settings icon
share icon
கேள்வி

இடைவிடாமல் ஜெபம் செய்தல் என்பதன் அர்த்தம் என்ன?

பதில்


1 தெசலோனிக்கேயர் 5:17-ல் உள்ள “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்” என்கிறதான பவுலின் கட்டளை குழப்பத்தை ஏற்படுத்தும். வெளிப்படையாக, நாம் நாள் முழுவதும் தலை குனிந்த, கண்கள் மூடிய தோரணையில் இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. பவுல் இடைவிடாது பேசுதலைக் குறிக்கவில்லை, மாறாக தேவனோடு அவரது சமூகத்தில் இருக்கிறதான உள்ளுணர்வு மற்றும் தேவனுக்கு சரணடைதல் ஆகியவற்றின் அணுகுமுறையே நாம் எப்போதும் நம்முடன் எடுத்துச் செல்கிறோம். ஒவ்வொரு விழித்திருக்கும் தருணமும் தேவன் நம்முடன் இருக்கிறார் என்பதையும், அவர் நம் எண்ணங்களிலும் செயல்களிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்பதிலும் விழிப்புணர்வுடன் வாழ வேண்டும்.

நம் எண்ணங்கள் கவலை, பயம், ஊக்கமின்மை மற்றும் கோபமாக மாறும்போது, ஒவ்வொரு சிந்தனையையும் நாம் பிரார்த்தனையாகவும், ஒவ்வொரு ஜெபத்தையும் நன்றியுணர்வாகவும் மாற்ற வேண்டும். பிலிப்பியருக்கு எழுதிய நிருபத்தில், கவலைப்படுவதை நிறுத்தும்படி பவுல் நமக்குக் கட்டளையிடுகிறார், அதற்கு பதிலாக, “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” (பிலிப்பியர் 4:6). கொலோசேயில் உள்ள விசுவாசிகளுக்கு "இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்" என அவர் கற்பித்தார் (கொலோசெயர் 4:2). ஆன்மீகப் போர்களை எதிர்த்துப் போராடுவதற்கு ஜெபத்தை ஒரு ஆயுதமாகப் பார்க்கும்படி எபேசு சபை விசுவாசிகளுக்கு பவுல் அறிவுறுத்தினார் (எபேசியர் 6:18). நாம் நாள் முழுவதும் செல்லும்போது, பயமுறுத்தும் ஒவ்வொரு சூழ்நிலைக்கும், ஒவ்வொரு கவலையான சிந்தனைக்கும், தேவன் கட்டளையிடும் ஒவ்வொரு விரும்பத்தகாத பணிக்கும் ஜெபம் நமது முதல் பதிலாக இருக்க வேண்டும். ஜெபத்தின் பற்றாக்குறை தேவனின் கிருபையைப் பொறுத்து நம்மைச் சார்ந்து இருக்க நம்மை ஏற்படுத்தும். இடைவிடாத ஜெபம், சாராம்சத்தில், தொடர்ந்து தங்கியிருத்தல் மற்றும் பிதாவுடனான ஒற்றுமையைக் காண்பிக்கிறதாக இருக்கிறது.

கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை, ஜெபம் சுவாசம் போல இருக்க வேண்டும். வளிமண்டலம் உங்கள் நுரையீரலில் அழுத்தம் கொடுப்பதால் நீங்கள் சுவாசிக்க யோசிக்க வேண்டியதில்லை. அதனால்தான் சுவாசிப்பதை விட உங்கள் சுவாசத்தை பிடிப்பது மிகவும் கடினம். இதேபோல், நாம் தேவனின் குடும்பத்தில் பிறக்கும்போது, தேவனின் பிரசன்னமும் கிருபையும் நம் வாழ்வில் அழுத்தம் அல்லது செல்வாக்கை செலுத்தும் ஒரு ஆவிக்குரிய சூழ்நிலையில் நுழைகிறோம். ஜெபம் என்பது அந்த அழுத்தத்திற்கு ஒரு இயல்பான பதில் ஆகும். விசுவாசிகளாகிய நாம் அனைவரும் ஜெபத்தின் காற்றை சுவாசிக்க தெய்வீக வளிமண்டலத்தில் நுழைந்துள்ளோம்.

துரதிர்ஷ்டவசமாக, பல விசுவாசிகள் தங்களது “ஆவிக்குரிய சுவாசத்தை” நீண்ட காலமாக வைத்திருக்கிறார்கள், தேவனோடு சுருக்கமான தருணங்களை நினைத்து அவர்கள் உயிர்வாழ அனுமதிக்கிறார்கள். ஆனால் அவர்களின் ஆவிக்குரிய உட்கொள்ளலை கட்டுப்படுத்துவது பாவ ஆசைகளால் ஏற்படுகிறது. உண்மை என்னவென்றால், ஒவ்வொரு விசுவாசியும் தொடர்ந்து தேவனின் முன்னிலையில் இருக்க வேண்டும், தொடர்ந்து அவருடைய சத்தியங்களை சுவாசிக்க வேண்டும், முழுமையாக செயல்பட வேண்டும்.

தேவனின் கிருபையைப் பொறுத்து – மற்றவைகளை சார்ந்திருப்பதற்கு பதிலாக - கிறிஸ்தவர்கள் பாதுகாப்பாக உணர எளிதான வழியுண்டாகும். பல விசுவாசிகள் சரீரப்பிரகாரமான ஆசீர்வாதங்களில் திருப்தி அடைகிறார்கள், ஆவிக்குரிய ஆசிர்வாதங்களிடம் கொஞ்சம் மட்டும் திருப்தி/ஆசைப்படுகிறார்கள். திட்டங்கள், முறைகள் மற்றும் பணம் ஆகியவை சுவாரஸ்யமான முடிவுகளைத் தரும்போது, மனித வெற்றியை தெய்வீக ஆசீர்வாதத்துடன் குழப்ப ஒரு சாய்வு இருக்கிறது. அது நிகழும்போது, தேவன்மீது மிகுந்த ஏக்கமும், அவருடைய உதவிக்காக ஏங்குவதும் காணாமல் போகும். தொடர்ச்சியான நிலையில், தொடர்ச்சியான ஏக்கத்தோடு, இடைவிடாத ஜெபம் கிறிஸ்தவ வாழ்வின் இன்றியமையாத பகுதியாகும், மேலும் மனத்தாழ்மை மற்றும் தேவனைச் சார்ந்திருப்பதிலிருந்து வெளிப்படுகிறது.

English



முகப்பு பக்கம்

இடைவிடாமல் ஜெபம் செய்தல் என்பதன் அர்த்தம் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries