற்றும் தேவனின் உதவியால் மேற்க்கொள்ள வேண்டும். நாம் ஆவிக்குரிய வாழ்கையில் வளர வளர, இந்த மாம்சத்தின் கிரியைகள் நம் வாழ்கையில் குறைகின்றது. இரண்டாவது பட்டியல், “ஆவியின் கனிகள்” (கலாத்தியர் 5:22-23). இரட்சிக்கப்பட்ட நம் வாழ்கையில் இவைகள் காணபட வேண்டும். ஒரு விசுவாசியின் வாழ்கையில் ஆவியின் கனிகள் அதிகமாய் வெளிப்படுவது தான் அவனின் ஆவிக்குரிய வளர்ச்சியின் அடையாலமாகும்.

இரட்சிக்கப்படும்போது, ஆவிக்குரிய வளர்ச்சி ஆரம்பமாகின்றது. ஆவியானவர் நமக்குள் வாசம் பண்னுகின்றார் (யோவான் 14:16-17). நாம் கிறிஸ்த்துவில் புது சிருஷ்டிகளாக இருக்கிறோம் (2 கொரிந்தியர் 5:17). நமது பழைய, பாவ சுபாவம் நீங்கி, கிறிஸ்த்துவின் சுபாவத்தை பெற்றுக்கொள்கிறோம் (ரோமர் 6-7). ஆவிக்குரிய வளர்ச்சி நமது வாழ்நாள் முழுவதும் செயல்படும் ஒன்று. ஆவிக்குரிய வளர்ச்சி, நாம் எந்த அளவு வேதத்தை வாசித்து அதின்படி நடக்கிறோம் (2 தீமோத்தேயு 3:16-17) மற்றும் ஆவியின்படி நடக்கிறோம் (கலாத்தியர் 5:16-26) என்பதை சார்ந்ததாகும். நாம் ஆவிக்குரிய வளர்ச்சி அடைய தேவன் விரும்புகிறார், மற்றும் இந்த அனுபவத்தை பெறுவதற்கு நமக்கு வேண்டிய எல்லாவற்றையும் அவர் தந்திருக்கிறார். பரிசுத்த ஆவியானவரின் உதவியால், நாம் பாவத்தை மேற்கொள்ள முடியும் மற்றும் நமது இரட்சகர் இயேசு கிறிஸ்துவை போல மாறவும் முடியும்.

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
ஆவிக்குரிய வளர்ச்சி என்றால் என்ன?