கடைசி காலத்தை குறித்து பிரிடேரிசத்தின் கருத்து என்ன?


கேள்வி: கடைசி காலத்தை குறித்து பிரிடேரிசத்தின் கருத்து என்ன?

பதில்:
பிரிடேரிசத்தின் அடிப்படையில் வேதாகமத்தில் உள்ள எல்லா தீர்க்கதரிசனமும் வரலாறு ஆகும். பிரிடேரிசம் வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள வசனங்கள் முதல் நூற்றாண்டு மோதல்களின் அடையாள சித்திரமேயல்லாமல் இது கடைசி நாட்களில் என்ன நடக்கும் என்பதன் விளக்கம் அல்ல என்று வியாக்கியானம் செய்கின்றனர். பிரிடேரிசம் (தேவனின் வெளிப்பாடு நிறைவேறிவிட்டது என்று நம்பும் கோட்பாடு) என்கிற பதமானது லத்தின் வார்த்தை பிரடேரில் இருந்து வந்தது ஆகும் இதற்கு “கடந்த” என்று அர்த்தமாகும். எனவே பிரிடேரிசத்தின் கருத்தின் படி கடைசி நாட்களை குறித்த வேதாகமத்தில் தீர்க்கதரிசனங்கள் எல்லாம் கடந்த காலத்தில் ஏற்கனவே நியைவேறிவிட்டன என்பதே பிரிடேரிசத்தின் கருத்து ஆகும். கடைசி கால தீர்க்கதரிசனங்கள் இன்னும் எதிர் காலத்தில் நிறைவேறும் என்ற கருத்தை உடைய ஃப்யூச்சரிசத்திற்கு பிரிடேரிசம் நேர்மறையாக எதிரானது ஆகும்.

பிரிடேரிசம் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. முழுமையான (அல்லது சீரான) பிரிடேரிசம் மற்றும் பகுதியான பிரிடேரிசம். இந்த கட்டுரையில் முழுமையான பிரிடேரிசம் பற்றி (சிலர் சொல்வது போல் உயர்- பிரிடேரிசம்) மட்டுமே கலந்துரையாடப்படுகிறது.

வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் எதிர்கால தீர்க்கதரிசன தன்மையை பிரிடேரிசம் மறுக்கிறது. புதிய ஏற்பாட்டின் எல்லா கடைசி கால தீர்க்கதரிசனங்களும் கிறிஸ்துவின் யுனு 70 ல் ரோமர்கள் nஐருசலேமை தாக்கி அழித்த போதே நிறைவேறிவிட்டன என்று பிரிடேரியர்கள் குறிப்பாக போதிக்கின்றனர். கிறிஸ்துவின் இரண்டாம் வருகை, உபத்திரவம், மரித்தவர்களின் உயிர்த்தெழுதல் கடைசி நியாயத்தீர்ப்பு ஆகிய கடைசி காலத்தோடு தெடர்புடைய எல்லா நிகழ்வுகளும் ஏற்கனவே நிறைவேறிவிட்டன என்று பிரிடேரிசம் போதிக்கிறது. (கடைசி நியாயத்தீர்ப்பு இன்னும் நிறைவேறும் செயல்பாட்டிலுள்ளது). நிறைவேறிய இயேசுகிறிஸ்துவின் வருகை ஆவிக்குரிய வருகையாகும் மாம்சத்தில் அவர் வரவில்லை.

நியாயப்பிரமாணம் யுனு 70 ல் நிறைவேறிவிட்டது மற்றும் இஸ்ரவேலரோடு தேவனுடைய உடன்படிக்கையும் முடிந்துவிட்டது என்று பிரிடேரிசம் போதிக்கிறது. வெளிப்படுத்தின விசேஷம் 21:1ல் சொல்லப்பட்;ட புதிய வானம் மற்றும் புதிய பூமி புதிய உடன்படிக்கையின் கீழ் உள்ள உலகத்தை விளக்குகிறது என்பது பிரிடேரிசத்தின் கருத்து. கிறிஸ்தவர்கள் புதுசிருஷ்டியாயிருப்பது போல (2கொரிந்தியர் 5:17) புதிய உடன்படிக்கையின் கீழ்லுள்ளதும் “புதிய பூமியே.” பிரிடேரிசத்தின் இந்த அம்சம் எளிதாக மாற்று இறையியல் விசுவாசத்திற்கு வழிநடுத்துகிறது.

பிரிடேரிசத்தில் இயேசுவின் ஒலிவமலை உரையாடல் வேதப்பகுதியை தங்களின் வாதத்தை ஊக்குவிக்க பிரிடேரியர்கள் பயன்படுத்துகின்றனர். கடைசி காலத்தில் நிறைவேறுகிற சில காரியங்களை இயேசு விளக்கின பின்பு, “இவைகளெல்லம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்” என்று அவர் கூறி;னார் (மத்தேயு 24:34). இதனை பிடித்துக்கொண்டு பிரிடேரியன்கள் மத்தேயு 24 இயேசு பேசிய எல்;லாக்காரியங்களும் அவர் பேசிய ஒரு தலைமுறையினருக்குள்ளேயே நடந்திருக்கவேண்டும் எனவே யுனு 70 ல் எருசலேமுக்கு ஏற்பட்ட அழிவே நியாயத்தீர்ப்பு நாளாகும் என்று வலியுறுத்துகின்றனர்.

பிரிடேரிசத்தோடு அநேக பிரச்சனைகள் உள்ளன. ஒரு காரியம் இஸ்ரவேலரோடு தேவனுடைய உடன்படிக்கை நிரந்தரமானது (எரேமியா 31:33-36), மற்றும் இஸ்ரவேலரை தேவன் எதிர்காலத்தில் திரும்பவும் கூட்டிசேர்ப்பார் (ஏசாயா 11:12). “உயிர்த்தெழுதல் நடந்தாயிற்றென்று சொல்லி சிலருடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப்போட்ட கள்ள போதகரான இமெநே மற்றும் பிலேத்து” ஆகிய இருவரையும் அப்போஸ்தலர் பவுல் எச்சரித்தார் (2 தீமோத்தேயு 2:17-18). இந்த சந்ததி என்று இயேசுகிறிஸ்து குறிப்பிட்டதை இந்த சந்ததி மத்தேயு 24ல் சொல்லப்பட்ட நிகழ்வுகளின் ஆரம்பத்தை பார்க்கும் படியாக உருரோடிருக்கும் என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கடைசி நாட்களை குறித்த இறையியல் போதனை மிக சிக்கலானது ஆகும். தீர்கதரிசனத்தோடு தொடர்புடைய வேதாகமத்தின் பயன்பாடாகிய அப்போகலிப்டிக் உருவகஅணி கடைசி காலத்தை குறித்த நிகழ்வுகளை பற்றிய பலவிதமான வியாக்கியானங்களுக்கு வழிநடத்துகிறது. கிறிஸ்தவத்திற்குள்ளாக இதை குறித்த கருத்து வேறுபாடு காணப்படுகிறது. எனவே பிரிடேரிசம் சில முக்கியமான தவறுகளை கொண்டுள்ளது அதாவது இது இயேசுகிறிஸ்துவின் மாம்சத்தில் வெளிப்படும் இரண்டாம் வருகையை மறுக்கிறது மற்றும் எருசலேமின் வீழ்ச்சியின் நிகழ்வை குறிப்பிடுவதன் மூலம் பாடுகள் நிறைந்த உபத்திரவத்தின் தன்மையை மட்டுப்படுத்துகின்றனர்.

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
கடைசி காலத்தை குறித்து பிரிடேரிசத்தின் கருத்து என்ன?