தேவனுக்கு முன் எல்லா பாவங்களும் சமமானதா?


கேள்வி: தேவனுக்கு முன் எல்லா பாவங்களும் சமமானதா?

பதில்:
மத்தேயு 5:21-28-ல் மனதில் இச்சை கொள்வது வேசித்தனத்திற்க்கும், கோபம் கொள்வது கொலைக்கு ஒப்பானது என்று இயேசு கூறியுள்ளார். ஆனால், எல்லா பாவங்களும் ஒரே சமம் தான் என்பதல்ல இதின் அர்த்தம். பாவத்தின் கிரியை செய்யாமலிருந்தும், பாவம் செய்யவேண்டும் என்று மனதில் நினைக்கின்றதே பாவமாகும் என்று இயேசு பரிசேயருக்கு கற்றுத்தரும்படி இதை சொன்னார். பாவம் செய்யும்படி நினைப்பது பாவமல்ல, பாவம் செய்தால் தான் பாவம் என்று இயேசுவின் நாட்களில் இருந்த மத தலைவர்கள் போதித்துவந்தார்கள். ஆனால் தேவன் மனிதனின் செய்யல்களை மட்டுமல்ல நினைவுகளை கூட நியாயம் தீர்கிறார் என்று அவர்கள் உணரும்படி செய்கிறார். நமது மனதில் இருப்பதின் விளைவாக தான் நமது கிரியைகள் இருக்கும் என்று இயேசு கூறினார் (மத்தேயு 12:34).

இச்சையும் வேசித்தனமும் இரண்டும் பாவங்கள் தான் என்று இயேசு கூறினார்; ஆனால் அவைகள் இரண்டும் சமமானது என்பதல்ல அதின் அர்த்தம். ஒரு நபரை வெறுப்பதை விட கொலை செய்வது பயங்கரமான பாவமாகும், ஆனால் அவை இரண்டும் பாவங்கள் தான். பாவத்திற்க்கு வேறு நிலைகள் உள்ளது. சில பாவங்கள் மற்ற பாவங்களை விட மோசமானவைகள். அதே நேரத்தில், இரட்சிப்பு மற்றும் நித்திய தண்டனை என்று வரும்போது, எல்லா பாவங்கள் ஒரே போல தான் கருதப்படுகிறது. எல்லா பாவங்கள் நித்திய ஆக்கினை தீர்ப்புக்கு நேரே நடத்தும் (ரோமர் 6:23). எல்லா பாவங்களும், அது எவ்வளவு சிறிய பாவமாயிருந்தாலும், அவைகள் இனையற்ற, நித்திய தேவனுக்கு விரோதமான பாவங்கள், அதினால் அதன் தண்டனையும் இனையற்றதும், நித்தியமுமாக தான் இருக்கும். இன்னும், தேவன் மண்னிக்கமுடியாத பெரிய “பாவம்” என்று ஒன்றும் இல்லை.

பாவத்திற்கான விலை கிரயத்தை கொடுக்கும் படி இயேசு மரித்தார் (1 யோவான் 2:2). நம் எல்லா பாவங்களுக்காகவும் இயேசு மரித்தார் (2 கொரிந்தியர் 5:21). தேவனுக்கு முன்பாக எல்லா பாவங்களும் ஒரே சமம் தானா? ஆம் மற்றும் இல்லை. பெரிய பாவம் சின்ன பாவம் என்று அவருக்கு ஒன்றுமில்லை. ஆனால், தண்டனை அல்லது மன்னிப்பின் அடிபடையில் பார்க்கும்போது, அவருக்கு எல்லா பாவமும் சமம் தான்.

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
தேவனுக்கு முன் எல்லா பாவங்களும் சமமானதா?