settings icon
share icon
கேள்வி

ஆதியாகமம் 6:1-4ல் குறிப்பிடப்பட்டுள்ள தேவகுமாரர் மற்றும் மனுஷகுமாரத்திகள் யார்?

பதில்


ஆதியாகமம் 6:1-4 வரையிலுள்ள வசனங்களில் தேவகுமாரரையும் மனுஷகுமாரத்திகளையும் குறித்து வாசிக்கிறோம். தேவகுமாரர் யார், இவர்கள் மனுஷ குமாரத்திகளை சேர்ந்ததினால் பிள்ளைகளைப் பெற்றபோது இவர்கள் பேர் பெற்ற பிள்ளைகள் இராட்சதர்களுக்கு இணையான மனுஷராகிய பலவான்களானார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது (அதாவது நெபீலீமாக (இராட்சதராக) காணப்பட்டார்கள்) என்பதைக்குறித்து பல கருத்துக்கள் நிலவுகின்றன.

தேவகுமாரர் யார் என்பதைப்பற்றி முன்று பிரதானமான கருத்துப்பாங்குகள் இருக்கின்றன: 1) அவர்கள் விழுந்துபோன தூதர்கள், 2) அவர்கள் பலவான்களாகிய மனித அரசர்கள், மற்றும் 3) அவர்கள் சேத்தின் வழிவந்தவர்கள் அதாவது சேத்தின் வழிவந்த தேவகுமாரர் காயின் வம்சத்து குமாரத்திகளை மணந்தார்கள் என்பதாகும். முதல் கருத்துப்பாங்குக்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில், பழைய ஏற்பாட்டில் தேவகுமாரர் “தேவதூதர்களாக” காண்பிக்கப்படுகிறார்கள் (யோபு 1:6; 2:1; 38:7). இதில் ஒளிந்துள்ள ஒரு வலுவான பிரச்சினை என்னவெனில் மத்தேயு 22:30ல், தூதர்கள் திருமணம் செய்துகொள்வதில்லை. தூதர்கள் ஒரு மனிதபாலினமாகவோ அவர்களால் வாரிசுகளை உருவாக்க முடியும் என்பதற்கு நம்பகமான ஆதாரங்களோ வேதாகமத்தில் கொடுக்கப்படவில்லை. மற்ற இரண்டு கூற்றுகளும் இதை ஒரு பிரச்சினையாக தெரிவிக்கவில்லை.

2 மற்றும் 3-வது கூற்றுகளில் காணப்படும் பெலவீனம் என்னவெனில் சாதாரணமாக ஒரு ஆண் ஒரு பெண்ணை மணந்துகொள்ளும்போது அவர்களுக்கு பிறக்கிற குழந்தைகள் இராட்சத குணமுடைய பிள்ளைகளாகவோ அல்லது இராட்சதர்களாகவோ பெற்றெடுக்க முடியும் என்பதாகும். தேவன் பூமியின்மேல் ஜலப்பிரளயத்தை வெள்ளத்தை வரும்படி கட்டளையிட்டார் (ஆதி 6:5-7). தேவன் ஒருபோதும் அக்கிரமத்தினை பொறுப்பதில்லை. ஆதியாகமம் 6:5-7ல் சொல்லப்பட்ட வசனங்களில் வரவிருக்கிற நியாயத்தீர்ப்பையும் ஆதியாகமம் 6:1-4ல் வசனங்களில் காணப்படும் சம்பவங்களுக்கும் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. ஆபாசமான தாறுமாறான விழுந்துபோன தூதர்கள் மனுஷகுமாரத்திகளை மணந்துகொண்ட காரியம் மட்டுமே வருகிறதான கடுமையான தீர்ப்புக்ககுள்ளாக்கப்பட்டார்கள்.

முன்னமே குறிப்பிட்டதுபோல, முதல் கருத்துப்பாங்கில் இருக்கிற பெலவீனமான கருத்து என்னவெனில் மத்தேயு 22:30ல் “உயிர்த்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை. அவர்கள் பரலோகத்திலே தேவதூதர்களைப்போல் இருப்பார்கள்” என தெரிவிக்கிறது. ஆனாலும் தேவதூதர்கள் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்பதாக குறிப்பிடப்படவில்லை மாறாக தூதர்கள் திருமணம் செய்ய கூடாது என்பதாக மட்டும் தெரிவிக்கிறது. இரண்டாவதாக மத்தேயு 22:30-ல் “அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்” என்று விளக்குகிறது. அவர்கள் விழுந்துபோனவர்கள் என்றோ, தேவனின் படைப்புகளில் அக்கறை இல்லாதவர்கள் என்றோ, தேவனுடைய திட்டத்தை தொந்தரவு செய்யவேண்டும் என்பதோ அவர்களது நோக்கமாக காட்டப்படவில்லை. உண்மையென்னவெனில் தேவகுமாரர்கள் திருமணம் செய்துகொள்வது மற்றும் மனுஷகுமாரத்திகளை சேருவது என்பதெல்லாம் சாத்தானின் செயல்களை நியாயப்படுத்துவது என்பதாக இல்லை.

முதல் கருத்துப்பாங்குதான் ஏற்றுக்கொள்ளத்தக்கதான மிகவும் உண்மையான நிலையாகும். ஆம் மிகவும் கவனிக்கத்தக்க மாற்றுக்கருத்து என்னவென்றால், தூதர்கள் பாலியல் மோகம் இல்லாதவர்கள் மற்றும் “தேவகுமாரர்” விழுந்துபோன தூதர்கள் தான் என்பது முரண்பாட்டைக் கொண்டுவருகிறதாக இருக்கிறது. எப்படியென்றாலும் தேவதூதர்கள் ஆவிக்குரிய ஜீவன்கள் (எபிரெயர் 1:14), அவர்கள் மனிதர்களாக தோன்றுவதை தெரிந்து கொண்டார்கள் (மாற்கு 16:5). உள்ளவன். சோதோம் கோமேரா பட்டணத்து மனிதர்கள் லோத்துவுடன் இருந்த இரண்டு தூதர்களுடனும் உறவு வைத்துக்கொள்ள விரும்பினார்கள். (ஆதியாகமம் 19:1-5). தேவதூதர்கள் மனிதர்களின் உருவத்தை எடுத்துக்கொள்ளவும், மனிதர்களைப்போல பேசவும், அவர்களோடு பாலியல் உறவு வைத்துக்கொள்ளவும் அதன் மூலம் மனுஷர்களை உருவாக்கவும் கூடும் என்று நம்பத்தகுந்த, உண்மைபோல் தோன்றுகிறதாயிருக்கிறது. விழுந்துபோன தூதர்கள் ஏன் இந்த செயலை மீண்டும் செய்யவில்லை? விழுந்துபோன தூதர்களால் இதை மீண்டும் செய்யமுடியாததற்கு காரணம் அவர்கள் செய்த பாவத்தின் காரணமாக அவர்கள் சிறைப்பட்டதினாலேயே முடியாமற்போயிற்று (யூதா 6வது வசனத்தில் விவரிக்கப்பட்டுள்ளது). ஆரம்ப காலத்த்து எபிரேய வியாக்கியான பண்டிதர்கள், அப்போகிரிப்பா, மற்றும் போலியான எழுத்துக்களில் ஒருமித்த கருத்தாக பொதுவாக சொல்லப்பட்ட கருத்து என்னவெனில், “தங்கள் வாசஸ்தலத்ததைவிட்டு விழுந்துபோன தூதர்களே இந்த “தேவகுமாரர்” என்பதாகும். இருப்பினும் இந்த விவாதம் முடிவில்லாமல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், ஆதியாகமம் 6:1-4ல் விழுந்து போன தேவ தூதர்கள் மனுஷ குமாரத்திகளோடு சேர்ந்தார்கள் என்பதற்கு வலுவான சந்தர்ப்பம், இலக்கணம் சார்ந்த மற்றும் வரலாற்று ஆதாரம் உள்ளது.

English



முகப்பு பக்கம்

ஆதியாகமம் 6:1-4ல் குறிப்பிடப்பட்டுள்ள தேவகுமாரர் மற்றும் மனுஷகுமாரத்திகள் யார்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries