ஏழு கொடிய பாவங்கள் எவைகள்?


கேள்வி: ஏழு கொடிய பாவங்கள் எவைகள்?

பதில்:
விழுந்துபோன மனிதனுக்கு பாவம் செய்யும் இயல்பு உண்டு, அதனால் பாவத்தில் விழாமல் இருக்க எச்சரிக்கவும் அறிவுனர்தவும் ஏழு கொடிய பாவங்கள் என்ற பட்டியலை ஆதி கிறிஸ்தவ போதனைகளில் உபயோகப்படுத்தப்பட்டது. இந்த ஏழு “கொடிய” பாவங்களை தேவன் மன்னிக்கமாட்டார் என்பது இதை குறித்த தவறான கருத்தாகும். தொடர்ந்து தேவனை விசுவாசியாமல் இருக்கும் பாவத்தை மட்டும் தான் மன்னிக்க முடியாத பாவம் என்று வேதம் தெளிவாக சொல்லுகிறது.ஏனென்றால், நாம் மன்னிப்பு பெரும் ஒரே வழியான இயேசு கிறிஸ்துவையும் அவர் நமக்காக சிலுவையில் மரித்ததையும் புறக்கனிக்கிறது தான் அவிசுவாசம்.

ஏழு கொடிய பாவங்கள் என்ற கருத்து வேதத்திற்க்கு உட்பட்டதா? ஆம் மற்றும் இல்லை. நீதிமொழிகள் 6:16-19 சொல்லுகிறது, “ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள்.அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கைதுராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங் கால், அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே.” ஆனால், அநேகர் என்னுகின்ற ஏழு கொடிய பாவங்கள் இதல்ல.

ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த போப் கிரெகரின் படி, ஏழு கொடிய பாவங்கள் இவைகளே: பெருமை, பொறாமை, பெரும் தீனி, இச்சை, கோபம், பேராசை, மற்றும் சோம்பல். இவைகள் பாவங்கள் தான் என்பதில் சந்தேகம் இல்லை, ஆனால் இவைகள் வேதத்தில் உள்ள ஏழு கொடிய பாவங்களை விவரிக்கும் ஒரு பட்டியல் அல்ல. காணப்படும் எல்லா பாவங்களையும் வகைப்படுத்தும் ஒரு நல்ல வழியாக இந்த பாரம்பரியமாய் வந்த பாட்டியல் இருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா வகையான பாவங்களும் இந்த பட்டியலில் அடங்கியிருக்கிறது. ஆனால், நாம் அறிய வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த ஏழு பாவங்களும் மற்ற பாவங்களை விட “கொடிதானவை” அல்ல. எல்லா பாவமும் மரணத்தை விளைவிக்கும் (ரோமர் 6:23). கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக, இயேசு கிறிஸ்துவின் மூலமாக, நம் எல்லா பாவங்களும், “இந்த ஏழு கொடிய பாவங்களும் கூட,” மன்னிக்கப்பட முடியும் (மத்தேயு 26:28; அப்போஸ்தல் 10:43; எபேசியர் 1:7).

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
ஏழு கொடிய பாவங்கள் எவைகள்?