இயேசு இரண்டாம் வருகை இயேசு கிறிஸ்து என்றால் என்ன?


கேள்வி: இயேசு இரண்டாம் வருகை இயேசு கிறிஸ்து என்றால் என்ன?

பதில்:
சகலமும் தேவனுடைய ஆளுகையின்கீழ் உள்ளது மற்றும் அவரளித்த வாக்குத்தத்தங்கள் மற்று தீர்க்கத்தரிசனங்களை நிறைவேற்ற அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார் என்பதற்கான விசுவாசிகளின் நம்பிக்கையே இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையாகும். கிறிஸ்துவின் முதலாம் வருகை, எளிமையின் ரூபமாக, குழந்தையின் வடிவில், வாக்குதத்தம் நிறைவேற பெத்லகேமில் மானுடனாக வந்தார். தீர்க்கதரிசன வார்த்தைகளின்படி இயேசு அவருடைய பிறப்பு, வாழ்க்கை, ஊழியம், இறப்பு மற்றும் உயிர்த்தெழுதல் மூலமாக நிறைவேற்றி முடித்தார். மேசியாவைக் குறித்த இன்னும் சில தீர்க்கதரிசனங்கள் இன்னும் நிறைவேற வேண்டியதாயிருக்கிறது. மேசியாவாக வந்த இயேசு விட்டுப்போன சில தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றி முடிக்க அல்லது பரிபூரணமாக்க அவரது இரண்டாம் வருகை அமையப்போகிறது. இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகை ஒரு வேதனையை அனுபவிக்கிற ஊழியக்காரனாக / வேலைக்காரனாக இருந்தது. ஆனால் அவரது இரண்டாம் வருகையில் பரலோக சேனைகளுடன் ராஜாதி ராஜாவாக வரப்போகிறார்.

பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் இவ்விரு வருகையைப்பற்றியுள்ள வேறுபாட்டினை தெளிவாக குறிப்பிடவில்லை. அது ஏசாயா 7:14; 9:6-7 மற்றும் சகரியா 14:4 ஆகிய வேதபாகங்களில் கண்டுகொள்ளலாம். அதினிமித்தமாக யூத ஆய்வாளர்கள் இருவேறு நபராக கருதுகிறார்கள். மேசியா என்பது ஒருவரே. இரண்டு பகுதிகளாக பரிபூரணமாக்குபவர் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. இயேசு கிறிஸ்து தன் முதலாம் வருகையின்போது தாழ்மையின் ருபமாக அடிமையின் கோலமெடுத்து (ஏசாயா 53), தனது நோக்கத்தினை நிறைவேற்றினார். இஸ்ரவேலின் மீட்பராக, ராஜாதி ராஜாவாக, தனது மகிமையை வெளிப்படுத்ததக்கதாக அவரது இரண்டாம் வருகை வரப்போகிறது. சகரியா 12:10 மற்றும் வெளி:1:7-ல் சொல்லப்பட்டுள்ளபடி அவரின் முதலாம் வருகையின்போது அவரை மேசியாவாக ஏற்றுக்கொள்ளாதவர்கள், அதாவது இஸ்ரவேலரும் உலகத்தார் அனைவரும் மனந்திரும்பி கர்த்ரை நோக்கித் திரும்பாவிட்டால் துக்கித்து புலம்புவார்கள்.

இயேசுவானவர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தூதர்கள் அப்போஸ்தலரை பார்த்து, “கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்” (அப். 1:11). சகரியா 14:4-ல் அவரின் இரண்டாவது வருகை ஒலிவ மலைமேல் நிகழப்போவதாக கூறுகிறது. மத்தேயு 24:30-ல் இரண்டாம் வருகை இப்படியாக முன்னுரைக்கப்பட்டுள்ளது, “அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்” என்பதாகவும், தீத்து 2:13-ல் “மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய “மகிமையின் பிரசன்னமாகுதலை” எதிர்பாத்திருக்க வேண்டும் என்பதாக கூறப்பட்டுள்ளது.

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையினைப் பற்றி வெளிப்படுத்தின விசேஷம் 19:11-16ல் விரிவாகக் கூறப்பட்டுள்ளது, “பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார். அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப்போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது. இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே. பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்தவர்களாய், வெள்ளைக்குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின்சென்றார்கள். புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார். ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.

English
முகப்பு பக்கம்
இயேசு இரண்டாம் வருகை இயேசு கிறிஸ்து என்றால் என்ன?