settings icon
share icon
கேள்வி

வேண்டுதலின் ஜெபம் என்றால் என்ன?

பதில்


நாம் பல்வேறு காரணங்களுக்காக ஜெபத்தில் தேவனிடம் வருகிறோம்—அவரை ஆராதிப்பதற்கும், நம்முடைய பாவங்களை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்பதற்கும், அவருடைய ஆசீர்வாதங்களுக்காக அவருக்கு நன்றி செலுத்துவதற்கும், நமக்காக அநேக காரியங்களைக் கேட்பதற்கும் மற்றும் / அல்லது மற்றவர்களுடைய தேவைகளுக்காக ஜெபிப்பதற்கும் நாம் அவரிடம் வருகிறோம். எபிரேய மற்றும் கிரேக்க வார்த்தைகள் பெரும்பாலும் வேதாகமத்தில் "வேண்டுதல்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, அதாவது "ஒரு வேண்டுகோள் அல்லது விண்ணப்பம்", எனவே வேண்டுதலின் ஒரு ஜெபம் என்பது தேவனிடம் ஏதாவது கேட்கிறது ஆகும். மற்றவர்களின் சார்பாக ஜெபிக்கும் வேண்டுதலின் ஜெபத்தைப் போலல்லாமல், வேண்டுதலின் ஜெபம் பொதுவாக ஜெபிக்கும் நபருக்கான விண்ணப்பமாகும்.

வேதாகமத்தில் பல வேண்டுதலின் ஜெபங்கள் உள்ளன. உதாரணமாக, சங்கீதங்களில் ஏராளமான உதாரணங்கள் காணப்படுகின்றன. தாவீதின் சங்கீதங்கள், சங்கீதம் 4:1-ல் இரக்கத்திற்காகவும், சங்கீதம் 5:8-ல் வழிநடத்துவதற்காகவும், சங்கீதம் 6:4-ல் விடுதலைக்காகவும், சங்கீதம் 7:1-ல் உபத்திரவத்திலிருந்து இரட்சிப்புக்காகவும், மற்றும் பலவற்றால் நிரம்பியுள்ளன. ராஜாவைத் தவிர வேறு எந்த தேவனிடமும் ஜெபம் செய்யக்கூடாது என்று தரியு ராஜா கட்டளையிட்டான் என்பதை தானியேல் அறிந்ததும், தானியேல் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தேவனுக்கு நன்றி செலுத்தும் ஜெபங்களுடனும் வேண்டுதலின் ஜெபங்களுடனும் தொடர்ந்து ஜெபித்தார்.

புதிய ஏற்பாட்டில், மத்தேயு 6:11 இல் நமது அனுதின ஆகாரத்தைக் கேட்கும்படி இயேசு கூறுகிறார், இது வேண்டுதலின் ஜெபத்தினுடைய வகைக்குள் வருகிறது. கூடுதலாக, லூக்கா 18:1-8 இல், சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து இயேசு கற்பிக்கிறார். இருப்பினும், யாக்கோபின் நிருபத்தில், நாம் ஒரு சமநிலையைக் காண்கிறோம்: ஒருபுறம் நாம் கேட்காததால் நாம் பெறுவதில்லை (யாக்கோபு 4:2). மறுபுறம், நாம் கேட்கிறோம் மற்றும் பெறுவதில்லை, ஏனென்றால் நாம் நமது மாம்ச இச்சைகளை மட்டுமே நிறைவேற்ற நினைக்கிறோம் (யாக்கோபு 4:3). வேண்டுதல்களை அணுகுவதற்கான சிறந்த வழி, பிள்ளைகளாகிய தங்கள் அன்பான தந்தையுடன் பேசும் போது தேவனிடம் நேர்மையாகக் கேட்பது, ஆனால் "உமது சித்தம் செய்யப்படுவதாக" (மத்தேயு 26:39) என்று முடிவடைய வேண்டும்ம், அவருடைய சித்தத்திற்கு முழுமையாக சரணடைய வேண்டும்.

"தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும்" (எபேசியர் 6:13-17) எடுத்துக்கொள்வதன் அவசியத்தை விவரித்த பிறகு, அப்போஸ்தலனாகிய பவுல் எபேசியர்களை (நம்மை) “எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்” என்று அறிவுறுத்தினார் (எபேசியர் 6:18). எல்லா கிறிஸ்தவர்களும் ஈடுபடும் ஆவிக்குரியப் போராட்டத்தின் ஒரு பகுதியாக வேண்டுதலின் ஜெபங்கள் உள்ளன என்பது தெளிவாகிறது. ஜெபத்தில் உண்மையாக இருப்பதன் மூலம் பிலிப்பியருடைய திருச்சபையின் கவலைகளைப் போக்குமாறு பவுல் மேலும் அறிவுறுத்துகிறார், குறிப்பாக நன்றி செலுத்துதல் மற்றும் வேண்டுதலின் ஜெபம். இதுவே, "எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்" (பிலிப்பியர் 4:6-7) என்பதை உறுதிப்படுத்துவதற்கான சூத்திரம் என்று அவர் முடிக்கிறார்.

வேண்டுதலின் ஜெபத்தினுடைய மற்றொரு முக்கியமான அம்சத்தை நாம் இங்கே காண்கிறோம் — கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தினுடைய அவசியம். கிறிஸ்துவைச் சேர்ந்தவர்களும் நம் சார்பாகப் பரிந்துபேசுகிற பரிசுத்த ஆவியானவரைக் கொண்டிருக்கிறார்கள். நாம் தேவனை அணுகும்போது என்ன அல்லது எப்படி ஜெபிக்க வேண்டும் என்று அடிக்கடி தெரியாததால், ஆவியானவர் நமக்காக பரிந்து பேசுகிறார், நம்முடைய வேண்டுதல்களை விளக்குகிறார், அதனால், சோதனைகள் மற்றும் வாழ்க்கையின் கவலைகளால் நாம் மூழ்கும்போது, அவர் நமக்கு உதவி செய்ய வருவார். அவர் கிருபையின் சிங்காசனத்திற்கு முன்பாக நம்மைத் தாங்கி நிற்பதால் நம்முடைய ஜெபங்கள் ஏறெடுக்கப்படுகின்றன (ரோமர் 8:26).

English



முகப்பு பக்கம்

வேண்டுதலின் ஜெபம் என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries