கேள்வி
நான் புகைபிடிக்கும் பழக்கமுள்ள ஒரு கிறிஸ்தவன். நான் எப்படி அதிலிருந்து விடுவிக்கப்பட முடியும்?
பதில்
பல ஆண்டுகளாக கடுமையான புகைப்பிடிப்பவர்களாய் இருக்கும் பல கிறிஸ்தவர்கள் புகைபிடிப்பதை விட்டுவிட முயற்சிக்கும் எவருடைய அவலமான நிலையையும் உடனடியாக நம்மால் உணர முடியும், மேலும் புகைபிடிப்பதை நிறுத்த விரும்புபவர்கள் அனுபவிக்கும் போராட்டத்தை முழுமையாக புரிந்து கொள்ள முடியும். அப்படிப்பட்ட பழக்கத்தை விட்டு வெளியேறுவது நிச்சயமாக எளிதானது அல்ல, ஆனால் அதைச் செய்ய முடியும். ஒரு நாளைக்கு இரண்டு பாக்கெட் புகைப்பிடிப்பவர்களில் பலர் இப்போது புகைபிடிப்பதில்லை, மேலும் இந்த விஷயத்தை நாம் தேவனிடம் ஒப்படைத்து, அவருடைய பலத்தையும் சக்தியையும் நம்பும்போது அதைச் செய்ய முடியும் என்பதற்கு சான்றளிக்க முடியும்.
ஏன் புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிடுவது அனைவருக்கும் குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கு நல்லது என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒரு கிறிஸ்தவர் ஏன் புகைபிடிப்பதை விட்டுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இல்லாவிட்டால், அது பாவமாகுமா இல்லையா என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை என்றால், "புகைபிடிப்பதைப் பற்றிய கிறிஸ்தவ பார்வை என்ன? புகைபிடிப்பது பாவமா?” என்று கேள்விகளை எழுப்பி அதற்கான பதிலை கண்டறியத் தொடங்குவதற்கு ஒரு நல்ல இடமாக இருக்கும். புகைப்பிடிப்பதை விட்டுவிடலாமா வேண்டாமா என்று இன்னும் உறுதியாக தெரியாத புகைப்பிடிப்பவருக்கு இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்கள் போதுமான ஊக்கத்தை அளிக்க வேண்டும். புகைபிடிப்பதை விட்டுவிட வேண்டும் என்று தீர்மானித்தவர்கள், மனிதர்களைப் பொறுத்தவரை, புகைபிடிப்பதை நிறுத்துவது மிகவும் கடினமான ஒன்று என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நிகோடின் மிகவும் அடிமையாக்கும், ஹெராயினை விட அதிக அடிமையாக்கும் என்று ஆராய்ச்சி காண்பிக்கிறது மற்றும் சிலர் கூறுகிறார்கள்.
ஆனால் நிகோடினின் அடிமைத்தனம் நம்மை ஊக்கப்படுத்த வேண்டியதில்லை. பவுல் கூறுகிறார், "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு" (பிலிப்பியர் 4:13, NKJV). இது கடினமாக இருந்தாலும், சிகரெட்டுகளை ஒருவர் விரும்பாமல் இருப்பதற்கு முன் உள்ளதைக் காட்டிலும், முழுவதுமாக அதிலிருந்து விடுதல் பெறுவதற்கு சிறிது காலம் ஆகலாம், கிறிஸ்தவர்களாகிய நாம், நமக்கு உதவி வரும் தேவனையே நோக்கிப் பார்க்க வேண்டும். மேலே உள்ள காரியங்களில் நாங்கள் எங்கள் இருதயங்களை அமைத்து, இந்த சோதனையில் வெற்றியைப் பெறுவதற்கு கர்த்தர் நமக்கு பலத்தைத் தரும்படி ஜெபிக்கிறோம். சிலர் கெட்ட பழக்கங்களை வெல்லும் முயற்சியில் கர்த்தரை விட்டு வெளியேறுகிறார்கள், அது மிகப்பெரிய தவறு. இந்த வகையான சூழ்நிலைகளில் ஜெபம் அதிகமாக உதவுகிறது, மேலும் நமது பிரச்சினைகளை நேரடியாக தேவனுடைய சிங்காசனத்திற்கும் அவற்றை தீர்க்கக்கூடியவருக்கும் எடுத்துச் செல்ல நாம் அழைக்கப்படுகிறோம் (எபிரேயர் 4:16).
பரிசுத்த ஆவியின் வல்லமையை நம்பியிருப்பது, புகைபிடிப்பதை நிறுத்தும் மருத்துவ உதவிகளை நாம் பயன்படுத்த முடியாது என்று அர்த்தமல்ல. பலர் பேட்ச்கள், கம்கள், மாத்திரைகள் போன்றவற்றின் மூலம் பெரும் உதவியைப் பெற்றுள்ளனர். ஜெபம் மற்றும் மருத்துவருடன் கலந்தாலோசித்த பிறகு, புகைபிடிப்பதை நிறுத்துவதற்கான மருத்துவ உதவியைப் பயன்படுத்துவதைப் பற்றி தேவன் உங்களுக்கு அமைதியைத் தந்தால், உங்களால் முடியாது என்பதற்கு வேதாகமத்தில் எந்தக் காரணமும் இல்லை.
அவருடைய கிருபை போதுமானது என்று தேவன் அறிவித்தார் (2 கொரிந்தியர் 12:9). நாம் எங்கே பலவீனமாக இருக்கிறோமோ அங்கே அவர் பலமாக இருக்கிறார். நாம் வளர்ந்து கர்த்தரிடம் பலம் பெறும்போது சிகரெட் மீதான ஆசை குறையும். புகைபிடிப்பதற்கான அழுத்தத்தைத் தணிக்க தேவனுடைய வல்லமை நமக்குள் செயல்படும், அனைத்தும் அவருடைய மகிமைக்காக செயல்படுகிறதாய் இருக்கிறது. கிறிஸ்துவுக்கு முதலிடம் கொடுக்கவும், நம்மை கடைசியாகவும் வைக்க தேவன் நமக்கு பெலன் தருவார். இதில் நாம் எதை விட்டுக்கொடுக்கிறோமோ, அது நாம் பெறுவதைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என்பதை நாம் காண்போம்.
புகைபிடிப்பதை விட்டுவிட விரும்பும் கிறிஸ்தவர்களுக்கு தேவனுடைய வார்த்தையில் ஆழமாக மூழ்கி இருப்பது அவசியம். மனப்பாடம் செய்து தியானிக்க சில வசனங்கள் இங்கே உள்ளன, அநேகருக்கு புகைபிடிக்கும் மற்றும் போதைப் பழக்கத்திலிருந்து வெற்றியைப் பெற உதவிய வசனங்கள் இவை:
யோவான் 8:32, "சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்."
யோவான் 8:36, “ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.”
1 கொரிந்தியர் 6:19-20, “உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்."
எபிரேயர் 12:1-2, “ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.”
ரோமர் 13:14, "துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்."
1 கொரிந்தியர் 9:27, "மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்."
மத்தேயு 19:26, "மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும்."
யோவான் 15:5, “நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது."
எபேசியர் 4:22, "அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோடவேண்டும் என்று உங்களுக்குப் போதிக்கப்பட்டது."
பிலிப்பியர் 4:13, "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு."
English
நான் புகைபிடிக்கும் பழக்கமுள்ள ஒரு கிறிஸ்தவன். நான் எப்படி அதிலிருந்து விடுவிக்கப்பட முடியும்?