settings icon
share icon
கேள்வி

சபை எடுத்துக்கொள்ளப்படுதல் என்றால் என்ன?

பதில்


“எடுத்துக்கொள்ளப்படுதல்” என்னும் அர்த்தம் வருகிற “ராப்ச்சர்” என்கிற வார்த்தை வேதாகமத்தில் இல்லை. அது இலத்தீன் வார்த்தையிலிருந்து வருகின்றது. அதனுடைய அர்த்தம் “தூக்கிச்செல்லுதல்”, “போக்குவரத்து” அல்லது “பிடுங்கிச் செல்வது” என்பதாகும். “எடுத்துக்கொள்ளப்படுதல்” என்கிற இந்தக் கருத்து வேதவாக்கியங்களில் தெளிவாக போதிக்கப்பட்டுள்ளது.

சபை எடுத்துக்கொள்ளப்படுதல் என்கிற சம்பவத்தில் தேவன் பூமியிலிருக்கும் எல்லா விசுவாசிகளையும் எடுத்துக்கொண்டு அவருடைய நீதியான நியாயத்தீர்ப்பு உபத்திரவக் காலத்தின் போது பூமியின் மேல் ஊற்றப்பட வழிவகுக்கிறார். எடுத்துக் கொள்ளப்படுதல் என்பதை 1 தெசலோனிக்கேயர் 4:13-18 மற்றும் 1 கொரிந்தியர் 15:50-54 ஆகிய வசனங்கள் தெளிவாக விளக்குகின்றன. தேவன் மரித்த எல்லா விசுவாசிகளையும் உயிர்பித்து, அவர்களுக்கு மகிமையான சரீரத்தைக் கொடுத்து பூமியிலிருந்து எடுத்துக்கொள்வார். எல்லா உயிரோடிருக்கும் விசுவாசிகளுக்கும் மகிமையின் சரீரம் கொடுக்கப்பட்டு மற்ற எல்லா விசுவாசிகளோடுச் சேர்ந்து எடுத்துக் கொள்ளப்படுவார்கள். “ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார், அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல் அவர்களோடகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்போம்” (1 தெசலோனிக்கேயர் 4:16, 17).

எடுத்துக்கொள்ளப்படுதலில் நம்முடைய சரீரங்கள் ஒரு சடுதியான மறுரூபமாக்கப்படல் நிகழ்வு மூலமாக நித்தியத்திற்கு ஏற்றதாக மாறும். “அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரை தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்” (1 யோவான் 3:2). எடுத்துக்கொள்ளப்படுதல் (இரகசிய வருகை) இரண்டாம் வருகையிலிருந்து வேறுபட்டது ஆகும். எடுத்துக்கொள்ளப்படுதலில் (இரகசிய வருகையின்போது) கர்த்தர் “மேகங்களில்” வந்து நம்மை “ஆகாயத்தில்” நம்மை சந்திப்பார் (1 தெசலோனிக்கேயர் 4:17). இரண்டாம் வருகையின் போது கர்த்தர் பூமிக்கு இறங்கி ஒலிவ மலையின் மேல் நிற்பார், ஒரு பெரிய பூமியதிர்ச்சி உண்டாகும், தேவனுடைய எதிரிகள் முறியடிக்கப்படுவார்கள் (சகரியா 14:3-4).

எடுத்துக்கொள்ளப்படுதலின் (இரகசிய வருகையின்) உபதேசம் பழைய ஏற்பாட்டில் கற்பிக்கப்படவில்லை. அதனால்தான் பவுல் இதை “இரகசியம்” என்றும் இப்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார்: “இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்” (1 கொரிந்தியர் 15:51-52).

எடுத்துக்கொள்ளப்படுதல் (இரகசிய வருகை) என்பது நாம் யாவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிற ஒரு மகிமையான சம்பவம் ஆகும். நாம் முடிவில் பாவத்திலிருந்து விடுதலையாவோம். நாம் என்றென்றைக்கும் தேவனுடைய பிரசன்னதிலிருப்போம். எடுத்துக்கொள்ளப்படுதலின் (இரகசிய வருகையின்) அர்த்தம் மற்றும் அதன் உண்மைத்தன்மையைக் குறித்து அதிகமான விவாதங்கள் உள்ளன. இது தேவனுடைய அபிப்ராயம் அல்ல. ஆனால் எடுத்துக்கொள்ளப்படுதல் என்பது பரிபூரணமான நம்பிக்கையைத் தருகிறதாயிருக்கிற ஒரு ஆறுதலின் உபதேசமாகும்; நாம் “இந்த வார்த்தைகளினாலே ஒருவரையொருவர் தேற்றவேண்டும்” என்று தேவன் விரும்புகிறார் (1 தெசலோனிக்கேயர் 4:18).

English



முகப்பு பக்கம்

சபை எடுத்துக்கொள்ளப்படுதல் என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries