settings icon
share icon
கேள்வி

வேதாகம அடையாள வரங்களின் நோக்கம் என்னவாக இருந்தது?

பதில்


வேதாகம அடையாள வரங்களைப் பற்றி நாம் பேசும்போது, அந்நியபாஷைகளில் பேசுவது, தரிசனங்கள், குணமாக்குதல், மரித்தவர்களை உயிரோடு எழுப்புதல் மற்றும் தீர்க்கதரிசனம் உரைப்பது போன்ற அற்புதங்களைக் குறிப்பிடுகிறோம். விசுவாசிகள் மத்தியில் அவைகள் இருந்தனவா இல்லையா என்கிற கேள்வி இல்லை, ஏனென்றால் வேதாகமம் அவைகளை தெளிவாக விவரிக்கிறது. விசுவாசிகளிடையே கருத்து வேறுபாடு எங்கு எழுகிறது என்றால் அவைகள் கொடுக்கப்பட்டதன் நோக்கமாகும், அதே போல் நாம் இன்று அவற்றை அனுபவிக்க வேண்டுமா என்ற கேள்வியும் உள்ளது. இந்த வரங்கள் ஒருவரின் இரட்சிப்பின் அடையாளம் என்று சிலர் கூறுகிறார்கள், மற்றவர்கள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தின் அடையாளம் என்று கூறுகிறார்கள், இன்னும் சிலர் நற்செய்தியின் செய்தியை அங்கீகரிப்பதே அவற்றின் நோக்கம் என்று கூறுகிறார்கள். நாம் எப்படி உண்மையை அறிய முடியும்? இந்த காரியங்களைப் பற்றிய தேவனுடைய நோக்க அறிக்கைகளைக் கண்டுபிடிக்க நாம் வேதத்தை ஆராய்ந்து தேட வேண்டும்.

வேதாகமத்தில் அடையாள வரங்கள் பற்றிய ஆரம்பகால குறிப்புகளில் ஒன்று யாத்திராகமம் 4-ஆம் அதிகாரத்தில் காணப்படுகிறது, எகிப்திலிருந்து விடுதலைப்பெற்று வரவிருக்கும் மீட்பு பற்றி மோசே தேவனால் அறிவுறுத்தப்படுகிறார். தேவன் தன்னை அனுப்பினார் என்று மக்கள் நம்பமாட்டார்கள் என்று மோசே கவலைப்பட்டார், எனவே தேவன் அவன் கையில் வைத்திருந்த கோல் ஒரு பாம்பாக மற்றும் அவனது கை குஷ்டம் பிடித்ததாக மாறும் அடையாளங்களைக் கொடுத்தார். தேவன் இந்த அடையாளங்களை "ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்குத் தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார்" (வசனம் 5). ஜனங்கள் இன்னும் நம்பவில்லை என்றால், தேவன் அப்பொழுது நீ நதியின் தண்ணீரை மொண்டு நிலத்தில் ஊற்றுவாயாக; நதியில் மொண்ட தண்ணீர் வெட்டாந்தரையிலே இரத்தமாகும் என்றார் (வசனம் 9). இஸ்ரவேல் ஜனங்களின் நோக்கம் அவர்கள் தேவனுடைய தூதுவரை நம்புவார்கள் என்பதாகும்.

மோசே ஜனங்களை விடுவிப்பதற்காக பார்வோனுக்குக் காண்பிக்கும் அற்புத அடையாளங்களையும் தேவன் கொடுத்தார். யாத்திராகமம் 7:3-5 இல், தேவன் மோசேயிடம் எகிப்துதேசத்தில் என் அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாய் நடப்பிப்பேன் என்று கூறினார், எனவே “நான் எகிப்தின் மேல் என் கையை நீட்டி, இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் நடுவிலிருந்து புறப்படப் பண்ணும்போது, நானே கர்த்தர் என்று எகிப்தியர் அறிவார்கள் என்றார்." எகிப்து மக்கள் தேவன் இஸ்ரவேலர்களை விடுவிக்க கிரியை செய்கிறார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்பினார். யாத்திராகமம் 10:7 இல், மோசே பார்வோனிடம், தலைச்சன் பிள்ளைகளை கொல்லும் கடைசி வாதையை வருவித்து, தேவன் எகிப்தியர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் இடையில் வேறுபாடு காட்டுகிறார் என்பதைக் காண்பிப்பதாகக் கூறினார். அடையாளங்கள் மற்றும் அதிசயங்கள் பார்வோனுக்கும் எகிப்தியர்களுக்கும் தேவனுடைய செய்தியை உறுதிப்படுத்தின, எனவே மோசே தேவனால் அனுப்பப்பட்டார் என்பதை அவர்கள் அறிவார்கள்.

கர்மேல் மலையில் (1 ராஜாக்கால் 18) பொய் தீர்க்கதரிசிகளை எலியா எதிர்கொண்டபோது, "தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படி செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப்பண்ணும் கர்த்தாவே, நீர் தேவனாகிய கர்த்தர் என்றும், தேவரீர் தங்கள் இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த ஜனங்கள் அறியும்படிக்கு, என்னைக் கேட்டருளும், ... என்றான்” (வசனம் 36-37). அவரும் மற்ற தீர்க்கதரிசிகளும் நிகழ்த்திய அற்புதங்கள் தேவன் தீர்க்கதரிசிகளை அனுப்பியதையும், இஸ்ரவேலரின் மத்தியில் தேவன் கிரியை செய்வதையும் உறுதிப்படுத்துவதாகும்.

யோவேலுக்கு இஸ்ரவேல் மீது தேவனுடைய நியாயத்தீர்ப்பின் செய்தி கொடுக்கப்பட்டது, அந்த செய்தியில் இரக்கம் மற்றும் நம்பிக்கை பற்றிய தீர்க்கதரிசனம் இருந்தது. நியாயத்தீர்ப்பு தீர்க்கதரிசனமாக வந்தபோது, மக்கள் மனந்திரும்பியபோது, தேவன் நியாயத்தீர்ப்புகளை நீக்கி தனது ஆசீர்வாதத்தை மீட்டெடுப்பேன் என்று கூறினார்: "நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், வேறொருவர் இல்லையென்றும் அறிந்துகொள்வீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை" (யோவேல் 2:27). அந்த அறிக்கைக்குப் பிறகு, தேவன் தனது ஆவியை மக்கள் மீது ஊற்றுவதைப் பற்றி பேசினார், அதனால் அவர்கள் தீர்க்கதரிசனம் கூறுவார்கள், தரிசனங்களைப் பார்ப்பார்கள், அதிசயங்கள் நடப்பதைப் பார்ப்பார்கள். பெந்தெகொஸ்தே நாளில் சீடர்கள் அந்நிய பாஷையில் பேசத் தொடங்கியபோது (அப். 2:1-21), "இது யோவேல் தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது" என்று பேதுரு அறிவித்தார். அதன் நோக்கம் என்னவாக இருந்தது? பேதுரு மற்றும் மற்றவர்கள் கொண்டு வந்த செய்தியை மக்கள் அறிவார்கள் என்பது தேவனுடைய செய்தி.

இயேசுவின் ஊழியத்தில் பல்வேறு அடையாளங்களும் அற்புதங்களும் இருந்தன. அவருடைய அற்புதங்களின் நோக்கம் என்னவாக இருந்தது? யோவான் 10:37-38 இல், தேவதூஷணத்திற்காக கல்லெறிய விரும்பும் யூதர்களுக்கு இயேசு பதிலளித்தார், மேலும் அவர் கூறினார், "என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்கவேண்டியதில்லை. செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார்." பழைய ஏற்பாட்டைப் போலவே, இயேசுவின் நோக்கம் அற்புதங்கள் அவருடைய தூதுவரின் மீது தேவனுடைய கையை உறுதிப்படுத்துவதாக இருந்தது.

பரிசேயர்கள் இயேசுவிடம் ஒரு அடையாளத்தைக் காட்டும்படி கேட்டபோது, இயேசு கூறினார், "இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கத்தரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்” (மத்தேயு 12:39-41). ஒரு அடையாளத்தின் நோக்கம் மக்கள் தேவனுடைய செய்தியை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப பதிலளிப்பார்கள் என்று இயேசு மிகவும் தெளிவாக இருந்தார். அதேபோல், யோவான் 4:48 இல், இயேசு ராஜாவின் மனுஷனிடத்தில், "நீங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் காணாவிட்டால் விசுவாசிக்கமாட்டீர்கள் என்றார்." நம்புவதற்கு போராடுபவர்களுக்கு அடையாளங்கள் உதவியாக இருந்தன, ஆனால் கிறிஸ்துவில் இரட்சிப்பின் செய்தி தான் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த இரட்சிப்பின் செய்தியை பவுல் 1 கொரிந்தியர் 1:21-23 இல் கோடிட்டுக் காட்டினார்: “எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று. யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள்; நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார்." அடையாளங்கள் அவற்றின் நோக்கத்தைக் கொண்டுள்ளன, ஆனால் அவை ஒரு பெரிய முடிவுக்கு ஒரு வழிமுறையாகும் அதாவது நற்செய்தியைப் பிரசங்கிப்பதன் மூலம் ஆத்துமாக்களின் இரட்சிப்பு பிரதானமானதாக கருதப்பட்டது. 1 கொரிந்தியர் 14:22 இல், பவுல் "அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது" என்று தெளிவாகக் கூறுகிறார். கிறிஸ்துவின் செய்தி உண்மைதான் என்று தேவன் விசுவாசியவர்களை விசுவாசிக்க வைப்பதற்காக அந்நியபாஷைகளில் பேசுவது போன்ற அற்புத அடையாளங்களைப் பயன்படுத்தினார், ஆனால் மீதமுள்ள பின்னணி காட்டுவது போல், மிக முக்கியமான விஷயம் நற்செய்தியின் தெளிவான அறிவிப்பு ஆகும்.

அடையாளங்கள் மற்றும் அற்புதங்களைப் பற்றிய விவாதங்களில் அடிக்கடி கவனிக்கப்படாத ஒரு காரியம் என்னவென்றால், வேதத்தில் வருகிற அவற்றின் காலம் மற்றும் வேதாகமத்தில் அவற்றிற்கு கொடுக்கப்பட்டுள்ள இடம். பிரபலமான நம்பிக்கைக்கு மாறாக, வேதாகம காலங்களில் மக்கள் எப்போதும் தங்கள் வாழ்வில் அற்புதங்களைக் காணவில்லை. உண்மையில், வேதாகமத்தின் அற்புதங்கள் பொதுவாக மனிதகுலத்துடன் தேவன் கையாளும் சிறப்பு நிகழ்வுகளைச் சுற்றியேத் தொகுக்கப்படுகின்றன. எகிப்திலிருந்து இஸ்ரவேலர்களின் விடுதலையும் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைவதும் பல அற்புதங்களுடன் இருந்தன, ஆனால் அதன்பிறகு அதிசயங்கள் விரைவில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிட்டன. பிறகு ராஜ்யத்தின் பிற்பகுதியில், தேவன் மக்களை நாடுகடத்தப்படும்படியாக அனுமதித்தபோது, அவர் சில தீர்க்கதரிசிகளை அற்புதங்களை செய்ய அனுமதித்தார். இயேசு நம்மிடையே வாழ வந்தபோது, அவர் அற்புதங்களைச் செய்தார், அப்போஸ்தலர்களின் ஆரம்பகால ஊழியத்தில், அவர்கள் அற்புதங்களைச் செய்தனர், ஆனால் அந்த காலங்களுக்கு வெளியே, வேதாகமத்தில் மிகக் குறைவான அற்புதங்கள் அல்லது அடையாளங்களையேக் காண்கிறோம். வேதாகம காலங்களில் வாழ்ந்த பெரும்பான்மையான மக்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் தங்கள் கண்களால் பார்த்ததில்லை. தேவன் ஏற்கனவே அவர்களுக்கு வெளிப்படுத்தியவற்றில் அவர்கள் நம்பிக்கையுடன் வாழ வேண்டியிருந்தது.

ஆரம்பகால சபையில், அடையாளங்களும் அற்புதங்களும் முதன்மையாக பல்வேறு மக்கள் குழுக்களிடையே நற்செய்தியின் முதல் விளக்கக்காட்சியை மையமாகக் கொண்டிருந்தன. பெந்தெகொஸ்தே நாளில், எருசலேமில் கூடிவந்த “வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள்” (அப். 2:5). இந்த யூதர்களுக்குத்தான் அதாவது மற்ற நாடுகளில் வளர்க்கப்பட்டு, அந்நிய மொழிகளைப் பேசின இவர்களுக்காக (வசனம் 6-11), அந்நியப்பாஷையில் பேசும் அடையாளம் முதலில் கொடுக்கப்பட்டது. தேவனுடைய அற்புதமான கிரியைகளைப் பற்றி அவர்கள் தங்கள் தாய் பாஷையில் கேட்கிறார்கள் என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர், மேலும் பேதுரு அவர்கள் அவர்களுடைய பாவங்களில் இருந்து மனந்திரும்புவதே சரியான தீர்வு என்று கூறினார் (வசனம் 38). சமாரியர்களிடையே நற்செய்தி முதன்முதலில் வழங்கப்பட்டபோது, பிலிப்பு அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்தார் (அப்போஸ்தலர் 8:13).

மீண்டும், பேதுரு ஒரு புறஜாதியாரான கொர்நேலியுவினிடத்திற்கு அனுப்பப்பட்டபோது, தேவன் தனது கிரியையை உறுதிப்படுத்த ஒரு அற்புத அடையாளத்தைக் கொடுத்தார். மேலும், “அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும் தேவனைப் புகழுகிறதையும், பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள்மேலும் பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள்” (அப். 10:45-46) மற்ற அப்போஸ்தலர்களால் பேதுருவிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர் தேவன் வழிநடத்தியதற்கான சான்றாக இதைக் கொடுத்தார், இவைகளை அவர்கள் கேட்டபொழுது அமர்ந்திருந்து: அப்படியானால் ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதலை தேவன் புறஜாதியாருக்கும் அருளிச்செய்தார் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்’ (அப். 11:18).

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அடையாள வரங்கள் தேவனுடைய செய்தி மற்றும் அதை அறிவிக்கும் தூதுவரை உறுதிப்படுத்தல் ஆகும், இதனால் மக்கள் கேட்கவும் நம்பவும் முடியும். செய்தி உறுதிப்படுத்தப்பட்டவுடன், அடையாளங்கள் இல்லாமல் மறைந்துவிட்டன. அந்த அடையாளங்கள் நம் வாழ்வில் திரும்பத் திரும்பத் தேவைப்படுவதில்லை, ஆனால் நாம் அதே சுவிசேஷத்தின் செய்தியைப் பெற வேண்டும்.

English



முகப்பு பக்கம்

வேதாகம அடையாள வரங்களின் நோக்கம் என்னவாக இருந்தது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries