settings icon
share icon
கேள்வி

ஆவிக்குரிய வரங்களை தேவன் எப்படி பகிர்ந்தளிகிறார்? நான் கேட்கும் ஆவிக்குரிய வரத்தை தேவன் எனக்குக் கொடுப்பாரா?

பதில்


ரோமர் 12:3-8 மற்றும் 1 கொரிந்தியர் 12-ம் அதிகாரம், ஒவ்வொரு கிறிஸ்தவனும் கர்த்தருடைய விருப்பத்தின்படி ஆவிக்குரிய வரங்களை பெறுகிறான் என்பதை தெளிவுபடுத்துகின்றன. கிறிஸ்துவின் சரீரத்தினுடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்காக ஆவிக்குரிய வரங்கள் கொடுக்கப்படுகிறது (1 கொரிந்தியர் 12:7; 14:12). இந்த ஆவிக்குரிய வரங்கள் கொடுக்கப்படும் சரியான நேரம் குறிப்பாக குறிப்பிடப்படவில்லை. பெரும்பாலானோர் ஆவிக்குரிய வரங்கள் ஆவிக்குரிய பிறப்பின் போது (அதாவது இரட்சிக்கப்படும் தருணம்) கொடுக்கப்படுவதாகக் கருதுகின்றனர். இருப்பினும், சில வசனங்கள் தேவன் இரட்சிக்கப்பட்ட பின்னரும் ஆவிக்குரிய வரங்களைக் கொடுக்கிறார் என்று கூறுகின்றன. 1 தீமோத்தேயு 4:14 மற்றும் 2 தீமோத்தேயு 1:6 ஆகிய இரண்டு வேதப்பகுதிகளும் தீமோத்தேயு "தீர்க்கதரிசனத்தினாலே" நியமனம் செய்யப்பட்டபோது, அவர் ஆவிக்குரிய வரத்தைப் பெற்றதைக் குறிக்கிறது. தீமோத்தேயுவின் நியமத்தில் மூப்பர்களில் ஒருவர் தீமோத்தேயு தன்னுடைய எதிர்கால ஊழியத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய ஆவிக்குரிய வரத்தைப் பற்றி பேசுகிறார்.

1 கொரிந்தியர் 12:28-31 மற்றும் 1 கொரிந்தியர் 14:12-13-ல், பரிசுகளைத் தேர்ந்தெடுப்பது நாமல்ல தேவனே என்று சொல்லப்பட்டிருக்கிறோம். எல்லோருக்கும் ஒரு குறிப்பிட்ட வரம் இருப்பதில்லை என்று இந்த பத்திகள் குறிப்பிடுகின்றன. கொரிந்து சபை விசுவாசிகளுக்கு, அவர்கள் ஆவிக்குரிய வரங்களை இச்சித்து அல்லது ஆவிக்குரிய வரங்களுக்கு ஆவலாய் பின்தொடரும் காரியத்தில், ஆவிக்குரிய வாழ்க்கையில் கட்டியெழுப்புகிறதான தீர்க்கதரிசனம் (மற்றவர்களைக் கட்டியெழுப்புவதற்காக தேவனுடைய வார்த்தையைப் பேசுதல்) போன்ற வரங்களை நாடவேண்டும் என்று பவுல் கூறுகிறார். மேலான வரங்கள் ஏற்கனவே அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தால், அவர்கள் மேலான வரங்களை நாட வேண்டும் என்றும் அவைகளைப் பெற்றுக்கொள்ளுகிறதற்கு வேறே வாய்ப்புகள் இல்லை என்றும் ஏன் பவுல் கூறவேண்டும்? சாலொமோன் போலும் தேவனுடைய ஜனங்களுக்கு மேலாக ஒரு நல்ல ஆட்சியைப் புரிவதற்கு தேவனிடமிருந்து ஞானத்தைத் தேடினது போல, அவருடைய சபைக்கு அதிக நன்மை உண்டாக வேண்டுமென்கிற நமக்குத் தேவையான ஆவிக்குரிய வரங்களை நமக்கு அருளுகிறார் என்று நம்பலாம் என்பதை ஒருவரை ஊக்குவிக்கிறது.

இதுவரையில் கண்ட காரியங்களின் வெளிச்சத்தில், ஆவிக்குரிய வரங்களைப் பொறுத்தவரை தேவனே அவருடைய விருப்பத்தின்படி ஆவிக்குரிய வரங்களைத் தேர்ந்தெடுத்து பகிர்ந்தளிக்கிறார், இந்த ஆவிக்குரிய வரங்களை தேர்ந்தெடுப்பது நமக்குரியது அல்ல. ஒவ்வொரு கொரிந்து பட்டிண விசுவாசியும் தீர்க்கதரிசனம் உரைத்தல் போன்ற ஒரு குறிப்பிட்ட வரத்தை ஆவலோடு நாடினால், அந்த அன்பளிப்பு அனைத்தையும் தேவன் அவர்களுக்கு அவர்கள் மிகவும் விரும்பி நாடுவதற்காக கொடுக்க மாட்டார். அவர் அப்படி செய்தால், கிறிஸ்துவின் சரீரத்தின் மற்ற செயல்களில் யார் சேவை செய்வது?

தேவனுடைய கட்டளையானது தேவன் அளிக்கும் ஆற்றல் என்பது மிகத் தெளிவான ஒரு விஷயம் ஆகும். தேவன் நம்மை ஏதேனும் ஒரு செயலை செய்ய வேண்டுமென்று கட்டளையிட்டால் (சாட்சி போன்ற, அன்பற்றவர்களில் அன்பு கூறுதல், ஜாதிகளை சீஷராக்குதல் போன்றவைகளை), அவர் நம்மை இதைசெய்யும்படிக்கு ஆற்றலளிப்பார். சிலர் சுவிசேஷ வரத்தை மற்றவர்களைப்போல மாட்டார்கள், ஆனால் எல்லா கிறிஸ்தவர்களுமே சாட்சிபகர்ந்து யாவரையும் சீடராக்கவேண்டும் என்கிற கட்டளைப் பெற்றிருக்கிறோம் (மத்தேயு 28:18-20, அப்போஸ்தலர் 1:8). நம் அனைவருக்கும் சுவிசேஷத்தின் ஆவிக்குரிய வரம் இருக்கிறதோ இல்லையோ நாம் அனைவரும் சுவிசேஷம் அறிவிப்பதற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம். வார்த்தையைப் படிப்பதற்கும் போதிக்கும் திறனை வளர்த்துக்கொள்வதற்கும் போராடும் ஒரு உறுதியான கிறிஸ்தவன் போதிக்கும் வரத்தை ஒரு பொருட்டாக எண்ணாமல் இருப்பதைக் காட்டிலும் சிறந்த போதகராக போதிப்பதற்கான ஆவிக்குரிய வரத்தைக் கொண்டிருக்கலாம்.

நாம் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டபோது நமக்கு ஆவிக்குரிய வரங்கள் அளிக்கப்படுகிறதா, அல்லது நாம் தேவனோடு நடப்பதன் மூலம் அவைகள் உருவாக்கப்படுகிறதா? பதில் இரண்டுமே. பொதுவாக, ஆவிக்குரிய வரங்கள் இரட்சிக்கப்படுகிற போது கொடுக்கப்படுகின்றன, ஆனால் நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியால் அது உருவாக்கப்பட வேண்டும். உங்கள் இதயத்தில் உள்ள ஆசை உங்கள் ஆவிக்குரிய வரத்தில் பின்பற்றப்பட்டு, வளர்ச்சியடைய முடியுமா? சில ஆவிக்குரிய வரங்களைப் பெற்றுக்கொள்ளும் படியாக நாடித் தேடலாமா? 1 கொரிந்தியர் 12:31 இது சாத்தியம் என்பதை சுட்டிக்காட்டுகிறது: "முக்கியமான வரங்களை நாடுங்கள்." நாம் தேவனிடத்திலிருந்து ஆவிக்குரிய வரங்களை எதிர்பார்த்து அவற்றை அதன் குறிப்பட்ட பகுதியில் மேம்படுத்துவதற்காக அதீத விருப்பமுள்ளவர்களாக இருக்கலாம். அதே நேரத்தில், அது தேவனுடைய சித்தம் இல்லை என்றால், நீங்கள் எந்த அளவிற்கு உறுதியாக போராடி கேட்டாலும் அதைப் பெறமுடியாது. தேவன் அளவில்லாத ஞானமுள்ளவர், அவர் எந்த அளவிற்கு நீங்கள் அவருடைய வரங்கள் மூலமாக ராஜ்யத்திற்கு மிகுந்த நன்மையளிபீர்கள் என்பதை அவர் அறிவார்.

ஒரு வரம் அல்லது வேறொருவரம் என எவ்வளவு வரங்களை நாம் கிடைக்கப்பட்டாலும், ஆவிக்குரிய வரங்களின் பட்டியல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல பகுதிகளை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்: விருந்தோம்பல், இரக்கம் காண்பித்தல், ஒருவரையொருவர் சேவித்தல், சுவிசேஷம் அறிவித்தல் முதலியன. அவருடைய மகிமைக்காக மற்றவர்களை கட்டி எழுப்புவதன் நோக்கத்தோடு தேவனைத் தேட முயலுகையில், அவர் அவருடைய நாமத்தை மகிமைப்படுத்துகிறார், அவருடைய சபையை வளர்த்து, நமக்கு பிரதிபலன்களை அளிப்பார் (1 கொரிந்தியர் 3:5-8; 12:31-14:1). நாம் அவரை நம்முடைய மகிழ்ச்சியாக கொண்டிருக்கும்போது, அவர் நம் இருதயத்தின் விருப்பங்களை நமக்குத் தருவார் என்று தேவன் வாக்குறுதி அளிக்கிறார் (சங்கீதம் 37:4-5). இதுவே நமது நோக்கமாகவும் திருப்தியுமாக இருந்து அவரைச் சேவிக்க நம்மை தயார்படுத்துகிறது.

English



முகப்பு பக்கம்

ஆவிக்குரிய வரங்களை தேவன் எப்படி பகிர்ந்தளிகிறார்? நான் கேட்கும் ஆவிக்குரிய வரத்தை தேவன் எனக்குக் கொடுப்பாரா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries