settings icon
share icon
கேள்வி

கிறிஸ்தவ ஒப்புரவாகுதல் என்றால் என்ன? நாம் ஏன் தேவனோடு ஒப்புரவாக வேண்டும்?

பதில்


சண்டையோ அல்லது வாக்குவாதமோ கொண்டிருக்கும் இரண்டு நண்பர்களை கற்பனை செய்து பாருங்கள். அவர்கள் அனுபவித்து வந்த நல்ல உறவு முறிவு ஏற்பட்டு இழந்துபோகிற நிலையில் உள்ளது. அவர்கள் ஒருவருக்கொருவர் பேசுவதை நிறுத்திவிடுகிறார்கள்; தொடர்பு மிகவும் மோசமாக கருதப்படுகிறது. நண்பர்கள் படிப்படியாக அந்நியர்கள் போல மாறிவிடுகிறார்கள். இத்தகைய பயிர்ப்பு ஒப்புரவாகுதல் மூலம் மட்டுமே மாற்றியமைக்க முடியும். ஒப்புரவாகுதல் என்பது நட்பு அல்லது நல்லிணக்கத்தை மீண்டுமாக மீட்டெடுத்தல் ஆகும். பழைய நண்பர்கள் தங்கள் வேறுபாடுகளைத் தீர்த்து, அவர்களது உறவை மீட்டெடுக்கையில், நல்லிணக்கம் ஏற்படுகிறது. 2 கொரிந்தியர் 5:18-19 இவ்வாறு கூறுகிறது: " இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார். அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார்."

கிறிஸ்து நம்மை தேவனிடத்தில் ஒப்புரவாக்கியதாக வேதாகமம் கூறுகிறது (ரோமர் 5:10; 2 கொரிந்தியர் 5:18; கொலோசெயர் 1:20-21). நமக்கு ஒப்புரவாகுதல் தேவையாக இருக்கிறது என்பதன் அர்த்தம் தேவனோடுள்ள நம் உறவு முறிந்து விட்டது என்பதாகும். தேவன் பரிசுத்தமானவர் என்பதால் நாம் தான் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இருக்கிறோம். நம் பாவம் தான் நம்மை அவரிடமிருந்து நம்மை பிரித்தது. நாம் தேவனுடைய விரோதிகள் என்று ரோமர் 5:10 கூறுகிறது: "நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே."

கிறிஸ்து சிலுவையில் மரித்தபோது, அவர் தேவனின் நியாயத்தீர்ப்பை திருப்தியாக்கி மற்றும் தேவனின் எதிரிகளாகிய நாம், அவரில் சமாதானம் கண்டுபிடிக்கும்படியாக மாற்றினார். தேவனோடுள்ள நமது ஒப்புரவாகுதல், அவருடைய கிருபையையும் நம்முடைய பாவத்தின் மன்னிப்பையும் உட்படுத்துகிறது. இயேசுவினுடைய பலியின் விளைவாக, நம் உறவு பகைமையிலிருந்து நட்பாக மாறிவிட்டது. "இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை...நான் உங்களைச் சிநேகிதர் என்றேன்" (யோவான் 15:15). கிறிஸ்தவ ஒப்புரவாக்குதல் ஒரு மகிமையான உண்மையாகும்! நாம் தேவனின் எதிரிகளாக இருந்தோம் ஆனால் இப்போது அவருடைய நண்பர்களாக இருக்கிறோம். நாம் நமது பாவங்கள் நிமித்தம் தேவனுடைய கோபத்திற்கு ஆளாகியிருந்தோம், ஆனால் இப்பொழுதோ மன்னிக்கப்பட்டு இருக்கிறோம். நாம் தேவனோடு போரிட்டிருந்தோம், ஆனால் இப்பொழுதோ எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் நம்முடைய இருதயங்களையும் நம்முடைய சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளுகிறது (பிலிப்பியர் 4:7).

English



முகப்பு பக்கம்

கிறிஸ்தவ ஒப்புரவாகுதல் என்றால் என்ன? நாம் ஏன் தேவனோடு ஒப்புரவாக வேண்டும்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries