கேள்வி: எனக்கு சரியான மார்க்கம் எது?


கேள்வி: கேள்வி: எனக்கு சரியான மார்க்கம் எது?

பதில்:
துரித உணவு விடுதிகள் நாம் விரும்புகிறபடியே நமது உணவை வாங்க அனுமதிப்பதினால் நம்மைக் கவர்ந்திழுக்கின்றன. சில காபி கடைகள் தங்களிடம் நூற்றுக்கும் அதிகமான விதங்களில் மற்றும் (மணங்களில்) வாசனைகளில் காபி தருகிறோம் என்று சொல்லி பெருமைபட்டு கொள்கின்றனர். அப்படியே வீடுகளையும், கார்களையும் வாங்கும் போதும் நாம் விரும்புகிறபடி நாம் நமக்கு ஏற்ற விதத்தில் கிடைக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்தே வாங்குகிறோம். உங்கள் சொந்த தேவைகள் மற்றும் விருப்பத்திற்குத்தக்கதாக நீங்கள் விரும்பும் எதையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

அதுபோல உங்களுக்கு சரியானதாக இருக்கும் ஒரு மார்க்கத்தைக் குறித்து என்ன? குற்றங்கள் இல்லாத, நம்மிடத்தில் எதையும் எதிர்பார்க்காத மற்றூம் அதைச் செய் இதைச் செய் என்று கூறி நம்மை அதிகம் தொந்தரவிபடுத்தாத மார்க்கத்தை எப்படி கண்டுபிடிப்பது? நான் குறிப்பிட்டபடி பல மதங்கள் உள்ளன. ஆனால் மதமானது ஐஸ்கிரீமில் நமக்கு மிகவும் பிடித்த ஒன்றை வாங்குவது போன்ற ஒரு காரியமா?

எத்தனையோ குரல்கள் நமது கவனத்தை ஈர்க்கின்றன. சே, முகமது அல்லது கன்பூசியஸ், புத்தர், சார்லஸ் டேஸ் ரசல் அல்லது ஜோசப் சுமித் என்பவர்களுக்கு மேலாக இயேசுவை ஏன் ஒருவர் கருதக் வேண்டும்? மொத்தத்தில், எல்லாசாலைகளும் பரலோகத்திற்குத்தானே வழிகாட்டுகின்றன? அடிப்படையில், எல்லா மதங்களும் ஒன்றுதானே? உண்மை என்னவெனில், எப்படி எல்லா சாலைகளும் இந்தியாவிற்கு நேராக செல்வதில்லையோ, அதுபோல எல்லா மதங்களும் பரலோகத்திற்கு வழிகாட்டுவது இல்லை.

இயேசுகிறிஸ்து மாத்திரமே மரணத்தை ஜெயித்தவராகையால், இயேசு மாத்திரமே தேவன் கொடுத்த அதிகாரத்தோடு பேசுகிறார் முகமது, கன்பூசியஸ், மற்றவர்கள் இந்த நாள்வரை கல்லறையிலேயே இருக்கிறார்கள். ஆனால் இயேசுவோ, ரோமர்களின் கொடூரமான சிலுவையில் மரித்து, மூன்று நாட்களுக்கு பின்பு, தமது சொந்த வல்லமையினாலே உயிர்த்து கல்லறையை விட்டு வெளியே வந்தார். மரணத்திற்கு மேல் வல்லமை உடையவர்கள் எவரும் நம் கவனத்திற்குரியவர்கள். மரணத்தின் மீது வல்லமை உடையவர்கள் எவரும் சொல்பவை கேட்கப்படத்தக்கவை.

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை ஆதரிக்கும் சான்றுகள் மிகவும் அதிகமானவையாக இருக்கின்றன. முதலாவதாக, உயிர்த்தெழுந்த இயேசுவைக் கண்கூடாகக் கண்ட 500 பேருக்கும் அதிகமான சாட்சிகள் இருந்தனர். அதாவது ஏராளமான நேரடி சாட்சிகள் இருந்தன. 500பேரின் குரல்களை நாம் ஒதுக்கிதள்ள முடியாது. காலியான கல்லறையும் ஒரு சாட்சியாக இருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் மரித்து போன சிதைந்த நிலையில் உள்ள சடலத்தைக் காண்பித்து உயிர்த்தெழுதலைக்குறித்த அனைத்து பேச்சுக்களையும் இயேசுவின் எதிரிகள் எளிதில் நிறுத்தியிருக்கலாம், ஆனால் அவ்வாறு காண்பிக்க அவர்களிடம் அவரின் சடலம் இல்லை. கல்லறை காலியாக இருந்தது. சீடர்கள் அவருடைய சரீரத்தை களவாடி இருக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. அபடிப்பட்ட ஒரு நிலையை தவிர்க்கும்படி முனெச்சரிக்கையாக, இயேசுகிறிஸ்துவின் கல்லறை மூன்று நாட்களும் இராணுவவீரர்களால் பாதுகாக்கப்பட்டு இருந்தது. அவரது நெருங்கிய சகாக்கள் இயேசு கிறிஸ்து கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டவுடன் பயத்தில் ஓடி ஒளிந்து கொண்டதைக் கருத்தில் கொள்ளும்போது, அந்த பய பீதியில் இருந்த அந்த மீனவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட இராணுவ வீரர்களோடு நேருக்குநேர் மோதி சடலத்தை திருடிச் செல்வது என்பது, இயலாத காரியம். அவர்களில் அனேகர் இரத்த சாட்சிகளாக மரித்தனர். ஒரு பொய்க்காக அவர்கள் தங்கள் வாழ்க்கையை ஒப்புக் கொடுத்திருக்க மாட்டார்கள். எளிய உண்மை என்னவெனில், இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை எவரும் மறுக்க முடியாது.

