கேள்வி
திருமணமாகாத தம்பதிகள் பாலியல் உடலுறவு கொண்டால், அவர்கள் தேவனுடைய பார்வையில் திருமணமானவர்களா?
பதில்
பாலியல் உடலுறவு என்பது ஒரு ஜோடி "ஒரே மாம்சமாக" மாறுவதன் இறுதியான நிறைவேறுதல் என்பது உண்மைதான் (ஆதியாகமம் 2:24). இருப்பினும், பாலியல் செயல் திருமணத்திற்கு சமமாகாது. அப்படியானால், திருமணத்திற்கு முந்தைய உடலுறவு என்று எதுவும் இருக்காது—ஒரு ஜோடி உடலுறவு கொண்டால், அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள். திருமணத்திற்கு முந்தைய பாலுறவை வேதாகமம் “வேசித்தனம்” என்று அழைக்கிறது. இது மற்ற எல்லா வகையான பாலியல் ஒழுக்கக்கேடுகளுடன் சேர்ந்து வேதத்தில் மீண்டும் மீண்டும் கண்டிக்கப்படுகிறது (அப்போஸ்தலர் 15:20; 1 கொரிந்தியர் 5:1; 6:13,18; 10:8; கலாத்தியர் 5:19; எபேசியர் 5:3; கொலோசெயர் 3:5; 1 தெசலோனிக்கேயர் 4:3; யூதா 7). திருமணத்திற்கு முன்பு விலக்காயிருத்தலை தெய்வபக்தியின் தரமாக வேதாகமம் ஊக்குவிக்கிறது. திருமணத்திற்கு முன் உடலுறவு என்பது விபச்சாரம் மற்றும் பிற வகையான பாலியல் ஒழுக்கக்கேடுகளைப் போலவே தவறானது.
திருமணமாகாத தம்பதிகள் உடலுறவு கொண்டால், அவர்கள் திருமணமானவர்கள் என்று அர்த்தமா? இதை நம்புவதற்கு வேதாகமம் எந்த காரணத்தையும் கொடுக்கவில்லை. பாலியல் உறவுகளின் செயல் அவர்களை ஒரு கணம் உடல் ரீதியாக இணைத்திருக்கலாம், ஆனால் தேவன் அவர்களை கணவன் மற்றும் மனைவியாக இணைத்துள்ளார் என்று அர்த்தமல்ல. பாலுறவு என்பது திருமணத்தின் ஒரு முக்கிய அம்சம், திருமணத்தின் உடல் ரீதியான செயல்பாடு. திருமணமாகாதவர்களுக்கிடையிலான பாலுறவு, திருமணத்திற்கு சமமானதாக இல்லை.
English
திருமணமாகாத தம்பதிகள் பாலியல் உடலுறவு கொண்டால், அவர்கள் தேவனுடைய பார்வையில் திருமணமானவர்களா?