கேள்வி
வாழ்க்கையின் நோக்கத்தை எப்படிக் கண்டறிவது என்பதைக் குறித்து வேதாகமம் சொல்லுகிறது?
பதில்
வாழ்க்கையின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை பற்றி வேதாகமம் மிக தெளிவாக உள்ளது. பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாட்டு மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையின் நோக்கத்தை தேடி கண்டுபிடித்துக்கொண்டனர். எல்லோரிலும் ஞானவானாகிய சாலமோன் இம்மைக்காக வாழும் வாழ்க்கை பயனற்ற வாழ்க்கை என்று சொல்கிறார். பிரசங்கியிலே இந்த முடிவுரையை அவர் கொடுக்கிறார்: “காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்” (பிரசங்கி 12:13-14). ஒருநாள் அவருக்கு முன்பாக நியாயத்தீர்ப்புக்காக நாம் நிற்க வேண்டும் எனவே வாழ்க்கையின் பிரதான நோக்கம் தேவனை நம்முடைய நினைவுகள் மற்றும் வாழ்க்கை மூலம் மகிமைப்படுத்த வேண்டும் ஏனென்றால் அதுவே அவருடைய கற்பனைகளை கைகொள்வது ஆகும்.
நம்முடைய வாழ்க்கையின் மற்றொரு நோக்கம் இந்த வாழ்க்கையை இப்பூமியில் ஜீவிக்கிறோம் என்ற கண்ணோட்டம் நமக்கு இருக்க வேண்டும். இந்த வாழ்க்கையின் மீது கவனம் வைத்தவர்களைப் போலல்லாமல் தாவீது தனது சந்தோஷத்தை வரவிருக்கிற காலத்தில் எதிர்பார்த்தான். “நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்; நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்” என்று தாவீது சொன்னான் (சங்கீதம் 17:15). அவன் விழித்து (மரித்து உயிர்க்கும் போது) அவருடைய முகத்தை தரிசிக்கும் (அவரோடு ஜக்கியம்) மற்றும் அவருடைய சாயலால் மாறும் அந்நாளில் தான் தாவீதுக்கு முழுமையான சந்தோஷம் கிடைக்கும் (1யோவான் 3:2).
சங்கீதம் 73ல் அக்கரையில்லாது பிறரைப் பயன்படுத்தி அவர்களின் மீது தங்களின் எதிர்காலத்தை கட்டுகிற துன்மார்க்கரை குறித்து பொறாமை பட ஆசாப் எப்படி தூண்டப்பட்டார் என்பதையும் அவர்களுடைய இறுதி முடிவை கவனித்து உணர்ந்தேன் என்றும் கூருகிறார். அவர்களுடைய எதிர்பார்ப்புக்கு முரணாக வசனம் 25-ல் தனக்கு எது முக்கியம் என்று அவர் கூறுகிறார்: “பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.” இந்த வாழ்க்கையிலே தேவனோடு உள்ள உறவே ஆசாவுக்கு மேலானது. இந்த உறவை தவிர வேறோரு உண்மையான நோக்கம் இந்த வாழ்க்கைக்கு இல்லை.
அப்போஸ்தலனாகிய பவுல் உயிர்தெழுந்த கிறிஸ்துவுக்கு முன் அவர் பெற்ற அனைத்தையும் கிறிஸ்துவை அறிகிற அறிவுக்காக நஷ்டமென்றும் குப்பையுமாக எண்ணுகிறேன் என்கிறார். கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும், அவரையும் அவருடைய உயிர்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்க்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்க்குத் தகுதியாவதே பவுலின் நோக்கம் என்று பிலிப்பியர் 3:9-10ல் வாசிக்கிறோம். பவுலின் நோக்கம் கிறிஸ்துவை அறிவது, அவரை விசுவாசிப்பதன் மூலம் நீதிமானாக இருப்பது, அவரோடு ஐக்கியமாக இருப்பது, அவருக்காக பாடுபடுவது (2 தீமோத்தேயு 3:12). இறுதியாக, அவர் எப்பொழுதும் மரித்தோரிலிருந்து உயிர்தெழுந்தவர்களோடு பங்குள்ளவனாக இருப்பார் என்பதை அவர் எதிர்நோக்கி இருந்தார்.
தேவன் படைத்த மனிதனுடைய நோக்கத்தை போலவே நம்முடைய வாழ்க்கையின் நோக்கமானது: 1) தேவனை மகிமைப்படுத்தி அவருடடைய ஐக்கியத்தில் மகிழ்ந்திருத்தல், 2) பிறரோடு கூட நல்ல உறவை வைத்திருத்தல் 3) வேலை செய்தல் மற்றும் 4) பூமியை ஆளுகைச்செய்தல். ஆனால் மனிதன் பாவத்தில் விழுந்த பின் தேவனோடு உண்டாயிருந்த தனது ஐக்கியத்தை இழந்தான், மற்றவர்களோடு உள்ள உறவு பலவீனப்பட்டது, வேலை செய்வது எப்பொழுதும் வெறுப்பாகவே தொன்றுகிறது, இயற்கையை ஆளுகை செய்முடியாமல் தடுமாற்றம் அடைந்தான். இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பது மூலம் தேவனிடத்தில் ஐக்கியத்தை பலப்படுத்தினால் மட்டுமே வாழ்க்கையின் நோக்கத்தை திரும்ப கண்டுகொள்ள முடியும்.
தேவனை மகிமைப்படுத்துவதும் அவருடைய ஐக்கியத்தில் என்றென்றுமாய் மகிழ்ந்திருப்பதுமே மனிதனுடைய நோக்கம் ஆகும். அவருக்கு பயப்படுதல், கீழ்படிதல், கண்களை எதிர்கால வீடாகிய பரலோகத்திற்கு நேராக பதித்தல் மற்றும் அவரை நெருக்கமாக அறிந்துகொள்ளுதல் மூலம் நாம் தேவனை மகிமைபடுத்தலாம். நாம் தேவன் நமக்காக வைத்திருக்கும் நோக்கத்தை பின்பற்றுகிறபோது தேவனில் மகிழ்ந்திருக்க முடியும். அது நம்மை உண்மையான மற்றும் நித்தியமான சந்தோஷமாகிய தேவன் விரும்புகிற அந்த நிறைவான வாழ்க்கையை அனுபவிக்க நம்மை தகுதிபடுத்தும்.
English
வாழ்க்கையின் நோக்கத்தை எப்படிக் கண்டறிவது என்பதைக் குறித்து வேதாகமம் சொல்லுகிறது?