மரணத்திற்கு மேல் வல்லமை உடையவர்கள் எவரும் நாம் சொல்பவை நாம் கேட்கப்படதக்கவை. இயேசுகிறிஸ்து மரணத்தின் மேல் உள்ள தனது அதிகாரத்தை நிரூபித்து உள்ளார். ஆகவே அவர் சொல்வதை நாம் கேட்க வேண்டும். இரட்சிக்கப்படுவதற்கான ஒரே வழி நானே என்று இயேசு உரிமைப் பாராட்டினார் (யோவான்14:6). பல வழிகளில் அவர் ஒரு வழியல்ல, ஆனால் இயேசு கிறிஸ்துவே வழி.

மேலும் இந்த இயேசு சொல்லுகிறதாவது, “வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்தேயு 11:28). நாம் வாழுகிற உலகம் கடினமான போராட்டம் நிறைந்த உலகம். அநேகர் காயப்பட்டு, நொறுக்கப்பட்டு, புண்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறோம். அப்படித்தானே? இப்போது நமக்கு என்ன தேவை? மீட்பா அல்லது சாதாரண மதமா? உயிருள்ள இரட்சகரா அல்லது செத்துப்போன "தீர்க்கதரிசிகளில்" ஒருவரா? அர்த்தமுள்ள ஒரு உறவா? அல்லது வெறுமையான சடங்காச்சாரங்களா? இயேசுவைத் தவிர தெரிந்து கொள்ளப்படத்தக்கவர் வேறு யாரும் இல்லை.

நீங்கள் மன்னிப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறீர்கள் எனில், இயேசுவே அந்த சரியான "மதம்" (அப்போஸ்தலர் 10;:43). நீங்கள் தேவனோடு அர்த்தமுள்ள ஒரு நல்ல உறவு ஏற்படுத்திக்கொள்ள விரும்பினால்,இயேசுவே அந்த சரியான "மதம்"(யோவான் 10:10). பரலோகத்தில் ஒரு நித்திய வீடு உங்களுக்கு வேண்டும் என்று விரும்புகிறீர்களா? இயேசுவே அந்த சரியான "மதம்" (யோவான் 3:16). உங்கள் இரட்சகராக இயேசுகிறிஸ்துவில் உங்கள் விசுவாசத்தை வையுங்கள், நீங்கள் வருத்தப்படவேண்டிய மாட்டீர்கள். உங்கள் பாவங்களின் மன்னிப்புக்காக அவரில் நம்பிகை வையுங்கள். நீங்கள் ஏமாற்றப்பட மாட்டீர்கள்.

நீங்கள் தேவனுடன் ஒரு "சரியான உறவு" வைத்துக் கொள்ள விரும்பினால், உங்களுக்காக ஒரு மாதிரி ஜெபம் இங்கு தரப்பட்டிருக்கிறது. இந்த ஜெபத்தையோ அல்லது வேறு ஏதேனும் ஜெபத்தையோ சொல்வது உங்களை இரட்சிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கை மாத்திரமே, பாவத்திலிருந்து உங்களை இரட்சிக்க முடியும். இந்த ஜெபமானது அவரில் உள்ள உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி, உங்கள் இரட்சிப்புக்காக அவர் அருளினவற்றிற்காக அவருக்கு நன்றி சொல்வதற்கான ஒரு வழி மாத்திரமே. "தேவனே நான் உமக்கு விரோதமாய் பாவம் செய்திருக்கிறேன் என்பதையும், தண்டனைக்குரியவன் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் மூலமாக நான் மன்னிக்கப்படும்படிக்கு எனக்குரிய தண்டனையை அவர் சுமந்தார். இரட்சிப்புக்காக நான் எனது நம்பிக்கையை உம்மில் வைக்கிறேன். நித்திய வாழ்வின் பரிசாகிய உம்முடைய அதிசயமான கிருபைக்கும், மன்னிப்புக்கும் உமக்கு நன்றி! ஆமென்!"

நீங்கள் இங்கு உள்ளவற்றை வாசித்ததினால் கிறிஸ்துவுக்காக வாழும்படி ஒரு தீர்மானம் எடுத்து இருக்கிறீர்களா? அப்படி எடுத்து இருந்தால், தயவு செய்து கீழே உள்ள “நான் இன்று இயேசுவை ஏற்றுக்கொண்டேன்” என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
கேள்வி: எனக்கு சரியான மார்க்கம் எது?