settings icon
share icon
கேள்வி

ஜனங்கள் ஏன் இயேசுவை தங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளாதபடிக்கு நிராகரிக்கிறார்கள்?

பதில்


இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது என்பது இறுதியான வாழ்க்கையின் முடிவாகும். இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிக்க பலர் ஏன் தேர்வு செய்கிறார்கள்? கிறிஸ்துவை நிராகரிப்பவர்கள் பலர் இருப்பதைப் போலவே, அவரை நிராகரிப்பதற்கு அவர்களுக்கு பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் பின்வரும் நான்கு காரணங்கள் பொதுவான வகைகளாக செயல்படக்கூடும்:

1) சிலர் தங்களுக்கு ஒரு இரட்சகர் தேவை என்று நினைக்கவில்லை. இந்த மக்கள் தங்களை "அடிப்படையில் நல்லவர்கள்" என்று கருதுகிறார்கள், மேலும் அவர்கள் எல்லா மக்களையும் போலவே, தங்கள் சொந்த விதிமுறைகளின்படி தேவனிடம் வரமுடியாத பாவிகள் என்பதை உணரவில்லை. ஆனால் இயேசு, “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6) என்று கூறுகிறார். கிறிஸ்துவை நிராகரிப்பவர்கள் தேவனுக்கு முன்பாக நிற்க முடியாது, தங்கள் சொந்த வழக்கின் அடிப்படையில் தங்கள் சொந்த வழக்கை வெற்றிகரமாக மன்றாடுகிறார்கள்.

2) சமூகத்தால் நிராகரிக்கப்படும் நிராகரிப்பு அல்லது உபத்திரவம் குறித்த பயம் சிலரை கிறிஸ்துவை இரட்சகராகப் ஏற்றுக்கொள்ளுவதிலிருந்து தடுக்கிறது. யோவான் 12:42-43-ல் உள்ள அவிசுவாசிகள் கிறிஸ்துவை ஒப்புக்கொள்ள மாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் தேவனுடைய சித்தத்தைச் செய்வதை விட சகாக்களிடையே இருக்கும் தங்கள் அந்தஸ்தைப் பற்றியே அதிகம் அக்கறை கொண்டிருந்தார்கள். இவர்களே பரிசேயர்களாக இருந்தார்கள், அவர்களுடைய நிலைப்பாடு மற்றும் பிறரின் மரியாதை அவர்களை கண்மூடித்தனமாகக் காட்டியது, ஏனென்றால் "அவர்கள் தேவனுடைய அங்கீகாரத்தைக் காட்டிலும் மனிதர்களின் அங்கீகாரத்தையே நேசித்தார்கள்."

3) சிலருக்கு, இந்த உலகம் வழங்கக்கூடிய தற்போதைய காரியங்கள் நித்தியமான காரியங்களை விட மிகவும் ஈர்க்கக்கூடியவைகளாக இருக்கின்றன. அத்தகைய மனிதனின் கதையை மத்தேயு 19:16-23-ல் வாசிக்கிறோம். இயேசுவோடு நித்திய ஐக்கியத்தைப் பெறுவதற்காக இந்த மனிதன் தனது பூமிக்குரிய உடைமைகளை இழக்கத் தயாராக இல்லை (2 கொரிந்தியர் 4:16-18 ஐயும் காண்க).

4) கிறிஸ்துவை விசுவாசிக்க பரிசுத்த ஆவியானவர் எடுக்கும் முயற்சிகளை பலர் எதிர்க்கிறார்கள். ஆரம்பகால திருச்சபையின் தலைவரான ஸ்தேவான், தன்னைக் கொலை செய்யப் போகிறவர்களிடம், “வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள்” (அப்போஸ்தலர் 7:51) என்று கூறினார். அப்போஸ்தலனாகிய பவுல் அப்போஸ்தலர் 28:23-27-ல் நற்செய்தியை நிராகரிப்பவர்களின் குழுவுக்கு இதேபோன்ற ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

ஜனங்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிப்பதற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும், அவர்கள் நிராகரிப்பது பேரழிவு தரும் நித்திய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. இயேசுவின் நாமம் அல்லாமல் (அப்போஸ்தலர் 4:12) “இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை” (அப்போஸ்தலர் 4:12), அவரை நிராகரிப்பவர்கள், எந்த காரணத்திற்காகவாக இருந்தாலும் தங்களது நித்தியத்தை “காரிருளில்” எதிர்கொள்கிறார்கள், நரகத்தில் "அழுகையும் பற்கடிப்பும்” உண்டாயிருக்கும் (மத்தேயு 25:30).

Englishமுகப்பு பக்கம்

ஜனங்கள் ஏன் இயேசுவை தங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளாதபடிக்கு நிராகரிக்கிறார்கள்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries