ஓய்வு பெறுவதைக் குறித்ததான கிறிஸ்தவ பார்வை என்ன?


கேள்வி: ஓய்வு பெறுவதைக் குறித்ததான கிறிஸ்தவ பார்வை என்ன?

பதில்:
கிறிஸ்தவர்கள் ஓய்வுபெரும் வயதை நெருங்குகையில், ஓய்வுபெற்ற பிறகுள்ள ஆண்டுகளில் ஒரு கிறிஸ்தவர் என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து அவர்கள் அடிக்கடி ஆச்சரியப்படுகிறார்கள். கிறிஸ்தவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும்போது கிறிஸ்தவ சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்களா? ஒரு கிறிஸ்தவர் ஓய்வு பெறுவதை எவ்வாறு பார்க்க வேண்டும்?

1) ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டும் போது தனது வேலையிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்று வேதாகமக் கொள்கை எதுவும் இல்லை என்றாலும், லேவியர்கள் ஆசரிப்புக்கூடாரத்தில் செய்த வேலையின் உதாரணம் நமக்கு இருக்கிறது. எண்ணாகமம் 4-ல், லேவியக் கோத்திரத்து ஆண்கள் 25-லிருந்து 50-வயது வரைக்கும் ஆசரிப்புக்கூடாரத்தில் சேவைக்காக அமர்த்தப்படுகிறார்கள், 50 வயதிற்குப் பிறகு, அவர்கள் வழக்கமான சேவையிலிருந்து ஓய்வு பெற வேண்டும். அவர்கள் தொடர்ந்து "தங்கள் சகோதரர்களுக்கு உதவ" முடியும், ஆனால் தொடர்ந்து வேலை செய்ய முடியாது (எண். 8:24-26).

2) நம்முடைய தொழில்களில் இருந்து (“முழுநேர” கிறிஸ்தவ ஊழியத்திலிருந்தும்) நாம் ஓய்வு பெற்றாலும், நாம் ஒருபோதும் கர்த்தருக்கு சேவை செய்வதிலிருந்து ஓய்வு பெறக்கூடாது, இருப்பினும் நாம் அவருக்கு சேவை செய்யும் முறை மாறக்கூடும். லூக்கா 2:25-38லுள்ள (சிமியோன் மற்றும் அன்னாள்) இரண்டு வயதானவர்களின் உதாரணம் கர்த்தருக்கு உண்மையாக சேவை செய்தது விளங்குகிறது. அன்னாள் ஒரு வயதான விதவை, அவள் தேவாலயத்தில் தினமும் உபவாசம் இருந்து மற்றும் ஜெபத்துடன் ஊழியம் செய்தார். தீத்து 2 கூறுகிறது, வயதான ஆண்களும் பெண்களும் கற்பிக்க வேண்டும், எடுத்துக்காட்டாக, வாலிப ஆண்களும் பெண்களும் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை கற்பிக்க வேண்டும்.

3) ஒருவரின் பழைய ஆண்டுகள் இன்பத்தைத் தேடுவதில் மட்டுமே செலவிடக்கூடாது. சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள் என்று பவுல் கூறுகிறார் (1 தீமோத்தேயு 5:6). வேதாகம அறிவுறுத்தலுக்கு மாறாக, பலர் ஓய்வு பெறுவதை “இன்பத்தைத் தேடுவது” என்று கூடுமானவரை அதை சமன் செய்கிறார்கள். ஓய்வு பெற்றவர்கள் கோல்ஃப், சமூக செயல்பாடுகள் அல்லது இன்பமான முயற்சிகளை அனுபவிக்க முடியாது என்று இது கூறவில்லை. ஆனால் இவை எந்த வயதிலும் ஒருவரின் வாழ்க்கையின் முதன்மை மையமாக இருக்கக்கூடாது.

4) 2 கொரிந்தியர் 12:14 கூறுகிறது, பிள்ளைகளுக்குப் பெற்றார்களே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டும். ஆனால் "சேமிக்க" வேண்டிய மிகப் பெரிய விஷயம் ஒருவரின் ஆவிக்குரிய பாரம்பரியமாகும், இது குழந்தைகள், பேரக்குழந்தைகள் மற்றும் அவர்களுடைய பேரக்குழந்தைகளுக்கு வழங்கப்படலாம். ஒரு வயதான குடும்பத்தின் “பிதாவானவர்” அல்லது “குடும்பத்தலைவர்” ஆகியோரின் உண்மையுள்ள ஜெபங்களால் சந்ததியினரின் தலைமுறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஓய்வு பெற்றவர்களுக்கு ஜெபம் என்பது மிகவும் பயனுள்ள ஊழியக் கடையாகும்.

கிறிஸ்தவர் ஒருபோதும் கிறிஸ்துவின் சேவையிலிருந்து ஓய்வு பெறுவதில்லை; அவர் தனது பணியிடத்தின் முகவரியை மட்டுமே மாற்றுகிறார். சுருக்கமாக, ஒருவர் “ஓய்வூதிய வயதை” எட்டும்போது (அது எதுவாக இருந்தாலும்) தொழில் மாறக்கூடும், ஆனால் தேவனுக்கு சேவை செய்யும் ஒருவரின் வாழ்க்கையின் வேலை ஒருபோதும் மாறாது. பெரும்பாலும் இந்த "மூத்த பரிசுத்தவான்கள்" தாங்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தேவனுடன் நடந்துகொண்ட பிறகு, தேவன் தங்கள் வாழ்க்கையில் எவ்வாறு செயல்பட்டார் என்பதைப் பற்றி தேவனுடைய வார்த்தையின் உண்மைகளை வெளிப்படுத்த முடிகிறது. சங்கீதக்காரரின் ஜெபம் வயதுக்கு ஏற்ப நம்முடைய ஜெபமாக இருக்க வேண்டும்: "இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக" (சங்கீதம் 71:18).

English


முகப்பு பக்கம்
ஓய்வு பெறுவதைக் குறித்ததான கிறிஸ்தவ பார்வை என்ன?