மறுசீரமைப்பு திறனாய்வு மற்றும் உயர் திறனாய்வு என்றால் என்ன?


கேள்வி: மறுசீரமைப்பு திறனாய்வு மற்றும் உயர் திறனாய்வு என்றால் என்ன?

பதில்:
மறுசீரமைப்பு திறனாய்வு மற்றும் உயர் திறனாய்வு என்பது வேதாகம திறனாய்வின் பல வடிவங்களில் சில. அவைகளின் நோக்கம் வேதவசனங்களை ஆராய்ந்து அவற்றின் எழுத்தாளர், வரலாற்றுத்தன்மை மற்றும் எழுதிய காலம் குறித்த தீர்ப்புகளை வழங்குவதாகும். இந்த முறைகளில் பெரும்பாலானவை வேதாகமத்தின் உரையை அழிக்க முயற்சிக்கின்றன.

வேதாகம திறனாய்வை இரண்டு முக்கிய வடிவங்களாக பிரிக்கலாம்: உயர் திறனாய்வு மற்றும் கீழ்த் திறனாய்வு. கீழ்த் திறனாய்வு என்பது நம்மிடம் அசல் எழுத்துப்பிரதிகள் இல்லாததால் உரையின் அசல் சொற்களைக் கண்டறியும் முயற்சியாகும். உயர் திறனாய்வு என்பது உரையின் உண்மையான தன்மையைக் கையாள்கிறது. கேட்கப்படுகின்ற கேள்விகள்: இந்த புத்தகம் மெய்யாகவே எப்போது எழுதப்பட்டது? இந்த புத்தகம் மெய்யாகவே எழுதியவர் யார்?

பல திறனாய்வாளர்கள் வேதவசனங்களின் உந்தப்படுதலை நம்பவில்லை, ஆகவே, நம்முடைய வேதவசனங்களின் எழுத்தாளர்களின் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியின் வேலையை அகற்ற இந்த கேள்விகளைப் பயன்படுத்துகிறார்கள். நம்முடைய பழைய ஏற்பாடு வெறுமனே வாய்வழி மரபுகளின் தொகுப்பாகும் என்று அவர்கள் நம்புகிறார்கள், கி.மு. 586-ல் இஸ்ரவேலர்கள் பாபிலோனுக்கு சிறைபிடிக்கப்பட்ட வரை உண்மையில் எழுதப்படவில்லை என்று கூறுகிறார்கள்.

மோசே நியாயப்பிரமாணத்தையும் பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்களையும் (பஞ்சாகமம் என்று அழைக்கப்படுகிறது) எழுதினார் என்பதை வேதத்தில் காணலாம். இந்த புத்தகங்கள் உண்மையில் மோசேயால் எழுதப்படவில்லை, இஸ்ரவேல் தேசம் நிறுவப்பட்ட பல வருடங்கள் வரை இந்த புத்தகங்கள் இல்லை, இந்த திறனாய்வாளர்கள் எழுதப்பட்டவற்றின் தவறான தன்மையைக் கூற முற்படுவதோடு, இதன் மூலம் தேவனுடைய வார்த்தையின் அதிகாரத்தை மறுக்கவும் செய்கிறார்கள். ஆனால் இது உண்மை இல்லை. (பஞ்சாகமத்தின் மோசேயின் படைப்புரிமைக்கான சான்றுகள் பற்றிய விவாதத்திற்கு, ஆவணக் கருதுகோள் மற்றும் JEDP கோட்பாடு பற்றிய எங்கள் கட்டுரைகளைப் பார்க்கவும்). மறுசீரமைப்பு திறனாய்வு, சுவிசேஷ புத்தகங்களின் எழுத்தாளர்கள் வாய்வழி மரபுகளின் இறுதி தொகுப்பாளர்களைத் தவிர வேறொன்றுமில்லை, உண்மையில் அவர்கள் சுவிசேஷ புத்தகங்களை எழுதிய நேரடி எழுத்தாளர்கள் அல்ல என்கிறது. மறுசீரமைப்பு திறனாய்வின் பார்வையை வைத்திருக்கும் ஒரு திறனாய்வாளர் கூறுகையில், ஆசிரியரின் தேர்வு மற்றும் மரபுகள் அல்லது பிற எழுதப்பட்ட பொருட்களை கிறிஸ்தவ மதத்திற்குள் தேர்ந்தெடுப்பதற்கும் பின்னால் தொகுக்கப்படுவதற்கும் பின்னால் உள்ள "இறையியல் உந்துதலை" கண்டுபிடிப்பதே அவர்களின் ஆய்வின் நோக்கம் என்கிறார்.

அடிப்படையில் இந்த எல்லா விதமான வேதாகம திறனாய்வுகளிலும் நாம் காண்கின்றது என்னவென்றால், தேவனுடைய வார்த்தையின் துல்லியமான, நம்பகமான எழுதப்பட்ட ஆவணத்தை உருவாக்கியதன் பின்னணியிலுள்ள பரிசுத்த ஆவியானவரின் வேலையை பிரிக்க சில திறனாய்வாளர்கள் செய்யும் முயற்சியாகும். தேவனுடைய வேதவாக்கியங்கள் எவ்வாறு வந்தன என்பதை வேதத்தின் எழுத்தாளர்களே விளக்கியுள்ளனர். "வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது" (2 தீமோத்தேயு 3:16). தேவன் பதிவு செய்ய விரும்பிய வார்த்தைகளை மனிதர்களுக்குக் கொடுத்தவர் தேவனாகும். அப்போஸ்தலனாகிய பேதுரு, "வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்" (2 பேதுரு 1:20, 21) என்று குறிப்பிடுகிறார். இங்கே பேதுரு இந்த வேத எழுத்துக்கள் மனிதனின் மனதில் கனவாகக் கூட காணப்படவில்லை என்றும்,அல்லது எதையாவது எழுத விரும்பும் மனிதர்களால் வெறுமனே எழுதி உருவாக்கப்பட்டது அல்ல என்பதாகும். பேதுரு தொடர்கிறார், "தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்" (2 பேதுரு 1:21). பரிசுத்த ஆவியானவர் அவர்கள் எழுத விரும்புவதை அவர்களிடம் சொன்னார். வேதவசனங்களின் நம்பகத்தன்மையை திறனாய்வு வேண்டிய அவசியமில்லை, தேவன் திரைக்குப் பின்னால் இருந்தார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

வேதவசனங்களின் துல்லியத்துடன் நிரூபணம் செய்கிறதோடு தொடர்புடைய மேலும் ஒரு வசனம் சுவாரஸ்யமானது. “என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்” (யோவான் 14:26). இங்கே இயேசு தம்முடைய சீஷர்களிடம் விரைவில் அவர் போய்விடுவார் என்று சொல்லிக் கொண்டிருந்தார், ஆனால் பரிசுத்த ஆவியானவர் பூமியில் அவர் இங்கு கற்பித்ததை நினைவிற்கு கொண்டுவர கொள்ள அவர்களுக்கு உதவுவார் என்று கூறினார், இதனால் அவர்கள் அதை பதிவு செய்ய முடியும். வேதவசனங்களின் எழுத்தாளர் மற்றும் பாதுகாப்பிற்குப் பின்னால் தேவன் இருந்தார்.

English


முகப்பு பக்கம்
மறுசீரமைப்பு திறனாய்வு மற்றும் உயர் திறனாய்வு என்றால் என்ன?