திருமணத்திற்கு நான் எப்படி ஆயத்தமாக முடியும்?


கேள்வி: திருமணத்திற்கு நான் எப்படி ஆயத்தமாக முடியும்?

பதில்:
வாழ்கையில் எந்த ஒரு முயற்சி எடுக்கும் முன் நாம் ஆயத்தப்படுவது போலவே திருமணத்திற்காகவும் நாம் ஆயத்தப்பட வேண்டியது அவசியம். மறுபடியும் பிறந்த ஒவ்வொறு விசுவாசியின் எல்லா அம்சங்களிலும் காணப்படவேண்டிய கோட்பாடு என்னவென்றால், “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக” (மத்தேயு 22:37). இது ஒரு சாதாரணமான கட்டளை அல்ல. இது எல்லா விசுவாசிகளின் வாழ்கையிலும் முக்கியமான ஒன்று. நாம் முழு உள்ளத்தோடு தேவனுக்கும் அவர் வார்த்தைக்கும் கவனம் செலுத்தி, அவரை பிரியப்படுத்தும் காரியங்களால் நம் ஆத்துமாவையும் மனதையும் நிறைக்கும்படி முடிவெடக்க வேன்டும்.

நமக்கும் தேவனுக்கும் உள்ள உறவு தான் மற்ற எல்லா உறவின் அர்த்ததையும் புரிந்து வாழ உதவி செய்யும். திருமண உறவு என்பது கிறிஸ்து மற்றும் சபையின் உறவின் மாதிரியை அடிபடையாக கொண்டுள்ளது (எபேசியர் 5:22-33). விசுவாசிகளான நம் வாழ்கையின் எல்லா அம்சங்களும் தேவனின் கற்பனை மற்றும் அவர் கட்டளைகளின்படி வாழ நம்மை அர்ப்பணித்ததின் அடிப்படையில் தான் உள்ளது. நாம் தேவனுக்கும் அவர் வார்த்தைக்கும் கீழ்ப்படிவது, திருமண வாழ்வில் தேவன் நமக்கு தந்திருக்கும் பொறுப்புகளை நிறைவேற்றும்படி நம்மை சீர்ப்பொருந்த செய்கிறது. மறுபடியும் பிறந்த ஒவ்வொரு விசுவாசியும் அவர்கள் செய்யும் எல்லாவற்றிலேயும் தேவனை மகிமைப்படுத்த வேண்டும் (1 கொரிந்தியர் 10:31).

நீங்கள் திருமணத்திற்கு உங்களை ஆயத்தம் பண்ணவும், கிறிஸ்துவின் அழைபிற்கு பாத்திரவான்களாக நடக்கவும், தேவ வார்த்தையின் மூலம் அவரோடு நெருங்கிய ஐக்கியம் கொள்ளவும் (2 தீமோத்தேயு 3:16-17), எல்லாவற்றிலேயும் அவருக்கு கீழ்ப்படிய கவனம் செலுத்த வேண்டும். தேவனுக்கு கீழ்ப்படிந்து நடக்க சுலபமான வழி வேறு ஒன்றும் இல்லை. ஒவ்வொரு நாளும் நாம் உலக கண்ணொட்டங்களை அகற்றி, தேவனுக்கு கீழ்ப்படிய தீர்மானிக்க வேண்டும். கிறிஸ்து நம்மை அழைத்த அழைப்பிற்கு பாத்திரமாக நடக்கவேண்டுமானால், ஒரே வழியும், ஒரே சத்தியமும், ஒரே ஜீவனுமாகிய அவருக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமும் தாழ்மையோடு அர்ப்பனிக்க வேண்டும். இதுவே எல்லா விசுவாசிகளும் திருமணத்திற்க்கு செய்ய வேண்டிய மக்கியமான ஆயத்தமாகும்.

ஒருவர் ஆவிக்குரிய வாழ்கையில் முதிர்ச்சி அடைந்தவரானால் மற்றும் அவர் தேவனோடு நடப்பவரானால், அவர் மற்ற எல்லாரையும் விட அதிகமாக திருமணத்திற்க்கு ஆயத்தமாகப்பட்டவர். திருமண வாழ்க்கையில் அர்ப்பணிப்பு, உற்சாகம், தாழ்மை, அன்பு, மற்றும் மரியாதை மிகவும் அவசியம். தெவனொடு நெருங்கிய உறவு இருப்பவர்களிடம் இவை எல்லாம் வெளிப்படும். நீங்கள் திருமணத்திற்கு ஆயத்தமாகும்போது, தேவன் விரும்பும் மனிதனாக அல்லது பெண்ணாக உங்களை தேவன் உருவாக்கும்படி அதில் கவனம் செலுத்துங்கள் (ரோமர் 12:1-2). நீங்கள் அவருக்கு அர்ப்பணித்தால், அந்த ஆச்சரியமான நாள் நெருங்கும்போது அவர் உங்களை திருமணத்திற்கென்று ஆயத்தமாக உதவி செய்வார்.

English
தமிழ் முதற் பக்கத்திற்குச் செல்க
திருமணத்திற்கு நான் எப்படி ஆயத்தமாக முடியும்?