settings icon
share icon
கேள்வி

சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு இரட்சிப்புக்கு இரண்டாவது வாய்ப்பு இருக்குமா?

பதில்


சில வேதாகம விளக்கவுரையாளர்கள் சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு இரட்சிப்புக்கு முற்றிலும் வாய்ப்பில்லை என்று நம்புகிறார்கள். இருப்பினும், வேதாகமத்தில் இதைச் சொல்லும் அல்லது அதைக் குறிப்பிடுவதற்கும் இடம் இல்லை. உபத்திரவத்தின் போது இரட்சிக்கப்படுவதற்காக கிறிஸ்துவிடம் வரும் பலர் இருப்பார்கள். 144,000 யூத சாட்சிகள் (வெளிப்படுத்துதல் 7:4) யூத விசுவாசிகள் ஆகும். உபத்திரவத்தின் போது யாரும் கிறிஸ்துவிடம் வர முடியாவிட்டால், ஜனங்கள் ஏன் தங்கள் விசுவாசத்திற்காக தலை துண்டிக்கப்பட வேண்டும் அல்லது இரத்த சாட்சிகளாக மரிக்க வேண்டும் (வெளிப்படுத்துதல் 20:4)? வேதவசனத்தின் எந்தப் பகுதியும் சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு இரட்சிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ள மக்களுக்கு எதிராக வாதிடுவதில்லை. பல வேதப்பகுதிகள் எதிர்மாறாகக் குறிப்பிடுகின்றன.

மற்றொரு கருத்து என்னவென்றால், நற்செய்தியைக் கேட்பவர்கள் மற்றும் சபை எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பாக அதை நிராகரிப்பவர்கள் இரட்சிக்கப்பட முடியாது என்பதாகும். உபத்திரவத்தின் போது இரட்சிக்கப்பட்டவர்கள், சபை எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பு சுவிசேஷத்தைக் கேட்காதவர்கள் ஆகும். இந்த பார்வைக்கு "ஆதார வசனம்" 2 தெசலோனிக்கேயர் 2:9-11, இது "கெட்டுப்போகிறவர்களை" ஏமாற்ற அந்திக்கிறிஸ்து சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும் அநேகக் காரியங்களைச் செய்வான், மேலும் அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் “கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்". கொடுக்கப்பட்ட காரணம் என்னவெனில், அவர்கள் "சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிறபடியினால் ஆக்கினைக்குள்ளானார்கள்" (வசனம் 10). ஒப்புக்கொள்ளப்படுகிற காரியம் என்னவெனில், சபை எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பு சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளாமல் கடின இருதயமுள்ளவர்கள் அப்படியே இரட்சிக்கப்படாமல் இருக்க வாய்ப்புள்ளது. அந்திக்கிறிஸ்து பலரை ஏமாற்றுவான் (மத்தேயு 24:5). ஆனால் "சத்தியத்தை நேசிக்க மறுத்தவர்கள்" என்பது சபை எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பு நற்செய்தியைக் கேட்டவர்களைக் குறிக்கவில்லை. எந்த காலத்திலும் தேவனுடைய இரட்சிப்பை முழுவதுமாக நிராகரிப்பவர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். எனவே, இந்த கருத்தை ஆதரிக்க தெளிவான வேதச் சான்றுகள் இல்லை.

வெளிப்படுத்தல் 6:9-11 இல் உபத்திரவத்தின் போது இரத்தசாட்சிகளாக மரித்தவர்களைப் பற்றி பேசுகிறது "தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும்" கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைக் குறித்து வாசிக்கிறோம். இந்த இரத்தசாட்சிகள் உபத்திரவ காலத்தின் போது தாங்கள் பார்ப்பதை சரியாக விளக்குவார்கள் மற்றும் நற்செய்தியை நம்புவார்கள் மற்றும் மற்றவர்களை மனந்திரும்பவும் விசுவாசம் வைக்கவும் அழைப்பார்கள். அந்திக்கிறிஸ்து மற்றும் அவரைப் பின்பற்றுபவர்கள் தங்கள் சுவிசேஷத்தை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள், அவர்களைக் கொன்றுவிடுவார்கள். இந்த இரத்தசாட்சிகள் அனைவரும் சபை எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பு உயிருடன் இருந்தவர்கள், அவர்கள் அதற்குப் பிறகும் சிறிது காலம் (விசுவாசிக்கும் வரை) விசுவாசிகளாக இல்லை. எனவே, சபை எடுத்துக்கொள்ளப்படுவதற்குப் பிறகு விசுவாசத்தில் கிறிஸ்துவிடம் வர வாய்ப்பு இருக்க வேண்டும்.

English



முகப்பு பக்கம்

சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு இரட்சிப்புக்கு இரண்டாவது வாய்ப்பு இருக்குமா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries